தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Vidyasagar: 'மெலோடி கிங்' வித்யாசாகரின் பிறந்த நாள் இன்று!

HBD Vidyasagar: 'மெலோடி கிங்' வித்யாசாகரின் பிறந்த நாள் இன்று!

Manigandan K T HT Tamil
Mar 02, 2023 06:13 AM IST

Music Director Vidyasagar: தூள், கில்லி, கர்ணா, ஜெய்ஹிந்த், அன்பே சிவம், சந்திரமுகி, திருமலை, மொழி உள்ளிட்ட பல படங்களில் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார் வித்யாசாகர்.

இசையமைப்பாளர் வித்யாசாகர்
இசையமைப்பாளர் வித்யாசாகர்

ட்ரெண்டிங் செய்திகள்

தூள், கில்லி, கர்ணா, ஜெய்ஹிந்த், அன்பே சிவம், சந்திரமுகி, திருமலை, மொழி உள்ளிட்ட பல படங்களில் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார் வித்யாசாகர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களில் அதிக எண்ணிக்கையில் பணிபுரிந்திருக்கிறார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயநகரத்தில் 1963ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி பிறந்தார்.

59 வயதாகும் அவர், பல சூப்பர் ஹிட் மெலோடி பாடல்களை கொடுத்துள்ளார்.

கில்லி படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் பட்டித்தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பின.

தூள் படத்தில் இடம்பெற்ற ஆசை ஆசை இப்போது, கர்ணா படத்தில் இடம்பெற்ற மலரே மவுனமா போன்ற பாடல்களெல்லாம் எவர்க்ரீன் ஹிட்ஸாக ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தவை ஆகும்.

மொழி, அபியும் நானும் ஆகிய படங்களில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களுமே செவியில் தேனாய் பாயும்.

மொழி படத்தில் ஒரு காட்சி
மொழி படத்தில் ஒரு காட்சி

மெலோடி கிங் வித்யாசாகருக்கு ரசிகர்கள் சார்பிலும், ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பிலும் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

நீங்கள் மேலும் பல மெலோடி பாடல்களை கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமும் கூட!

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்