அது இன்னும் என்னை வாட்டி வதைக்கிறது.. வெளிப்படையாக பேசிய தனுஷ்.. என்ன ஆச்சு?
தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் நடித்த 3 படத்திற்கு எழுதிய ஒய் திஸ் கொலவெறி பாடல் குறித்து பேசியுள்ளார்.
தனுஷ் மனைவி ஐஸ்வர்யா 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். 2012ம் ஆண்டில் வெளியான தனது முதல் படத்தில் கணவர் தனுஷை கதாநாயகனாகவும், ஸ்ருதி ஹாசனை கதாநாயகியாகவும் வைத்து மனநோயால் பாதிக்கப்பட்டவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து படம் எடுத்திருப்பார்.
ஒய் திஸ் கொலவெறி
இந்தப் படம் மக்கள் மத்தியில் ரீச் ஆனதற்கு முக்கிய காரணம் அந்தப் படத்தின் பாடல்கள் தான். காதல் உருகி உருகி படம் முழுக்க பாடல்கள் இருந்தாலும், உலகளவில் ஹிட் ஆன பாடல் ஒய் திஸ் கொலவெறி பாடல். இந்தப் பாடலை தனுஷே எழுதி பாடியும் இருப்பார்.
இந்நிலையில், நியூஸ் 18 நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் தனுஷிடம் இந்தப் பாடல் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய தனுஷ், கொலவெறி பாடல் 12 வருடம் கழித்தும் என்னை வாட்டி வதைத்து வருகிறது எனக் கூறினார்.
இவ்ளோ சென்சிடிவ் ஆகும்னு நெனக்கல
இந்தப் பாடல் எப்படி உருவானது என அவரிடம் தொகுப்பாளர் கேட்டார். அப்போது பேசிய தனுஷ், இந்த பாட்டை ரொம்ப லேட் நைட்ல தான் நாங்க ரெக்கார்ட் பண்ணினோம். அது மட்டும் தான் நியாபகம் இருக்கு. நாங்க வேடிக்கையாக இந்தப் பாட்டை எழுதி பாடிட்டு இருந்தோம். ஒருநாள் கம்யூட்டரை ஆன் பண்ணி பாக்கும் போது, கொலவெறி டி என ஒரு ஃபோல்டர் இருந்தது.
அதை ஓபன் பண்ணி பாக்த்தும் போது, நாங்க அந்த பாட்ட மொத்தமா ரெடி பண்ணிட்டோம்ங்குறது தெரிஞ்சது. ஆனா, இந்தப் பாட்டு இவ்வளவு சென்டிடிவ்வா மாறும்ன்னு நினைக்கல. நம்மாள சில விஷயங்கள திட்டம் போட்டு செய்ய முடியாது. அது தானா நடக்கணும். கடவுள் அதுக்கு நம்மள தகுதியானவங்களா பாக்கணும் என்றார்.
இளைஞர்களை இழுத்த பாடல்
காதலில் தோற்றுவிட்டதாகக நினைத்த நபர் தன் காதலியை பார்த்து கோவத்தில் பாடும் பாட்டாக இது அமைந்தது. தமிழ் சினிமாவில் தங்லிஷ்-ல் வந்த முதல் பாடல் இது. அதுவும் இளைஞர்களை கவரும் வகையிலான இசை, உணர்வு, வார்த்தைகளை பயன்படுத்தி இருந்ததால், அவர்களின் விருப்பப் பாடலாக மாறியது. பின் அது இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி, பின் உலகளவில் ஹிட் அடித்தது.
இது படத்திற்கே பலவீனம்
முன்னதாக இந்தப் பாடலைப் பற்றி பேசிய தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா, 3 படம் வெளியாகும் முன்னே பாடல் உலகம் முழுவதும் ஹிட் ஆனதால் படத்தின் மீதான மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இது படத்திற்கு புரொமோஷனாக அமைந்தாலும், இது தேவையற்ற ஹைப்பை கொடுத்து விமர்சன ரீதியான பாதிப்பைத் தான் தந்தது என்றார். இந்தப் பாடல் படத்திற்கு பலமாக இல்லாமல் இதுவே பலவீனமாக அமைந்தது என்றார்.
மேலும், படம் பேச வந்த கதையைப் பற்றி விவாதிக்காமல் பாடலைப் பற்றியே பேசியதால், இந்தப் பாடல் மொத்த படத்தையும் விழுங்கி விட்டது என்றார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்