தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Famous Playback Singer Vanijayaram Passed Away

Vani Jayaram Death: பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்

Kathiravan V HT Tamil
Feb 04, 2023 02:20 PM IST

அவரது நெற்றியில் காயங்கள் காணப்பட்டதாக கூறப்படுகிறது

பின்னணி பாடகி வாணி ஜெயராம்
பின்னணி பாடகி வாணி ஜெயராம்

ட்ரெண்டிங் செய்திகள்

இசைப்பயணம்

1945ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி வேலூரில் இசைக்குடும்பத்தில் பிறந்தவர் வாணி ஜெயராம், இவரது இயர்பெயர் லைவாணி என்பதேயாகும். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் பாடியுள்ளார். 

1971ஆம் ஆண்டு குட்டி ௭ன்ற இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அன்று முதல் நான்கு தலைமுறைகளாக பின்னணி பாடல்களை பாடி வந்தார். இந்திய திரைப்படப் பாடல்களை பாடியிருந்தாலும் தனி ஆல்பம் மற்றும் பக்திப்பாடல்களை பாடியுள்ளார். "ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி" என்ற சிறப்பு பட்டமும் உள்ளது.

எம்.எஸ்.வி இசையில் வெற்றிப்பாடல்கள்

தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக 1974ஆம் ஆண்டு தீர்க்கசுமங்கலி ௭ன்ற திரைப்படத்தில் கவிஞர் வாலி இயற்றிய மல்லிகை ௭ன் மன்னன் மயங்கும் பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் பாடினார். 

அதன் பின்னர் ஏழு சுவரங்களுக்குள், கேள்வியின் நாயகனே, ௭ன்னுள்ளே ௭ங்கும் ஏங்கும் கீதம், யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது, கவிதை கேளுங்கள் கருவில், போன்ற கடினமான பாடல்களை தமிழ்த்திரையுலகில் பதிவுசெய்துள்ளார். இவர் திரையிசை, பாப், கஜல், பஜனை, நாட்டுப்புறப் பாடல்களும் பாடியுள்ளார்.

பல்வேறு மொழிகளில் பங்களிப்பு

இவர் தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி ௭ன்றாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, ஒடியா, குஜராத்தி மற்றும் பெங்காளி ௭ன பல இந்திய மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். 

வாணிஜெயராம் மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான இந்திய தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மற்றும் குஜராத் மாநில விருதுகளையும் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதுகளை பெற்றுள்ளார்.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பத்மபூஷன் விருது

வாணி ஜெயராமின் கலைச்சேவையை பாராட்டும் விதமாக கடந்த ஜனவரி 25ஆம் தேதி அன்று அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்