Radhika Apte advice: உறவில் மூன்றாவது நபரை அனுமதிக்க வேண்டாம் - ராதிகா ஆப்தே
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Radhika Apte Advice: உறவில் மூன்றாவது நபரை அனுமதிக்க வேண்டாம் - ராதிகா ஆப்தே

Radhika Apte advice: உறவில் மூன்றாவது நபரை அனுமதிக்க வேண்டாம் - ராதிகா ஆப்தே

Aarthi V HT Tamil Published Nov 04, 2022 12:05 PM IST
Aarthi V HT Tamil
Published Nov 04, 2022 12:05 PM IST

கணவர், மனைவி நடுவில் மூன்றாவது நபரை அனுமதிக்க வேண்டாம் என ராதிகா ஆப்தே அறிவுரை வழங்கி உள்ளார்.

ராதிகா ஆப்தே
ராதிகா ஆப்தே

ஒரு செய்தி இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், "நானும் எனது கணவர் பெனடிக்ட்டும் எங்களுக்கு பிடித்த மாதிரி இருந்து கொண்டே எங்கள் உலகத்தில் சுதந்திரமாகவும், அற்புதமான வாழ்க்கையையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். 

கணவன், மனைவி, காதலன், காதலி இருவருக்கும் இடையே ஏதாவது சண்டை சச்சரவு ஏற்பட்டால் மூன்றாம் மனிதரின் ஆலோசனையை கேட்கக் கூடாது. அது மிகவும் ஆபத்தானது. 

நமக்கிற்குள் மூன்றாம் மனிதர் ஒருவரை நாம் எப்போது வரவேற்கிறோமோ அப்போதே உங்கள் உறவில் விரிசல் ஆரம்பமாகிவிட்டது என்றே சொல்லலாம்.

நம் கணவரை நம்மை விட யாரும் நன்றாக புரிந்து இருக்க முடியாது. அப்படி இருக்கும்போது நமது வாழ்க்கையில் நமது பிரச்னையை எப்படி தீர்த்து கொள்ள வேண்டும் என்பது நமக்கு மட்டுமே தெரியும்.

அதில் மூன்றாம் மனிதர் நுழைந்து பஞ்சாயத்து செய்தால் அந்த உறவு மெல்ல மெல்ல பிரிவை நோக்கி தான் செல்லும்” என்றார்.