'தலித்'என்கிற சொல்லை பிறப்பின் அடையாளமாக பார்க்காமல்..ராஜ் கௌதமனுக்கு அரசு மரியாதை கொடுங்க’ - பா.ரஞ்சித்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'தலித்'என்கிற சொல்லை பிறப்பின் அடையாளமாக பார்க்காமல்..ராஜ் கௌதமனுக்கு அரசு மரியாதை கொடுங்க’ - பா.ரஞ்சித்

'தலித்'என்கிற சொல்லை பிறப்பின் அடையாளமாக பார்க்காமல்..ராஜ் கௌதமனுக்கு அரசு மரியாதை கொடுங்க’ - பா.ரஞ்சித்

Kalyani Pandiyan S HT Tamil
Nov 13, 2024 03:04 PM IST

'தலித்' என்கிற சொல்லை பிறப்பின்'தலித்' என்கிற சொல்லை பார்க்காமல், அதை ஒரு குணாம்சமாக கருதினார், வரலாறு முழுக்க வெளிப்பட்ட அதிகாரத்திற்கு எதிரான மனநிலையே அது என்றார். - பா.ரஞ்சித்

தலித் என்கிற சொல்லை பிறப்பின் அடையாளமாக பார்க்காமல்..ராஜ் கௌதமனுக்கு அரசு மரியாதை கொடுங்க’ - பா.ரஞ்சித்
தலித் என்கிற சொல்லை பிறப்பின் அடையாளமாக பார்க்காமல்..ராஜ் கௌதமனுக்கு அரசு மரியாதை கொடுங்க’ - பா.ரஞ்சித்

1950 ஆம் ஆண்டு பிறந்தவர் ராஜ் கெளதமன். மார்க்ஸிய, தலித் பார்வை கொண்ட இவருக்கு, பேராசிரியர், நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர் என பல முகங்கள் உண்டு. புதுவை காரைக்கால் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக பணியாற்றிய அவர், காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் தலைமைப் பேராசிரியராக பணியாற்றி, கடந்த 2011 -ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

 

ராஜ் கெளதமன்
ராஜ் கெளதமன்

தன் வரலாற்றுத்தன்மைக்கொண்ட, சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை, லண்டனில் சிலுவைராஜ் ஆகிய மூன்று நாவல்களை இவர் எழுதி வெளியிட்டு இருக்கிறார். அது மட்டுமல்ல, கூடவே பல்வேறு பண்பாட்டு ஆய்வு நூல்களையும், இலக்கிய ஆய்வு நூல்களையும், மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியிருக்கும் இவர், பாவாடை அவதாரம் என்ற சிறுகதைத் தொகுதியையும் எழுதி இருக்கிறார். இந்த நிலையில் இவருக்கு அரசு மரியாதை வேண்டுமென்று பா.ரஞ்சித் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

பா.ரஞ்சித் அறிக்கை

அந்த அறிக்கையில், “தமிழ்ச் சமூகத்தின் ஒப்பற்ற அறிஞர் ராஜ்கௌதமன் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவருடைய ஆய்வு, புனைவு, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என்று அனைத்திலுமே நவீன முறையை கையாண்டவர், தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்.

 

பா.ரஞ்சித்
பா.ரஞ்சித்

தலித் திறனாய்வு முறையியல் உருவான போது, அதன் முதன்மை முகமாய் இருந்தவர். கற்றுத்தேர்ந்த கோட்பாடுகளின் மூலம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளாமல், கற்ற அனைத்தையும் அடித்தட்டு மக்களின் வரலாற்றை புரிந்துக்கொள்ளவும் அவர்களின் அரசியலை நிறுவவும் எழுதியவர். 'தலித்' என்கிற சொல்லை பிறப்பின் அடையாளமாக பார்க்காமல், அதை ஒரு குணாம்சமாக கருதினார், வரலாறு முழுக்க வெளிப்பட்ட அதிகாரத்திற்கு எதிரான மனநிலையே அது என்றார்.

அழுத்தம் திருத்தமாக

புனைவும் அரசியலும் வெவ்வேறல்ல என அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தவர். இந்த முறைமையை கையாண்டு சங்க இலக்கியம் தொட்டு சமகால இலக்கியம் வரை ஆய்வு செய்தவர் என்றாலும், படைப்பு குணாம்சத்தின் நுட்பங்களை கணக்கில் கொண்டே அவற்றை மறுவாசிப்புக்குள்ளாக்கினார்.

படைப்பூக்கத் தன்மையும், ஆய்வும், அரசியலும் வெவ்வேறல்ல என நம் ஒவ்வொருவருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்த எழுத்தாளர், ஐயா ராஜ் கௌதமன் தமிழ் அறிவு வரலாற்றில் என்றும் நீடித்திருக்கக் கூடியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் இலக்கியத்திற்கும், ஆய்வு உலகத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாய் தமிழ்நாடு அரசு அவருக்கு அரசு மரியாதையுடன் கூடிய அஞ்சலி செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்று அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.