Doctor Kantharaj: நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட்..5 பிரிவுகளில் வழக்குப்பதிவு! உளப்பூர்வமாக மன்னிப்பு கோரிய டாக்டர். காந்தராஜ்-doctor kantharaj apologises for his his comments on female actors after criminal cases files against him - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Doctor Kantharaj: நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட்..5 பிரிவுகளில் வழக்குப்பதிவு! உளப்பூர்வமாக மன்னிப்பு கோரிய டாக்டர். காந்தராஜ்

Doctor Kantharaj: நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட்..5 பிரிவுகளில் வழக்குப்பதிவு! உளப்பூர்வமாக மன்னிப்பு கோரிய டாக்டர். காந்தராஜ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 20, 2024 07:55 AM IST

Doctor Kantharaj: நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து சர்ச்சை பேச்சுக்கு 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில்,டாக்டர். காந்தராஜ் தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். யாரையும் காயப்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. உளப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

Doctor Kantharaj: நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட்..5 பிரிவுகளில் வழக்குப்பதிவு! உளப்பூர்வமாக மன்னிப்பு கோரிய டாக்டர். காந்தராஜ்
Doctor Kantharaj: நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட்..5 பிரிவுகளில் வழக்குப்பதிவு! உளப்பூர்வமாக மன்னிப்பு கோரிய டாக்டர். காந்தராஜ்

அத்துடன் சில நடிகைகள் பற்றி பேட்டி கொடுப்பவர்கள் தெரிவிக்கு அவதூறு கருத்துகளும் சர்ச்சையை கிளப்புகின்றன.

அப்படியொரு சர்ச்சையை கிளப்பும் விதமான பேட்டியை பிரபல விமர்சகரான டாக்டர். காந்தராஜ் யூடியூப் சேனல் ஒன்றில் அளித்திருந்தார்.

காந்தராஜ் மீது கிரிமினல் நடவடிக்கை

இதையடுத்து டாக்டர்.காந்தராஜ் பேச்சுக்கு திராக நடவடிக்கை எடுக்க கோரி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாகா கமிட்டி தலைவருமான நடிகை ரோகிணி சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் டாக்டர். காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவர் எப்போது கைதாகலாம் என்ற நிலை இருந்தது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 296 (பொது வெளியில் ஆபாசமாக பேசுதல்), 75 (பாலியல் தொந்தரவு), 79 (பெண்களின் மாண்பை அவமதித்தல்), 352 (அவதூறாக பேசுதல்), 67 (தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல்) ஆகிய சட்டப்பிரிவுகள் கீழ் டாக்டர் காந்தராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டாக்டர் காந்தராஜ் மன்னிப்பு

இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக டாக்டர் காந்தராஜ், "தனியார் தொலைக்காட்சியில் திரைப்பட நடிகைகள் குறித்து நான் கொடுத்த பேட்டி பல நடிகையர் மனதைப் புண்படுத்தி இருக்கிறது என்பதை அறிகிறேன்.

யாரையும் காயப்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. இருப்பினும் இந்தப் பேட்டி கொடுத்தற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். உளப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

வழக்குப்பதிவுக்கு காரணமான காந்தராஜ் பேட்டி

நடிகைகள் படத்தில் நடிப்பதற்கு முன்னரே இதுபற்றி அனைத்தும் தெரிந்தும் ஒகே சொல்லிவிட்டு, பின்னர் பல ஆண்டுகளுக்கு பிறகு புகார் அளிக்கிறார்கள். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் இருந்தே அட்ஜஸ்மெண்ட் சினிமாவில் தொடர்ச்சியாக இருந்து வருவகிறது.

வெறும் நடிகர்களை மட்டுமல்லாமல் இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்பட தொழில்நுட்ப கலைஞர்களையும் நடிகைகள் அட்ஜெஸ்ட் செய்கிறார்கள் என டாக்டர். காந்தராஜ் பேசியது சர்ச்சையை கிளப்பியது.

ரோகிணி புகார்

நடிகை ரோகிணி அளித்த புகாரில், கடந்த 7ஆம் தேதி பிரபல யூடியூப் சேனலில் வெளியான டாக்டர். காந்தராஜ் பேட்டியில், நடிகைகள் குறித்து சர்ச்சையை கிளப்பும் விதமாக அவர் பேசியுள்ளார்.

குறிப்பிட்ட விடியோவில் "நடிகைகளை பாலியல் தொழிலாளிகள் போல் சித்தரித்து இழிவாக பேசியுள்ளார். தொழில்நுட்ப கலைஞர்களுடனான தொழில்முறை உரையாடல், தொடர்பை கொச்சப்படுத்தியுள்ளார்.

அவரது பேச்சு நடிகைகளை அவமதிப்பதாக மட்டுமல்லாமல், சினிமாவில் நுழைந்து சாதிக்க விரும்பும் பெண்களை தவறான வழிகாட்டுதலையும் தருவதாக உள்ளது. அவரது இந்த பேச்சுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதோடு, டாக்டர். காந்தராஜ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சம்மந்தப்பட்ட விடியோ யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட வேண்டும்" என தனது புகாரில் தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் சட்ட நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில், தற்போது டாக்டர். காந்தராஜ் மன்னிப்பு கோரியுள்ளார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.