SelvaRagavan: அழுதிருக்கேன்.. ஒரு ஃபிகர் அவமானமாகப் பார்த்தால்.. இதைச்செய்யுங்க.. செல்வராகவன் உருக்கம்-director selvaraghavan said in a warm speech that he cried and if a figure is seen as an insult then do this - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Selvaragavan: அழுதிருக்கேன்.. ஒரு ஃபிகர் அவமானமாகப் பார்த்தால்.. இதைச்செய்யுங்க.. செல்வராகவன் உருக்கம்

SelvaRagavan: அழுதிருக்கேன்.. ஒரு ஃபிகர் அவமானமாகப் பார்த்தால்.. இதைச்செய்யுங்க.. செல்வராகவன் உருக்கம்

Marimuthu M HT Tamil
Sep 23, 2024 09:07 PM IST

SelvaRagavan: அழுதிருக்கேன் எனவும், ஒரு ஃபிகர் அவமானமாகப் பார்த்தால் இதைச்செய்யுங்க எனவும் இயக்குநர் செல்வராகவன் உருக்கமாகிப் பேசியுள்ளார்.

SelvaRagavan: அழுதிருக்கேன்.. ஒரு ஃபிகர் அவமானமாகப் பார்த்தால்.. இதைச்செய்யுங்க.. செல்வராகவன் உருக்கம்
SelvaRagavan: அழுதிருக்கேன்.. ஒரு ஃபிகர் அவமானமாகப் பார்த்தால்.. இதைச்செய்யுங்க.. செல்வராகவன் உருக்கம்

இவரது இயக்கத்தில் கடைசியாக நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் ஆகிய இரு படங்கள் வெளியாகி ஓரளவு லாபத்தைப் பெற்றுத்தந்தன. இதற்கிடையில் நடிப்பிலும் கவனம்செலுத்திய செல்வராகவன் சாணி காயிதம், பீஸ்ட், பகாசூரன், ஃபர்ஹானா உள்ளிட்டத் திரைப்படங்களில் நடித்தார்.

சமீபத்தில், புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கத்தில், பெயரிடப்படாத ஒரு பான் இந்திய திரைப்படத்தில் செல்வராகவன் மும்முரமாக நடித்து வருகிறார்.

பான் இந்தியா படத்தில் நடிக்கும் செல்வராகவன்:

இப்படத்தில் செல்வராகவனுடன் இணைந்து மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, புஷ்பா மற்றும் ஜெயிலர் படப்புகழ் சுனில், தெலுங்கு நடிகர் ஜே.டி.சக்கரவர்த்தி, ராதாரவி, யோகி பாபு, வினோதினி உட்படப் பலர் நடிக்கின்றனர். மேலும் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பான் இந்தியத் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, திண்டுக்கல் அருகில் ஏறத்தாழ ஆயிரம் துணைநடிகர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது.

அதேபோல், இன்ஸ்டா, ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் செல்வா, ட்விட்டரில் அவ்வப்போது தத்துவ ட்வீட்களை பறக்கவிடுவார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் பள்ளியில் ஆன்மிக உரை நிகழ்த்தி கைதான மஹா விஷ்ணு என்பவரை மறைமுகமாகத் தாக்கியும் ஆன்மிக குரு என்றால் யார் என்பது குறித்தும், தியானம் எப்படி செய்யவேண்டும் என்பது குறித்தும், அனைத்து மதங்களும் போதிப்பது என்ன என்பது குறித்தும் இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் வீடியோவில் பேசியுள்ளார்.

அதைத்தொடர்ந்து தமிழில் பேச வலியுறுத்தி இயக்குநர் செல்வராகவன் ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டிருக்கிறார்.

அதில், புதிதாக பதிவுசெய்த ஒரு வீடியோவில் செல்வராகவன் கூறியதாவது, ‘’உங்கள் எல்லோர்கிட்டேயும் கெஞ்சி கேட்கிறேன். தாழ்மையோடு கேட்கிறேன். முக்கியமாக தமிழ்நாட்டு மக்களுக்கு. தமிழ் இனி மெல்ல சாகும் என்று பாரதியார் சொன்னாங்க. எவ்வளவு உண்மை என்றால், முன்பே வந்து, ஐ.சி.யூ.வில் வெண்டிலேட்டரில் படுத்துட்டு இருக்கு. எப்பப் பார்த்தாலும் இங்கிலீஷ்.. இங்கிலீஷ்.. இங்கிலீஷ்.. இங்கிலீஷ் தெரியாதவங்க கூட, அதைத் திக்கித்திணறி இங்கிலீஷில் பேசத்தான் முயற்சி பண்ணுறாங்க. தமிழில் பேசிறதை அருவருப்பாக, அவமானமாக நினைக்கிறாங்க.

பள்ளி கல்லூரியில் இங்கிலீஷ் தெரியாமல் அவமானப்பட்டு அழுதிருக்கேன் - செல்வராகவன்

எனக்கு இங்கிலீஷில் பேசுற அவசியம் புரியுதுங்க. அதுக்காக எப்பயுமா. நான் ஸ்கூலில், காலேஜில் எல்லாம் எவ்வளவு அவமானப்பட்டிருக்கேன். எவ்வளவோமுறை அழுதிருக்கேன். இங்கிலீஷ் தெரியாமா. அப்படியே வந்து கூனிக்குறுகி இருக்கேன். ஃபுல் கிளாஸும் இங்கிலீஷில் தான் பேசும். கான்வென்டில் இருந்து வந்தவங்க. காலேஜுக்குப் போனால், இங்கிலீஷில் தான் பேசுவாங்க. அவங்க தான் பதில் சொல்வாங்க.

நமக்கு எல்லாம் ஒன்னுமே தெரியாது. கடைசி பெஞ்சில் இருந்துக்கிட்டு, அப்படியே வெட்கப்பட்டு வெட்கப்பட்டு ஏனோதானோன்னு படிச்சு, வந்து வெளியில் வந்துட்டோம். இப்பதான் எனக்கு ஒரு வெறி வந்துச்சு, இங்கிலீஷ் தானேன்னு சொல்லிட்டு, இந்து, எக்ஸ்பிரஸ் மற்றும் நிறைய இங்கிலீஷ் புக்ஸ் இதெல்லாம் படிக்க ஆரம்பிச்சேன். அர்த்தம் தெரியாததுக்கு எல்லாம் பக்கத்தில் ஒரு டிக்ஸனரி வைச்சுக்குவேன்.

இன்னிக்கும் எனக்கு கரெக்ட்டாக ஆங்கிலத்தில் பேசுறேனான்னு தெரியாது: செல்வராகவன்!

டக் டக்குனு அதைப் பாத்து, இதுக்கு இதுதான் அர்த்தம்,இது அர்த்தம்னு கத்துக்கிட்டேன். கொஞ்சம் கஷ்டமான பிராசஸ் தான், ஆனால் பண்ணப்பண்ண, ஒரு ஸ்டேஜில் வந்து, கொஞ்சம் சரளமாக ஆங்கிலத்தில் பேச ஆரம்பிச்சு, அப்புறம் நான் சினிமாவுக்கு வந்தவுடனே தான், ஓரளவுக்கு நல்லா பேச ஆரம்பிச்சிருக்கேன். இன்னிக்கும் எனக்கு ஆங்கிலத்தில் கரெக்ட்டாகப் பேசுறேனா, அப்படின்னு எல்லாம் தெரியாது. அது எனக்கு கவலையும் கிடையாது.

நான் தமிழன். எங்கே போனாலும் தமிழில் பேசுவேன். அதுமாதிரி நான் உங்ககிட்டே கேட்கிறது ஒன்னே ஒன்னுதான். நீங்கள் தமிழில் பேசுங்க. எங்கேபோனாலும் கொஞ்சம் வாய்ஸை அதிகரிச்சு தமிழில் பேசுங்க. அவங்க உங்களை அவமானமாகப் பார்த்தால், முறைச்சிட்டு, அட என்னங்க விற்கமாட்டீங்களா அப்படியே கேளுங்க.

ஏதாவது ஒரு ஃபிகர் அவமானமாகப் பார்த்தால்.. தூக்கி கடாசுங்க: செல்வராகவன்!

அப்படி ஏதாவது ஒரு ஃபிகர் அவமானமாகப் பார்த்தால், மூஞ்சியை சுழிச்சால், அந்த மாதிரி ஃபிகரே தேவையில்லைங்க. தூக்கி கடாசுங்க. ஏன் தமிழ்நாட்டு பொண்ணு, தமிழ் பேசுற பொண்ணே எனக்குப்போதும்.

இதை ஏன் சொல்றேன் அப்படி என்றால், உலகத்தில் நீங்க எந்த நாட்டுக்கு வேண்டுமென்றாலும் போய் பார்த்துக்கங்க. எல்லோரும் அவங்க தாய்மொழியில் தான் பேசுவாங்க. அதுமட்டும் தான் பேசுவாங்க. இவங்க இங்கிலீஷில் சப்-டைட்டில் போடுவாங்க. பார்த்திருக்கீங்களா?. யாருமே இங்கிலீஷில் பேச முயற்சி பண்ணவே மாட்டங்க.

எந்த நாடாக இருந்தாலும் சரி. சின்னத்தீவாக இருந்தால்கூட. நீங்கள் போய் பார்த்துக்கங்க. இணையதளம் முழுக்க தேடுங்க, நான் சத்தியமாக உண்மையைத் தான் சொல்றேன். வெளிநாட்டினர் அங்கிருந்து இங்கே வந்து, அழகாக தமிழ் கத்துக்கிட்டு, தமிழில் பேசுறாங்க. தமிழில் பேசுறதை பெருமையாக நினைக்கிறாங்க. ஏன், உலகத்திலேயே பழமையான மொழி தமிழ் மொழி. இதை நான் கெஞ்சிக்கேட்கிறதை வைச்சுக்கங்க. வேண்டுகோளாக வைச்சுக்கங்க. காலம்காலமாக உள்ளே புழுங்கிப்போய் கிடந்த ஒரு விஷயத்தை உங்ககூட நான் ஷேர் பண்ணிக்குறேன். அவ்வளவு தான்’’ என இயக்குநர் செல்வராகவன் பேசி, தனது இன்ஸ்டாகிராமில் காணொலியாக வெளியிட்டிருக்கிறார்.

முன்னதாக நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்ட செல்வராகவன் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்தார். அதனைத்தொடர்ந்து தன்னுடன் உதவியாளராக பணியாற்றி வந்த கீதாஞ்சலியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஓம்கார், லீலாவதி மற்றும் ருத்ராக்ஷ் என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.