Malavika Sreenath : மார்பகத்தில் கை வைத்து கட்டிபிடித்து.. 10 நிமிடம் அட்ஜஸ்மெண்ட் கேட்டாங்க.. பிரபல நடிகை புகார்!
சில வருடங்களுக்கு முன்பு ஆடிசன் என்கிற பெயரில் தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல் குறித்து நடிகை மாளவிகா ஸ்ரீநாத் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
மலையாள திரையுலகில் இளம் நடிகையாக திகழ்பவர் மாளவிகா ஸ்ரீநாத்.மலையாளத்தில் மதுரம், சாட்டர்டே நைட் ஆகிய படங்களில் நடித்தவர் மாளவிகா ஸ்ரீநாத். இதன்மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இவர் சில வருடங்களுக்கு முன்பு ஆடிசன் என்கிற பெயரில் தனக்கு நடந்த பாலியல் அத்துமீறல் குறித்து ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
மஞ்சு வாரியார் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பதால் அவருடன் நடிக்க வேண்டும் என்பது பல இளம் நடிகர், நடிகைகளின் கனவாக உள்ளது. அப்படி மஞ்சு வாரியரின் தீவிர ரசிகையாக இருப்பவர் தான் நடிகை மாளவிகா ஸ்ரீநாத். இந்நிலையில் இவரை மஞ்சு வாரியரின் மகளாக நடிக்க வாய்ப்பு தருவதாக அழைத்து சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து நடிகை மாளவிகா ஸ்ரீநாத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,“சில ஆண்டுகளுக்கு முன் மலையாள படத்தில் மஞ்சு வாரியரின் மகளாக நடிக்க வருமாறு அழைப்பு வந்தது. மஞ்சு வாரியர் படம் என்றால் யாருக்கு தான் ஆசை இருக்காது. அதனால் நானும், என் தங்கை மற்றும் தாயை அழைத்துக் கொண்டு அதற்கான ஆடிசனுக்கு சென்றேன்.
ஆனால் என்னை ஆடிஷன் செய்தவர்கள் படத்தில் நடிக்கவில்லை என்று பிறகுதான் தெரிந்தது. மஞ்சு வாரியருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன். சினிமா துறையில் எனக்கு பெரிதாக முன் அனுபவம் இல்லை என்பதால் என் அம்மா, நான் மற்றும் தங்கையுடன் இன்னோவாவில் ஆடிஷனுக்கு அழைத்துச் சென்றேன்.
ஒரு தனி அறையில் ஆடிசன் டெஸ்ட் நடைபெற்றது. அப்போது அங்கிருந்த நபர் என் தலைமுடி சரியாக இல்லை என்றும், பக்கத்து அறைக்கு சென்று அதை சரிசெய்துவிட்டு வருமாறும் கூறினார். நான் அந்த அறைக்கு சென்றதும் என்னை பின் தொடர்ந்து வந்த அந்த நபர் என்னை கட்டிப்பிடித்தார்.
மார்பகத்தில் கை வைத்து அழுத்தி விட்டான். நான் அவரின் பிடியில் இருந்து விடுபட முயன்றபோது, 10 நிமிஷம் மட்டும் அட்ஜஸ்மெண்ட் செய்தால் போதும், மஞ்சு வாரியரின் மகளாக நடிக்கும் வாய்ப்பை உனக்கே தருகிறேன் என கூறினார்.
நான் அழ ஆரம்பித்து அவருடைய கேமராவைத் தட்ட முயற்சித்தேன். அதற்குள் அவருடைய கவனம் திசை திரும்பியது, நான் அங்கிருந்து தப்பித்துவிட்டேன், நான் உடனே அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டேன். இப்போ நினைச்சாலும் அது பயங்கரமான அனுபவமாக இருக்கிறது”என மாளவிகா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்