14 years of Irumbukkottai Murattu Singam: கவ்பாய் வேடத்தில் கலக்கிய ராகவா லாரன்ஸ்.. கற்பனை உலகை படைத்த சிம்புதேவன்
Irumbukkottai Murattu Singam: இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டது. சிம்பு தேவன் இப்படத்தை இயக்கினார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் திரைப்படம், 2010 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி மேற்கத்திய நகைச்சுவைத் திரைப்படமாகும், இது சிம்பு தேவன் இயக்கியது, இதில் நடன இயக்குனராக இருந்து நடிகராக மாறிய ராகவா லாரன்ஸ் பத்மப்ரியா, லட்சுமி ராய் மற்றும் சந்தியாவுடன் நடித்துள்ளார். லாரன்ஸ் இரட்டை வேடத்தில் கலக்கியிருந்தார்.
நாசர், சாய் குமார் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் உட்பட துணை நடிகர்களுடம் இப்பட்த்தில் பங்களித்துள்ளனர். இப்படம் கவ்பாய் கதைகளை அடிப்படையாகக் கொண்ட படம் ஆகும், இது 19 ஆம் நூற்றாண்டில் பல மேற்கத்திய திரைப்படங்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 2009 இல் தொடங்கியது, மே 7, 2010 அன்று வெளியிடப்பட்டது. கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படம் தற்போதைய உலக அரசியலை நகைச்சுவையாக எடுத்துரைக்கிறது.
கவ்பாய்களின் தாயகமான ஜெய்சங்கராபுரம் நகரம், கிழக்கு கட்டை என்ற ஒற்றைக் கண் கொண்ட நபரால் ஆளப்படுகிறது, அவர் மற்ற கிராமங்களையும் ஆட்சி செய்கிறார், எப்போதும் அவரது உதவியாளர்களால் சூழப்பட்டிருக்கிறார். (கிழக்கு கட்டை கதாபாத்திரத்தில் நாசர் நடித்திருக்கிறார்.)
