Jr NTR Injury: ஓர்க் அவுட்டின்போது காயம்! பொருப்படுத்தாமல் தேவாரா ஷுட்டிங்கில் நடித்த ஜூனியர் என்டிஆர் - என்ன நடந்தது?-jr ntr suffers injury on his wrist will be back at work soon - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jr Ntr Injury: ஓர்க் அவுட்டின்போது காயம்! பொருப்படுத்தாமல் தேவாரா ஷுட்டிங்கில் நடித்த ஜூனியர் என்டிஆர் - என்ன நடந்தது?

Jr NTR Injury: ஓர்க் அவுட்டின்போது காயம்! பொருப்படுத்தாமல் தேவாரா ஷுட்டிங்கில் நடித்த ஜூனியர் என்டிஆர் - என்ன நடந்தது?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 14, 2024 05:55 PM IST

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் சமீபத்தில் காயம் இருந்தபோதிலும் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேவாரா படத்தின் படப்பிடிப்பை முடித்தார். இப்படத்தில் ஜான்வி கபூர் மற்றும் சைஃப் அலிகான் ஆகியோரும் நடிக்கின்றனர்.

படப்பிடிப்பின் போது காயம்..! பொருப்படுத்தாமல் நடித்த ஜூனியர் என்டிஆர்
படப்பிடிப்பின் போது காயம்..! பொருப்படுத்தாமல் நடித்த ஜூனியர் என்டிஆர்

இதுபற்றி எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாமல் இருந்த வந்த நிலையில், தற்போது முதல் முறையாக ஜூனியர் என்டிஆருக்கு ஏற்பட்டிருக்கும் காயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஜூனியர் என்டிஆர் குழு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நடிகர் ஜூனியர் என்டிஆர் மணிக்கட்டு பகுதியில் சிறிய காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அவர் அதிலிருந்து மீண்டு வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் அவர் மீண்டும் தனது பணிக்கு திரும்புவார் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஜூனியர் என்டிஆர் உடல்நிலை அப்டேட்

ஜூனியர் என்டிஆர் காயம் குறித்த அவரது குழுவின் அறிக்கை பின்வருாறு, "என்டிஆர் சில நாள்களுக்கு முன்பு ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது இடது மணிக்கட்டில் லேசான சுளுக்கு ஏற்பட்டது. அவரது கை அசைக்க முடியாமல் இருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் படப்பிடிப்பில் பங்கேற்றார். 

கைகளில் காயம் இருந்தபோதிலும், தேவாரா படப்பிடிப்பில் தனது காட்சிகளில் நடித்து முடித்தார். தற்போது வேகமாக குணமடைந்து வருகிறார்.  இன்னும் ஓரிரு வாரங்கள் ஓய்வில் இருப்பார். அதன் பின்னர் அவர் பணிக்கு திரும்புவார். இதற்கிடையே, இந்த சிறிய காயம் தொடர்பான வெளியிடப்படும் ஊகங்களை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜூனியர் என்டிஆர் கையில் கட்டு அணிந்தவாறு இருக்கும் புகைப்படத்துடன் இந்த அப்டேட் பகிரப்பட்டுள்ளது. 

தேவாரா பகுதி 1

தெலுங்கு சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படாக தேவாரா பகுதி 1 உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டாக நடிகர் ஜூனியர் என்டிஆர் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக அவர் பகிரந்த் பதிவில், "தேவரா பார்ட் 1 படத்துக்கான எனது இறுதி ஷாட்டை முடித்தேன். என்ன ஒரு அற்புதமான பயணம் அது. அன்பின் கடலையும் நம்பமுடியாத அணியையும் நான் இழக்க நேரிடும். 

செப்டம்பர் 27 அன்று சிவா உருவாக்கிய உலகுக்கு அனைவரும் பயணிக்கும் வரை காத்திருக்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.

ஜான்வி கபூர் அறிமுக படம்

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநராக இருந்து வரும் கொரட்லா சிவா, தேவாரா பார்ட் 1 படத்தை இயக்குகிறார். பாலிவுட் சினிமாவின் இளம் கதாநாயகியாக இருந்து வரும் ஜான்வி கபூர் இந்த படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார். அதேபோல் பாலிவுட் ஹீரோவான சையிஃப் அலிகானும் இந்த படத்தில் நடிப்பதன் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார்.  தேவாரா: பகுதி 1 படம் செப்டம்பர் 27, 2024 அன்று திரைக்கு வரவுள்ளது.

ரசிகர்கள் பெருமையுடன் காலரை தூக்குவார்கள்

சமீபத்தில், ஜூனியர் என்.டி.ஆர் தேவாரா: பார்ட் 1 படத்துக்காக நீண்ட நேரம் காத்திருப்பது பற்றி பேசினார், அது மதிப்புக்குரியதாக இருக்கும் என்று உறுதியளித்தார். ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "தேவராவுக்கான காத்திருப்பு மதிப்புக்குரியதாக இருக்கும் என்பதும், படம் வெளியானதும் ஒவ்வொரு ரசிகரும் பெருமையுடன் தங்கள் காலரை உயர்த்துவார்கள் என்பதும் உங்கள் அனைவருக்கும் எனது வாக்குறுதி" என்று கூறினார்.

 

ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகும் தேவாரா படத்தில் சைஃப் பைராவாகவும், ஜான்வி தங்கமாகவும் நடிக்கிறார்கள். யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் தயாரிப்பில், நந்தமுரி கல்யாண் ராம் வழங்கும், தேவாரா: பார்ட் 1 படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் இருந்த கடந்த சில நாள்களுக்கு முன்னர் சுட்டமல்லி என்ற பாடல் வெளியாகி ட்ரெண்ட் ஆனது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.