GP Muthu: ’விஜய் அரசியல் இயக்கத்தில் இணைகிறேனா?’ ஜிபி முத்து பரபரப்பு பதில்!
முதல் படத்தில் சன்னிலியோன் உடனும் இரண்டாவது படத்தில் ஷிவானி நாராயணுடன் நடித்தது எப்படி உள்ளது என்ற கேள்விக்கு காட்டிலும், மேட்டிலும் நண்பர்களே என்று வீடியோ போட்ட ஆள் நான், என்னை தூக்கிவிட்டது அதுதான் அதனை நான் எப்போதும் மறக்கமாட்டேன் என பதில்
டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது பேசிய அவர், பம்பர் படத்தில் முழுநேர கதாப்பாத்திரமாக நடித்துள்ளேன். பம்பர் படத்தில் நடிக்க செல்வக்குமார் அண்ணன் நிறைய ஊக்கம் கொடுத்தார். தூத்துக்குடி கடற்கரையில் நடந்த படப்பிடிப்பின்போது வெயில் காரணமாக ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்தார்கள். பணம் முக்கியமில்லை, பாசம்தான் முக்கியம் என்பதை இந்த படம் உணர்த்தும் என்றார்.
மேலும் இந்த படத்தில் நான் ’துப்பாக்கி பாண்டியன்’ என்ற பெயரில் நடித்துள்ளேன். முதல் படத்தில் சன்னிலியோன் உடனும் இரண்டாவது படத்தில் ஷிவானி நாராயணுடன் நடித்தது எப்படி உள்ளது என்ற கேள்விக்கு காட்டிலும், மேட்டிலும் நண்பர்களே என்று வீடியோ போட்ட ஆள் நான், என்னை தூக்கிவிட்டது அதுதான் அதனை நான் எப்போதும் மறக்கமாட்டேன் என கூறினார்.
நடிகர் விஜய் கல்வி உதவி கொடுத்தது குறித்த கேள்விக்கு, விஜய் சார் அப்படி பண்ணதால் எல்லோருக்கும் ஊக்கம் கொடுத்ததுபோல் அமைந்துள்ளது. இதனால் மாணவர்கள் ஊக்கம் பெறுவார்கள் என்றார்.
அரசியல் ஆசை உள்ளதா என்ற கேள்விக்கு நான் சென்னையில் இருக்கணுமா இல்லை ஊருக்கு போனமா?; எனக்கு அரசியல் வேண்டாம், நான் ஒரு காமெடி பீஸ்.
விஜய் சார் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரது விருப்பம். வந்து மக்களுக்கு நல்லது செய்தால் அது மக்களுக்கு செய்தால் அது நல்லதுதான். 12 மணி நேரம் நின்று கொண்டே கல்வி உதவித்தொகை கொடுத்தது பெரிய விஷயம், வாழ்நாளில் விஜய் சாரை மறக்கவே முடியாது என்றார்.
ஹிந்தி படத்தில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு தமிழே எனக்கு வரமாட்டகுது என்றார். முன்னாடி கஷ்டப்பட்டதற்கு நான் நல்லாவே இருக்கேன். நான் மாறவில்லை என ஜிபி முத்து பதில் அளித்தார்.