HBD Selvaraghavan: காலத்தை மீறிய படைப்புகளை தந்தவர்! தமிழ் சினிமாவின் ஜீனியஸ் இயக்குநர் செல்வராகவன் பிறந்தநாள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Selvaraghavan: காலத்தை மீறிய படைப்புகளை தந்தவர்! தமிழ் சினிமாவின் ஜீனியஸ் இயக்குநர் செல்வராகவன் பிறந்தநாள்

HBD Selvaraghavan: காலத்தை மீறிய படைப்புகளை தந்தவர்! தமிழ் சினிமாவின் ஜீனியஸ் இயக்குநர் செல்வராகவன் பிறந்தநாள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 05, 2024 06:00 AM IST

ஹீரோ, ஹீரோயினாக படம் பார்த்து வந்த ரசிகர்களை இயக்குநருக்காக பார்க்க வைத்த சினிமா இயக்குநராக இருந்து வருபவர் செல்வராகவன்.

இயக்குநர் செல்வராகவன்
இயக்குநர் செல்வராகவன்

தனுஷ் என்ற மாபெரும் கலைஞனை தமிழ் சினிமாவுக்கு உருவாக்கி தந்த இவர், தனது அற்புத படைப்புகளால் தனக்கென தனியொரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். குறிப்பாக யங்ஸ்டருக்கு மிகவும் பிடித்தமான இயக்குநராக இருந்து வரும் செல்வராகவன் தனது படங்களில் காதலை முற்றிலும் மாறுபட்ட பரிணாமத்தில் காட்டி ரசிகர்களை கவர்ந்திருப்பார்.

ஹீரோயின் ஹீரோவை காதலிப்பது, ஹீரோ ஹீரோயிஸம் செய்வது, நல்லவனாக இருப்பது என்ற அடிப்படை விஷயங்கள் அனைத்து இவரது படங்களிலும் இருந்தாலும் அதை இவர் கையாண்டிருக்கும் விதமானது என்பது முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். தமிழ் சினிமாவின் இலக்கணம் என்று கூறப்படும் விஷயங்களை இலக்கணத்தி மீறி எதார்த்தமாக காட்டி அதிலும் நியாயத்தை சேர்க்கும் விதமாக இவரது படங்களின் கதாபாத்திரங்கள் அமைந்திருக்கும்.

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியராக அறிமுகமான இவர், அந்த படத்தின் தான் தனுஷை ஹீரோவாக அறிமுகம் செய்தார். இந்த படத்தை இயக்கியதும் இவர்தான் என்றாலும், படத்தின் வியாபாரத்துக்காக தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா பெயர் படத்தின் இயக்குநராக இடம்பிடித்தது.

இதன் பின்னர் சகோதரர் தனுஷை வைத்து மட்டுமே காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, நானே வருவேன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 

தனது படங்களில் அளவாக பேசும் விதமாக கதாபாத்திரங்களை அமைக்கும் செல்வராகவன், அவர்கள் கண்களின் வழியே உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக காட்சிகளை அமைப்பதில் வல்லவராக இருந்துள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படம் தமிழ் சினிமாவில் புதுமையான முயற்சியாகவே இருந்தது.

இந்த படம் வெளியான காலகட்டத்தில் பெரிதாக கொண்டாடப்படாமல் போனது. ஆனால் தற்போது அதை பலரும் சிறந்த கல்ட் படமாக கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் கமல்ஹாசனின் சில படங்களை போல் செல்வாவின் படங்களும் காலத்தை கடந்து கொண்டாடப்படும் படங்களாக இருந்து வருகின்றன.

செல்வாவின் படங்களில் ஹீரோயின் கதாபாத்திரம் எப்போது வலிமை மிக்கதாகவே இருக்கும். அந்த வகையில் அவரது 7ஜி ரெயின்போ காலனி அனிதா, மயக்கம் என்ன யாமினி போன்ற கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் நீங்காமல் இருந்து வருகின்றன.

கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்தை செல்வராகவன் தான் முதலில் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அவர் அந்த படத்தில் இருந்து விலகினார். இதேபோல் சிம்புவை வைத்து கான் என்ற படத்தை தொடங்கி சில நாள்கள் ஷுட்டிங்கும் நடந்த நிலையில் அந்த படமும் கைவிடப்பட்டது.

சானிக்காயிதம் படம் மூலம் நடிகராக உருவெடுத்த செல்வராகவன், தற்போது நடிகராகவும் ஜொலித்து வருகிறார்.

செல்வராகவனை ரசிகர்கள் ஜீனியஸ் என்று அழைப்பதுண்டு. அந்த வகையில் தனது படைப்புகளால் தமிழ் சினிமாவில் பேசப்படும் இயக்குநராக இருந்து வரும் அவருக்கு இன்று பிறந்தநாள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.