Kushi: ‘இடுப்பை எடுக்க 3 நாள்..’ குஷி சீன் சீக்ரட் சொன்ன எஸ்.ஜே.சூர்யா!
S.J.Suriya: ‘பாட்டு, ஃபைட் வைத்து தான் ஹிட் தர வேண்டும், அதை தான் மக்கள் பார்ப்பார்கள் என்று இல்லை. சமீபத்தில் பார்த்தீர்கள் என்றால், 96, திருச்சிற்றம்பலம் படங்களை பார்த்தீர்கள் என்றால், அதில் எந்த கமர்ஷியல் விசயமும் இருக்காது’
முன்னாள் இயக்குனரும், இந்நாள் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியில், சுவாரஸ்யமான சில தகவல்களை பகிர்ந்துள்ளார். இதோ அவரது பேட்டி:
‘‘என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ், ஆசிர்வாதத்தால் கிடைத்துள்ளது. நல்ல படங்கள், நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்திருக்கிறது. அடைய வேண்டிய இடத்தை நோக்கி, பாதை வேகமாக போகும் என்கிற நம்பிக்கை கிடைத்துள்ளது.
வில்லன் என்னோட இலக்கு கிடையாது. நம்ம இலக்கை நோக்கி போகும் பாதையில் ஒரு மைல்ஸ்டோன் என எடுத்துக் கொள்ளலாம். எனக்கு ஹீரோ தான் விருப்பம். இன்று இருக்கிற டாப் ஹீரோக்கள் எல்லாருமே நெகட்டிவ் ரோல் பண்ணிட்டு வந்தவங்க தான். ரஜினி சார், கமல் சார் எல்லாருமே நெகட்டிவ் ரோல் பண்ணிட்டு தான் இந்த இடத்திற்கு வந்திருக்காங்க. நெகட்டிவ் கடந்து வரும் போது தான், நல்ல ரீச் கிடைக்கிறது.
வித்தியாசமான எண்ணத்தில் உருவானது தான் நியூ படம். அது மாதிரியான எண்ணங்கள் தான் இப்போது என்னுடைய கதவை தட்டுகிறது. முன்பு நான் கதவை தட்டிக் கொண்டிருந்தேன். அதை நான் ஆசிர்வாதமாக தான் பார்க்கிறேன்.
கமர்ஷியல் படங்களும் ஹிட் ஆகும், ஃப்லாப் ஆகும். அதை சரியாக செய்ய வேண்டும், அப்போது தான் ஹிட் கிடைக்கும். பாட்டு, ஃபைட் வைத்து தான் ஹிட் தர வேண்டும், அதை தான் மக்கள் பார்ப்பார்கள் என்று இல்லை. சமீபத்தில் பார்த்தீர்கள் என்றால், 96, திருச்சிற்றம்பலம் படங்களை பார்த்தீர்கள் என்றால், அதில் எந்த கமர்ஷியல் விசயமும் இருக்காது.
எமோசன் கனெக்ட் ஆகிவிட்டதால், அதுவே பெரிய கமர்ஷியல் தான். என்னிடம் வரும் கதையை, நான் நடிகனாகவோ, இயக்குனராகவோ கேட்க மாட்டேன். ஆடியன்ஸாக தான் கேட்பேன். மாநாடு கதை கேட்கும் போது, வெங்கட் பிரபு சாரை எழுந்து கட்டிப்பிடித்துவிட்டேன்.
இசை மீது சின்ன வயதில் இருந்தே ஆசை இருந்தது. ரெக்கார்டு ப்ளையர் வைத்திருந்தார். அவரது தொழில் அது தான். சீர்காழி சிதம்பரம் பாடல்களை கேட்பேன். அப்படி தான் இசை மீது ஆசை ஆரம்பத்தில் இருந்தது. அப்படி தான் இசை படத்தில், இசையமைப்பாளர் ஆனேன்.
குஷி படத்தில் விஜய்-ஜோதிகா மொட்டை மாடியில் பேசிக் கொள்ளும் இடுப்பு சீன், மூன்று நாட்கள் எடுத்தோம். எல்லாரும் செம்ம கடுப்பாகிட்டாங்க. ‘என்னய்யா.. குளோஸ்அப் ஷாட்டை மூன்று நாளா எடுக்குற’ என்று கேட்டார்கள். விமான போவதை ஒரு நாள் மட்டும் காத்திருந்து எடுத்தோம். மற்றபடி, சத்தத்தை வைத்து தான் முழுவதும் கவர் செய்தோம்,’’
என்று அந்த பேட்டியில் எஸ்.ஜே.சூர்யா கூறியிருந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்