Top 10 Cinema News : தி கோட் 4 நாள் வசூல் முதல் ஜெயம் ரவி விவாகரத்து வரை.. இன்றைய டாப் 10 சினிமா செய்திகள்!
Top 10 Cinema News : தி கோட் 4 நாள் வசூலஅப்டேட், டம்மா கோலி பாடல் ரிலீஸ், போட்டோக்களை டெலிட் செய்த தமன்னா உள்பட டாப் 10 சினிமா செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

விஜயின் `GOAT' திரைப்படம் 4 நாட்களில் உலக அளவில் ரூ.288 கோடி வசூல் - தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு!
விஜய் 2 வேடங்களில் நடித்துள்ள தி கோட் திரைப்படம் கடந்த 5 ஆம் தேதி வியாழன் அன்று வெளியானது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, மைக் மோகன், சினேகா, லைலா, யோகி பாபு, பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் படம் வெளியான முதல் 4 நாட்களில் மட்டும் ரூ. 288 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் அறிமுக நிகழ்வில் பங்கேற்ற அதிதி - சித்தார்த்!
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் அறிமுக நிகழ்வில் பங்கேற்ற அதிதி - சித்தார்த். புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.ச்
'லப்பர் பந்து' படத்தில் இடம்பெற்ற டம்மா கோலி பாடல் இன்று வெளியாகிறது!
பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும். இதனை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், லப்பர் பந்து வரும் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. படத்தின் மூன்றாவது பாடலான டம்மா கோலி என்ற பாடல் இன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.