தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Cook With Comali: குக் வித் கோமாளி டைட்டில் பட்டம் வென்றவருக்கு இவ்வளவு பரிசு தொகையா?

Cook With Comali: குக் வித் கோமாளி டைட்டில் பட்டம் வென்றவருக்கு இவ்வளவு பரிசு தொகையா?

Aarthi V HT Tamil
Jul 24, 2023 12:13 PM IST

குக் வித் கோமாளி டைட்டில் பட்டம் வென்றவருக்கு கிடைத்த பரிசு தொகை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

குக் வித் கோமாளி
குக் வித் கோமாளி

ட்ரெண்டிங் செய்திகள்

முதல் சீசனில் பட்டம் வென்றார் வனிதா விஜயகுமார். இதன் பிறகு இரண்டாவது சீசனில் பிரபல இயக்கநர் அகத்தியனின் மகளும், திருவின் மனைவியுமான கனி முதலிடம் பெற்றார். மூன்றாவது சீசனில் பிரபல நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி நடிகை ஸ்ருதிகா டைட்டிலை வென்றார்.

இதைத் தொடர்ந்து தற்போது நான்காவது சீசன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால் வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விசித்ரா, ஸ்ருஷ்டி, சிவாங்கி, மைம் கோபி, கிரண் மற்றும் ஆண்ட்ரியான் ஆகியோர் தற்போது இறுதிப் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் விஜய் டிவி பிரபல சிவாங்கி டைட்டில் வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் மைம் கோபி டைட்டில் வென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு அடுத்தபடியாக ஸ்ருஷ்டி இரண்டாம் இடத்தையும், விசித்ரா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இம்முறை வெற்றி பெறுபவருக்கு 10 லட்சம் ரொக்கப் பரிசு கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இரண்டாவது இடத்தை பிடித்தவருக்கு 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என கூறப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்