TAMIL HIT MOVIES IN AMAZON PRIME: தமிழில் ஹிட்..கண்டிப்பாக மிஸ் செய்யாமல் ஓடிடியில் பார்க்க கூடிய படங்கள் லிஸ்ட் இதோ-dont miss to watch these tamil hit movies streaming in amazon prime ott platform - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Hit Movies In Amazon Prime: தமிழில் ஹிட்..கண்டிப்பாக மிஸ் செய்யாமல் ஓடிடியில் பார்க்க கூடிய படங்கள் லிஸ்ட் இதோ

TAMIL HIT MOVIES IN AMAZON PRIME: தமிழில் ஹிட்..கண்டிப்பாக மிஸ் செய்யாமல் ஓடிடியில் பார்க்க கூடிய படங்கள் லிஸ்ட் இதோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 24, 2024 10:27 PM IST

Tamil Hit Movies in Amazon Prime: தமிழில் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டாகி, அமேசான் ப்ரைம் விடியோவில் இருக்கும் கண்டிப்பாக மிஸ் செய்யாமல் பார்க்க கூடிய படங்கள் எவை என்பதை பார்க்கலாம்.

Tamil Hit Movies in Amazon Prime: தமிழில் ஹிட்.. கண்டிப்பாக மிஸ் செய்யாமல் பார்க்க கூடிய படங்கள் லிஸ்ட் இதோ
Tamil Hit Movies in Amazon Prime: தமிழில் ஹிட்.. கண்டிப்பாக மிஸ் செய்யாமல் பார்க்க கூடிய படங்கள் லிஸ்ட் இதோ

அலைபாயுதே

மாதவனின் அறிமுக படமான அலைபாயுதே 2000ஆவது ஆண்டில் வெளியானது. படத்தில் அவருக்கு ஜோடியாக ஷாலினி நடித்திருப்பார். மணிரத்னம் இயக்கத்தில் சிறந்த கிளாசிக் காதல் கதையாகவும், ட்ரெண்ட் செட்டர் படமாக இருக்கும் இந்த படம் அமேசான் ப்ரைம் ரொமான்ஸ் லிஸ்டில் உள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் இந்தியா முழுவதும் பேமஸ் ஆனது

புதுப்பேட்டை

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் கேங்ஸ்டர் படம் புதுப்பேட்டை. சிநேகா, சோனியா அகர்வால், அழகம் பெருமாள் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படம் ரிலீசின் போது சராசரி ஹிட்டாக அமைந்தாலும் தற்போது கல்ட் கிளாசிக் அந்தஸ்தை பெற்றுள்ளது. யுவன் ஷங்கர் இசையில் பாடல்கள், பின்னணி இசை தெறிக்கவிடும் விதமாக அமைந்திருக்கும். செல்வராகவனின் தனித்துவமான மேக்கிங்குக்கு பெயர் பெற்ற புதுப்பேட்டை அமேசான் ப்ரைம் ஆக்சன் படங்களின் லிஸ்டில் உள்ளது.

மிடில்கிளாஸ் மாதவன்

டிபி கஜேந்திரன் இயக்கத்தில் பிரபு, அபிராமி, டெல்லி கணேஷ், விவேக், வடிவேலு உள்பட பலர் நடித்திருக்கும் படம் மிடில் கிளாஸ் மாதவன். பேமிலி திரைப்படமான இது குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கூடிய படமாக உள்ளது. விவேக் - வடிவேலு காம்போவின் காமெடி வயிற்றை புண்ணாக்கும் விதமாக இருக்கும். அமேசான் ப்ரைமில் காமெடி படங்கள் லிஸ்டில் இடம்பிடித்துள்ளது

அவ்வை சண்முகி

கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், மாமியாக நடித்து காமெடியில் அதகளம் செய்த படம் அவ்வை சண்முகி. மீனா, ஜெமினி கணேசன், டெல்லி கணேஷ், நாசர் உள்பட பலர் நடித்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது. தேவா இசையில் படத்தின் பாடல்களும் வரவேற்ப்பை பெற்றன. அமேசான் காமெடி படங்கள் வரிசையில் இந்த படம் உள்ளது

நூறாவது நாள்

மோகன், நளினி நடிக்க மணிவண்ணன் இயக்கத்தில் மர்டர் மிஸ்டிரி த்ரில்லர் பாணியில் நூறாவது நாள் படம் அமைந்திருக்கும். விஜயகாந்த் முக்கியத்துவம் மிக்க கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இளைராஜாவின் பின்னணி இசை கொலைநடுங்க வைக்கும் விதமாக இருக்கும். ரசிகர்களை அதிர வைத்த த்ரில்லர் படமான நூறாவது நாள் அமேசான் ப்ரைம் ஹாரர் லிஸ்டில் உள்ளது.

கன்னத்தில் முத்தமிட்டால்

மணிரத்னம் - மாதவன் கூட்டணி வெளியாகி ரசிகர்களை கவர்ந்த மற்றொரு படம் கன்னத்தில் முத்தமிட்டால். இந்த படத்தில் சிம்ரன், பார்த்திபன் மகள் கீர்த்தனா, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். தேசிய விருது வென்ற இந்த படம் விமர்சக ரீதியமாகவும் பாரட்டை பெற்றது. அமேசான் ப்ரைமில் மிஸ் செய்யாமல் பார்க்ககூடிய படங்களின் லிஸ்டில் இந்த படமும் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.