Madhavan: ரூ. 17.5 கோடியில் சொகுசு அப்பார்மெண்ட் வாங்கிய நடிகர் மாதவன் - வைரலாகும் வீட்டின் புகைப்படங்கள்
மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் சிக்னியா பேர்ல் கட்டுமான நிறுவனத்தில் சொகுசு அப்பார்மெண்ட் ஒன்றை நடிகர் மாதவன் வாங்கியுள்ளார். இது விரிவான லிவிங் ஸ்பெஸ் உடன், அதிநவீன வசதிகளை கொண்டதாக அமைந்துள்ளது. இதன் விலை ரூ. 17.5 கோடி கூறப்படும் நிலையில், வீட்டின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன

: ரூ. 17.5 கோடியில் சொகுசு அப்பார்மெண்ட் வாங்கிய நடிகர் மாதவன், வைரலாகும் வீட்டின் புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் மாதவன், பாலிவுட்டிலும் புகழ்பெற்றவாக உள்ளார். மும்பையில் வசித்து வரும் மாதவன் அங்குள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் ஒரு புதிய சொகுசு அப்பார்மெண்ட் வாங்கியுள்ளார். மாதவன் வாங்கியிருக்கும் சொத்தின் மதிப்பு ரூ. 17.5 கோடிக்கு என கூறப்படுகிறது.
அவரது இந்த புதிய அப்பார்மெண்ட் குடியிருப்புக்கு தயாராக உள்ளது, சுமார் 389 சதுர மீட்டர் (4,182 சதுர அடி) மற்றும் இரண்டு பார்க்கிங் இடங்களுடன் இந்த அப்பார்மெண்ட் அமைந்துள்ளது.
மாதவன் பங்களாவின் கூடுதல் தகவல்கள்
4 மற்றும் 5 BHK அடுக்குமாடி குடியிருப்புகளை வழங்கும் உயர்தர குடியிருப்பு கட்டுமான நிறுவனான சிக்னியா பேர்ல் கட்டியிருக்கும் இந்த அப்பார்ட்மெண்ட்கள் 'வெனிஷியன் சூட்ஸ்' பாணியில் கட்டமைக்கப்ப்டடுள்ளது.