kasthuri Raja: ‘நீ தேவா ஆளாச்சேனு இளையராஜா கேட்டார்’ கஸ்தூரி ராஜா ப்ளாஷ்பேக்!
kasthuri raja About Ilaiyaraaja: ‘நான் இயக்குனர் தான்ப்பா… அவருடனும் படம் பண்ணிருக்கேன்’ என்று அந்த செக்யூரிட்டி இடம் கூறினால், அவர், ‘வரும் எல்லாரும் இதை தான் சொல்றான்’ என்று கடிந்து கொள்கிறார்.
இளையராஜாவிடம் பணியாற்றிவிட்டு தேவாவிடம் சென்று இயக்குனர் கஸ்தூரி ராஜாவிற்கு அதன் பின் மீண்டும் இளையராஜாவை தேடிச் சென்ற போது நடந்தவை பற்றி கஸ்தூரி ராஜா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இதோ அந்த பேட்டி:
‘இளையராஜாவும் ராஜ்கிரணும் ரொம்ப நெருக்கம். அதனால் ராஜாவின் மனசில கதையை அவரிடம் சொன்னதும் ஓகே சொல்லிட்டார். ஈஸியாக நாங்கள் இணைந்துவிட்டோம். அதன் பின் என்னுடன் தேவா வந்துவிட்டார். 5 படம் நானும் தேவாவும் பண்ணோம். அவரும் எனக்கு துரோகம் பண்ணவில்லை. நல்லா பண்ணார். இந்த இடைப்பட்ட காலத்தில் தேவா இசைக்கு பாட்டு எழுதி ஹிட் ஆகிவிட்டேன்.
அப்போ ஒரு நாள் ‘ஏன் இளையராஜாவை நாம் கூப்பிடவில்லை’ என்கிற உறுத்தல் எனக்கு வந்தது. என்ன செய்யலாம் இளையராஜாவிடம் போவதற்கு என யோசித்தேன். அவர் இசையில் பாட்டு எழுத வேண்டும், அதற்காக ஒரு படம் தயாரிக்கலாம் என முடிவு செய்தேன்.
இளையராஜாவிடம் சென்றால், செக்யூரிட்டி உள்ளே விடமாட்டேன் என்கிறார். அப்போது, நான் 6 படங்கள் பண்ணியிருந்தேன். ‘நான் இயக்குனர் தான்ப்பா… அவருடனும் படம் பண்ணிருக்கேன்’ என்று அந்த செக்யூரிட்டி இடம் கூறினால், அவர், ‘வரும் எல்லாரும் இதை தான் சொல்றான்’ என்று கடிந்து கொள்கிறார். உள்ளே பார்த்திபன் படத்தின் கம்போசிங் நடந்து கொண்டிருக்கிறது.
பார்த்திபன், வந்து அந்த செக்யூரிட்டியை திட்டி என்னை உள்ளே அழைத்துச் சென்றார். ராஜா சாரை பார்த்தேன், என்ன என்று கேட்டார். ‘அண்ணே ஒரு படம் பண்ணனும்’ என்று கேட்டேன். ‘இல்லையா… நீ தான் ஓடிப் போயிட்டீயே… உனக்கு தான் தேவா இருக்கிறாரே’ என்று கூறினார்.
‘இல்லைன்ணே… வந்துட்டேன்… சொல்லுங்க… பண்ணலாம்’ என்று நான் கூறினேன். ‘சரி, கதை பண்ணிட்டு வா…’ என்று கூறிவிட்டார். அனுமதி கிடைத்ததும் தான், நாட்டுப்புறப்பாட்டு என்கிற கதையை தயார் செய்து, அவர் வந்து விளக்கு போட்டார்.
சாலையிலிருந்து வீடு வரை அவர் வரும் வழி நெடுக பூத்தூவி வரவேற்றேன். அவர் வந்து இறங்கியதும், ‘என்னய்யா இப்படி பண்ணுட்ட… நான் பூவை மிதிக்க மாட்டேன்… ஒதுக்குய்யா கொஞ்சம்’ என அதன் பின் உள்ளே வந்து விளக்கு ஏற்றினார்.
என் ராசாவின் மனசிலே, நாட்டுப்புற பாட்டு என எல்லாமே பெரிய ஹிட். அடுத்து துள்ளுவதே இளமை பெரிய ஹிட். அந்த படத்தை நான் எடுத்தே ஆக வேண்டிய கட்டாயம். கடன்காரர்களை சமாளிப்பதற்காக எடுத்தே ஆக வேண்டிய படம். மாலை கருக்கலிலே என்கிற கதையை ராணிமுத்துவில் எழுதினேன். எழுதி படித்த போது அது கிளாமராக இருந்தது. அதனால் அதை படமெடுக்க விரும்பாமல் வைத்துவிட்டேன்.
ஒருநாள் ரயிலில் சென்ற செல்வராகவன் அந்த புத்தகத்தை படித்துவிட்டு, என்னிடம் வந்து ஏன் இதை படமாக்கவில்லை என்று கேட்டார். ‘இல்லப்பா அது கொஞ்சம் கிளாமரா இருக்கு; நான் குடும்ப கதையோடு போய்டு இருக்கேன்’ என்றேன். ‘போங்கப்பா… அதை தூக்கி போடுங்க… இது தான் இப்போ ட்ரெண்ட்’ என கூறி, அவர் தான் துள்ளுவதோ இளமை படம் எடுக்க காரணம்.
அந்த படம் எடுக்கும் போது எனக்கு மார்க்கெட்டில் வேல்யூ இல்லை. அந்த எரிச்சலில் தான் அந்த படத்தை எடுத்தேன்,’’
என்று கஸ்தூரி ராஜா அந்த பேட்டியில் கூறியிருந்தார்.
டாபிக்ஸ்