Ravi Maria: அது நான் இல்ல, நம்பாதீங்க - ரவி மரியா புகார்!
நடிகர் ரவி மரியா தன் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் தொடங்கி பண மோசடி செய்வதாக புகார் அளித்துள்ளார்.
பிரபலங்களில் பெயர்களை மற்றும் அவர்களின் புகைப்படங்களை வைத்து பல்வேறு மோசடிகள் இப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் ரவி மரியா பெயர் மற்றும் புகைப்படத்துடன் சிலர் போலி கணக்கு தொடங்கி உள்ளனர்.
இதனையடுத்து அந்த போலி கணக்கு மூலமாக சமூக வலைதளங்களில் அவர் பெயரை பயண்படுத்தி, பணம்பறிக்க ஒரு கும்பல் இறங்கி உள்ளது.
இது நடிகர் ரவி மரியாவிற்கு தெரியவர அவர் உடனே சென்னையில் உள்ள காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்து உள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், ”எனது இன்ஸ்டாகிராம் ஐடி போன்று போலியாக ஐடி உருவாக்கி மர்ம நபர் ஒருவர் நான் பணம் கேட்பது போன்று பல நண்பர்களிடம் பணம் கேட்டுள்ளார்.
என் ஒரு நண்பர் 1 ரூபாய் போட்டு இருக்கிறார். அதே போல் மற்றோறு நபர் 7 ஆயிரம் ரூபாய் அனுப்பிவிட்டு என்னை அழைத்து சொன்னார். அதனால் புகார் அளித்தேன். ரொம்ப வேதனையாக இருக்கு. ஆன்லைனில் மோசடி செய்வது தவறானது.
ஏழை, எளிய மக்கள் இதே போல் ஏமாந்து போகிறார்கள். ஆன்லைன் விற்பனையில் நிறைய மோசடி நடக்கிறது. எந்த லிங் வந்தாலும் அதை ஓப்பன் செய்ய வேண்டாம்.
வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் இது போன்று திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள். இனிமேல் யாரும் ஏமாற வேண்டாம்.
தயவு செய்து என்னுடைய போலி கணக்கை பயன்படுத்தி யாராவது பணம் கேட்டால் தயவு செய்து கொடுக்காதீர்கள். என் பெயர் சொல்லி பணம் கேட்டால், நம்ப வேண்டாம். நான் யாரிடமும் பணம் கேட்டது இல்லை.
இதை வைத்து படம் இயக்கலாம் என நினைத்து இருக்கிறேன். எழை மக்கள் எவ்வாறு பாதிப்படைக்கின்றனர் என அதில் காட்ட வேண்டும்” என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்