Top 10 Songs Today : விஜய்யின் கலக்கல் நடனத்தில் மட்ட பாடல்.. கமல் குரலில் யாரோ இவன் யாரோ.. இன்றைய டாப் 10 பாடல்கள்!-goat matta then manasilayo song minikki minikki these are today 10 september 2024 top 10 songs - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top 10 Songs Today : விஜய்யின் கலக்கல் நடனத்தில் மட்ட பாடல்.. கமல் குரலில் யாரோ இவன் யாரோ.. இன்றைய டாப் 10 பாடல்கள்!

Top 10 Songs Today : விஜய்யின் கலக்கல் நடனத்தில் மட்ட பாடல்.. கமல் குரலில் யாரோ இவன் யாரோ.. இன்றைய டாப் 10 பாடல்கள்!

Divya Sekar HT Tamil
Sep 10, 2024 11:27 AM IST

Top 10 Songs Today : விஜய்யின் கலக்கல் நடனத்தில் மட்ட பாடல், ரஜினியின் மனசிலாயோ பாடல் வரை என இன்றைய டாப் 10 பாடல்களை இங்கே பார்க்கலாம்.

Top 10 Songs Today : விஜய்யின் கலக்கல் நடனத்தில் மட்ட பாடல்.. கமல் குரலில் யாரோ இவன் யாரோ.. இன்றைய டாப் 10 பாடல்கள்!
Top 10 Songs Today : விஜய்யின் கலக்கல் நடனத்தில் மட்ட பாடல்.. கமல் குரலில் யாரோ இவன் யாரோ.. இன்றைய டாப் 10 பாடல்கள்!

மனசிலாயோ பாடல்

'ஜெய் பீம்’ பட இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் ’வேட்டையன்’ திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். 'வேட்டைன்’ திரைப்படத்தில் ரஜினிகாந்துடன், ஃபகத் பாசில், ராணா டகுபதி ஆகியோரும் படம் முழுக்க நடித்துள்ளனர். மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மேலும் துஷாரா விஜயன், ரித்திகா சிங், ரக்‌ஷன் உள்படப் பலரும் நடித்துள்ளார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்து இருந்தது. படத்தின் முதல் பாடலான `மனசிலாயோ' பாடலின் கிலிம்ப்ஸ் வீடியோவை நேற்று படக்குழு வெளியிட்டது. இந்த பாடலை மறைந்த பிரபல பின்னணி பாடகரான மலேசியா வாசுதேவன் பாடியுள்ளார். இப்பாடல் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.

மினிக்கி மினிக்கி

பா. இரஞ்சித் இயக்கியிருந்த 'தங்கலான்' திரைப்படத்தின் `மினிக்கி மினிக்கி' பாடல் 3 வது இடத்தை பிடித்திருக்கிறது. இந்தப் பாடலை பாடியவர் பாடகி சிந்தூரி விஷால். 'சீதா ராமம்' போன்ற திரைப்படங்களின் இசையமைப்பாளரான விஷால் சந்திரசேகரின் மனைவிதான் இந்த சிந்தூரி. உமா தேவி பாடல் வரிகளை எழுதி இருந்த நிலையில், இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார்.

டாவுடி பாடல்

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார். இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகயுள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் இரு வேடங்களில் நடித்துள்ளார். படத்தின் 3ஆவது பாடலான டாவுடி பாடல் செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியானது. இப்பாடலும் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது.

கோல்டன் ஸ்பாரோ பாடல்

'ராயன்' திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் 'கோல்டன் ஸ்பாரோ' பாடல் சமீபத்தில் வெளியானது. இப்படம் டிரெண்டிங் இடத்தை பிடித்திருக்கிறது. ரீல்ஸ்களிலும் இப்பாடலே அதிகமாக நிறைந்திருக்கிறது. இந்த பாடலில் நடிகை பிரியங்கா மோகன் ஸ்பெஷல் அப்பியரன்ஸில் வந்து ஆடியுள்ளார். மேலும், இந்த பாடலை நடிகர் தனுஷ் மற்றும் ஜி.வி. பிரகாஷ் என பலர் இணைந்து பாடியுள்ளனர்.

ஸ்பார்க் பாடல்

தளபதி விஜய் அரசியில் என்ட்ரிக்கு பிறகு உருவாகியிருக்கும் தி கோட் படம் இன்று வெளியாகியுள்ளது. மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் தி கோட் திரைப்படம் கேரளா உள்பட சில பகுதிகளில் அதிகாலை காட்சியே திரையிடப்பட்டது.இப்படத்தில் இடம்பிடித்திருக்கும் ஸ்பார்க் பாடலுக்கு கங்கை அமரன் பாடல் வரிகள் எழுத யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா, விருஷா பாலு ஆகியோர் பாடியுள்ளனர்.இந்த பாடல் தற்போது ட்ரெண்ட ஆக தொடங்கியுள்ளது.

அறுவடை பாடல்

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'தங்கலான்'. இப்படத்தில் நடிகைகள் மாளவிகா மோகனன், பார்வதி திருவொத்து ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் பசுபதி, ஹரி கிருஷ்ணன், இங்கிலாந்து நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற அறுவடை பாடல் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த பாடலின் வரிகளை உமா தேவா எழுதி உள்ளார். இப்பாடலை நடிகர் விக்ரம், சிந்தூரி விஷால், மதிச்சியம் பாலா, சுகநிதி ஆகியோர் இணைந்து பாடி உள்ளனர். இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

யாரோ இவன் யாரோ பாடல்

இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் படத்தில் இடம்பெற்றுள்ள கமல் பாடிய யாரோ இவன் யாரோ பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 96 படத்தை இயக்கி கவனமீர்த்த இயக்குநர் பிரேம்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். கார்த்தி , அரவிந்த் சாமி , ஸ்ரீதிவ்யா , ராஜ்கிரண் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சூர்யாவின் 2D என்டர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது.

காத்துக்கீழ பாடல்

பால் டப்பா எழுதி, பாடி, நடித்த ‘காத்துக்கீழ’ பாடல் இடம் பெற்று இருக்கிறது. இந்தப்பாடலுக்கு ofRo இசையமைத்து இருக்கிறார்.இப்பாடலும் ட்ரெண்டிங்கில் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.