தனுஷ் காட்டுல மழை தான்! அடுத்த ஹாலிவுட் எண்ட்ரி தயார்! ஜோடி யார் தெரியுமா?
தமிழில் இயக்கம், நடிப்பு என செம பிஸியாக கலக்கி வரும் நடிகர் தனுஷ் மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் தனுஷ் இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை ஏற்கனவே நிரூபித்துவிட்டார். இந்தியிலும் ஆங்கிலத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளிவந்த பல படங்கள் அந்தந்த மொழியின் ரசிகர்களின் வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் சமீபத்தில் இரண்டாவதாக இயக்கிய ராயன் படத்தில் நடித்திருந்தார். இப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
இந்த நிலையில் அவர் தொடர்ந்து இயக்கத்தில் பிசியாக இருந்து வருகிறார். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி முடித்து இருந்த நிலையில் மேலும் இட்லி கடை படத்தினை இயக்கி வந்தார். மேலும் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்திலும் நடித்திருந்தார். இவ்வாறு நடிப்பு, இயக்கம் என முற்றிலும் பிசியாக இயங்கி வரும் நடிகர் தனுஷ் அடுத்ததாக மீண்டும் ஹாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹாலிவுட்டில் தனுஷ்
முன்னதாக 2018 ஆம் ஆண்டு ”தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்” படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகி இருந்தார். பின்னர் ஆண்டனி மற்றும் ஜோருஷோ இயக்கிய தி கிரே மேன் படத்தில் நடித்திருந்தார். ஹாலிவுட் படத்தில் நடிக்கும் இந்திய பிரபலங்களில் தனுஷ் முக்கியமானவராக கருதப்பட்டார். இவரது நடிப்பு தமிழ் திரையுலகிற்கு மிகவும் பெருமையான ஒன்றாகும்.
இந்நிலையில் தற்போது இவர் அமெரிக்கா நடிகை சிட்னி சீனி என்பவர் உடன் இணைந்து மற்றொரு படத்தில் கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ஸ்ட்ரீட் பைட்டர் எனவும் பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சோனி ப்ரொடக்ஷன் இந்த படத்தின தயாரிக்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது இருப்பினும் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் இயக்குனர்களுடன் தனுஷ் மீண்டும் இணையக்கூடும் என்று வதந்திகள் பரவிவந்தது. தற்போது மனி கன்ட்ரோல் என்ற ஆங்கில பத்திரிக்கை வெளியிட்ட அறிக்கையின்படி, தனுஷ் மற்றும் சிட்னி இருவரும் சோனி புரொடக்ஷன்ஸ் படத்திற்கு ஸ்ட்ரீட் ஃபைட்டர் என்ற தலைப்பில் இணையவுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் இருவரும் அவர்களது படங்களில் பிசியாக இருந்து வருகின்றனர். சமீபத்தில் லண்டன் சென்ற நடிகர் தனுஷிற்கு அதிரடியான வரவேற்பு அளிக்கப்பட்டு இருந்தது.
தமிழ் ரசிகர்களைக் காட்டிலும் மற்ற மொழி ரசிகர்களை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ள தனுஷ் தொடர்ந்து படங்களில் கமிட் ஆகி வருவது அவரது திரைப்பயணத்தில் மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகும். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யாவிடம் இருந்து விவகாரத்து பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்