Astrology Insights: ’உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் இல்லாத வீடுகளால் ஏற்படும் பலன்கள்’-astrology insights the positive effects of unplanetary houses in your horoscope - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Astrology Insights: ’உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் இல்லாத வீடுகளால் ஏற்படும் பலன்கள்’

Astrology Insights: ’உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் இல்லாத வீடுகளால் ஏற்படும் பலன்கள்’

Kathiravan V HT Tamil
Sep 18, 2024 04:36 PM IST

Astrology Insights: ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் தனித்தனியாக அமர்ந்தாலும் கூட லக்னம் மற்றும் அதனுடன் சேர்ந்த 2 வீடுகள் வரை காலியாகவே இருக்கும். ஒரே வீட்டில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்து இருந்தால் நிறைய வீடுகள் காலியாக இருக்கும்.

Astrology Insights: ’உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் இல்லாத வீடுகளால் ஏற்படும் பலன்கள்’
Astrology Insights: ’உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் இல்லாத வீடுகளால் ஏற்படும் பலன்கள்’

காலியாக உள்ள வீடுகள் 

ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் தனித்தனியாக அமர்ந்தாலும் கூட லக்னம் மற்றும் அதனுடன் சேர்ந்த 2 வீடுகள் வரை காலியாகவே இருக்கும். ஒரே வீட்டில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்து இருந்தால் நிறைய வீடுகள் காலியாக இருக்கும். எல்லா வீடுகளிலும் கிரகங்கள் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; ஆனாலும் அந்த வீடுகள் செயல்படும். 

கிரகங்களும் காரகத்துவமும் 

உதாரணமாக மேஷ ராசியில் கிரகங்கள் இல்லை என்று எடுத்துக் கொள்வோம். ஆனால் மேஷம் ராசிக்கு உரிய செவ்வாய் உடைய குணமும், அந்த ராசி மண்டலத்தின் குணாதிசயங்களும் வேலை செய்யும். ஒவ்வொரு வீடுகளுக்கும் உள்ள அதிபதிகளுக்கான காரகத்துவங்களும், அவர்கள் அமர்ந்து இருக்கும் இடத்திற்கு ஏற்றார் போல் பலன்களை செய்யும். 

மிதுனம் லக்னம் 

உதாரணமாக மிதுனம் லக்னத்தை எடுத்துக் கொள்வோம். இவர்களுக்கு இரண்டாம் வீடாக சந்திரனின் வீடான கடகம் உள்ளது. கடக ராசியில் சந்திரன் இல்லை என்றாலும், எந்த கிரகமும் கடகம் வீட்டை பார்க்கவில்லை என்றாலும் இவருக்கு பணம் வராது என்பதை முடிவு செய்ய முடியாது. அந்த ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து பலன்கள் கிடைக்கும். அதே போல் எந்த வீடுகளுக்கும் ஆதிபதியம் பெற்ற கிரகங்கள் 6, 8, 12 ஆகிய மறைவு ஸ்தானங்களில் இருந்தால் பலன்கள் குறையும். 

சிம்மம் லக்னம் 

சிம்ம லக்னத்தை எடுத்துக் கொள்வோம். லக்னத்தில் எந்த கிரகமும் இல்லை, லக்ன வீட்டை யாரையும் பார்க்கவில்லை. ஆனால் சூரியன் எங்கு அமர்ந்து இருக்கிறாரோ அதன்படி லக்னம் செயல்படும். சூரியன் கன்னி ராசியில் இருக்கிறார் எனில் சூரியன் அமர்ந்து இருக்கும் வீடு, அந்த வீட்டில் நட்பு நிலை உள்ளிட்டவற்றை கொண்டு ஜாதகருக்கு பலன்கள் கிடைக்கும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner