S.A.Chandrasekhar: ‘ரசிகர்களை விஜய் சந்திப்பது ஏன்?’ ரகசியம் உடைத்த எஸ்.ஏ.சி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  S.a.chandrasekhar: ‘ரசிகர்களை விஜய் சந்திப்பது ஏன்?’ ரகசியம் உடைத்த எஸ்.ஏ.சி!

S.A.Chandrasekhar: ‘ரசிகர்களை விஜய் சந்திப்பது ஏன்?’ ரகசியம் உடைத்த எஸ்.ஏ.சி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 02, 2022 07:48 AM IST

இவ்வளவு சிரமத்திற்குள் சினிமாவை என்னால் விடமுடியாது. சினிமாவை நிறுத்தினால், மூச்சு நின்றுவிடும். ஏதாவது ஒரு உருவத்தில் சினிமாவில் இருக்க வேண்டும்.

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் ( S A Chandrasekhar Twitter)

‘‘இதற்கு முன் விஜய் அடிக்கடி ரசிகர்களை சந்திக்கும் கூட்டம் நடக்கும். நான் விஜய்யிடம் அடிக்கடி சொல்வேன். குறைந்தது 2 கோடி பேர் வீட்டில் விஜய் போட்டோ இருக்கும். அந்த வீட்டு பையன்களுடன் நீ போட்டோ எடுக்க வேண்டும். அந்த ரசிகனின் வீட்டில் விஜய் உடன் எடுத்த போட்டோ இருக்க வேண்டும் என்று கூறுவேன்.

எம்.ஜி.ஆர்., அதை செய்தார். இதை நான் 15 ஆண்டுக்கு முன்னாடி இருந்து சொல்லிட்டு இருக்கேன். ஆண்டுக்கு 3 மாதத்திற்கு ஒரு முறை போட்டோ எடுத்து வந்தார். அந்த நிகழ்வில் பேசுவதெல்லாம் இருக்காது; வருவாங்க போட்டோ எடுப்பாங்க போவாங்க. மூன்று மாதத்திற்கு ஒரு முறை, இரண்டு மாவட்ட ரசிகர்களை அழைப்போம்; வருவாங்க போட்டோ எடுப்பாங்க.

காலையில் விஜய் 10 மணிக்கு வந்தால், மதியம் 2 மணி வரை பிரேக் இல்லாமல் நின்று போட்டோ எடுப்பார். அது ஒரு இலக்காக விஜய்யிடம் சொல்லியிருக்கேன். அது தான் இப்போதும் தொடர்கிறது. படத்தில் அதிக கவனம் செலுத்துவார். ஹோம் ஒர்க் செய்வார்.

போட்டியில் நாம நிற்கனும் என்கிற உறுதி அவரிடம் உண்டு. எங்கே இருந்து அந்த பழக்கம் வந்தது என்பதை விட, அதை அவர் செய்ய வேண்டுமே. ஒரு படம் ஆரம்பித்து முடியும் வரை எந்த நிகழ்ச்சியையும் நினைக்க மாட்டார். இப்போது ரசிகர்களை சந்திப்பது இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடப்பதால் அது பேசப்படுகிறது. ஆனால், முன்பு இதை வித அதிக அளவில் விஜய்யை ரசிகர்களை சந்திக்க வைத்தேன்.

இமாலய ட்ரிப்பில் எஸ்.ஏ.சி
இமாலய ட்ரிப்பில் எஸ்.ஏ.சி (S A Chandrasekhar Twitter)

இமாலய ட்ரிப் ஒரு பேஷன். சினிமா செய்யும் போது எப்படி ஒரு பேஷன் வருகிறது. படம் பண்ணும் போது 60 நாட்கள் எப்படி மூழ்கிப் போகிறோம்; அப்படி தான் ட்ரிப் போகும் போதும், ஒரு ஈடுபாடு. கேதார்நாத் போகும் போது 4 டிகிரி குளிர். அந்த குளிரில், இரவு 11 மணி முதல் காலை 4 மணி வரை ஸ்பெஷல் தரிசனம். அதற்கு ஸ்பெஷல் கட்டணம். இரவு 1:45 க்கு 5 ஆயிரம் கட்டி, 5 பேருக்கு சிறப்பு தரிசனம் ஸ்லாட் கிடைத்தது.

16 கி.மீ., நடந்தே மலைப்பாதையில் சென்றோம். இந்த முறை 10 கி.மீ., தான் போனேன்; அதற்கு மேல் போக முடியவில்லை. குதிரையில் போனேன். குதிரையில் போவது, நடப்பதை விட கொடுமையானது. வரும் போது ஹெலிகாப்டரில் தான் திரும்பி வந்தேன்.

இவ்வளவு சிரமத்திற்குள் சினிமாவை என்னால் விடமுடியாது. சினிமாவை நிறுத்தினால், மூச்சு நின்றுவிடும். ஏதாவது ஒரு உருவத்தில் சினிமாவில் இருக்க வேண்டும். அது தான் எனக்கு எனர்ஜி. அதை தொழிலாக சொல்லிவிட முடியாது; அது ஒரு காதல்.

எங்க காலத்தில் ஒரு இயக்குனராகும் முன் குருகுலம் மாதிரி இயக்குனர்களிடம் உதவி இயக்குனர்கள் பணியாற்றினர். என்னிடம் உதவி இயக்குனராக இருந்த ஷங்கள், ராஜேஷ் எல்லாம் என்னை குரு என்பார்கள். இப்போது உதவி இயக்குனர்கள், எங்க டைரக்டர் என்பார்கள், அல்லது பெயரை கூறுவார்கள். அவ்வளவு வித்தியாசம் வந்துவிட்டது’’

என்று அந்த பேட்டியில் எஸ்.ஏ.சி., பேசினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.