‘எச்சரித்து அனுப்பினேன்’ - விக்னேஷ் சிவன் ஹோட்டலை கேட்டாரா இல்லையா? - அமைச்சர் விளக்கம்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘எச்சரித்து அனுப்பினேன்’ - விக்னேஷ் சிவன் ஹோட்டலை கேட்டாரா இல்லையா? - அமைச்சர் விளக்கம்!

‘எச்சரித்து அனுப்பினேன்’ - விக்னேஷ் சிவன் ஹோட்டலை கேட்டாரா இல்லையா? - அமைச்சர் விளக்கம்!

Kalyani Pandiyan S HT Tamil
Dec 16, 2024 08:28 PM IST

‘புதுச்சேரியில் படப்பிடிப்பு மற்றும் இசை நிகழ்ச்சிக்கான அனுமதி கேட்டுதான் விக்னேஷ் சிவன் என்னிடம் பேசினார். அதற்கு நான்’ - அமைச்சர் விளக்கம்!

‘எச்சரித்து அனுப்பினேன்’ -  விக்னேஷ் சிவன் ஹோட்டலை கேட்டாரா இல்லையா? - அமைச்சர் விளக்கம்!
‘எச்சரித்து அனுப்பினேன்’ - விக்னேஷ் சிவன் ஹோட்டலை கேட்டாரா இல்லையா? - அமைச்சர் விளக்கம்!

 

விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன்

இந்த நிலையில், அதற்கு விளக்கம் கொடுத்த விக்னேஷ் சிவன், ‘ புதுச்சேரி அரசின் சொத்தினை தான் விலைக்கு வாங்க முயற்சித்ததாக, என்னைப் பற்றி ஒரு கேவலமான செய்தி வலம் வந்துகொண்டு வருகிறது. அதற்குண்டான பதில் தான் இது. நான் பாண்டிச்சேரிக்கு சென்றது அங்குள்ள ஏர்போர்ட்டை பார்த்து, என்னுடைய ‘லவ் இன்ஸ்யூரன்ஸ் கம்பனி’ திரைப்படத்துக்கு ஷூட்டிங் அனுமதி பெறத்தான்.

இதுதொடர்பாக மரியாதை நிமித்தமாக, மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி அவர்களையும், புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களையும் சந்தித்தேன். ஆனால், யாரும் எதிர்பார்க்காதவிதமாக, என்னுடன் வந்த அப்பகுதியைச் சார்ந்த ஒரு லோக்கல் மேனேஜர் சில விஷயங்களை அவருக்காக கேட்டார். அந்த மீட்டிங்கிற்குப் பின், அது என்னுடன் தவறுதலாக இணைத்து புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக, என்னைப்பற்றி உருவான மீம்ஸ்களும் ஜோக்குகளும் உண்மையிலேயே நகைச்சுவையாக இருந்தன. அந்த மீம்கள் இன்ஸ்பயரிங்காக இருந்தாலும், இது தேவையற்றது தான். இதைத்தான் நான் தெளிவுபடுத்தவிரும்புகிறேன். அனைவருக்கும் நன்றி'’ என இயக்குநர் விக்னேஷ் சிவன் தெளிவுபடுத்தியிருந்தார்.

அமைச்சர் விளக்கம்

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். அதில், ‘ புதுச்சேரியில் படப்பிடிப்பு மற்றும் இசை நிகழ்ச்சிக்கான அனுமதி கேட்டுதான் விக்னேஷ் சிவன் என்னிடம் பேசினார். அதற்கு நான் அரசு நிர்ணயிக்கும் தொகையைச் செலுத்திய பின்னர், நிபந்தனையுடன் நடத்தலான் என்று கூறினேன். அவருடன் திரைத்துறையில் இருப்பவர்தான் ஹோட்டலை விலைக்குப் பேசினார். அவரை எச்சரித்து அனுப்பினேன்’ என்று பேசி இருக்கிறார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.