Complaint Against Director Cheran: நடவடிக்கை தேவை! நடுரோட்டில் நடந்த சம்பவம் - சிசிடிவி காட்சிகளுடன் சேரன் மீது புகார்-complaint against director cheran on his heated argument in road with private bus driver - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Complaint Against Director Cheran: நடவடிக்கை தேவை! நடுரோட்டில் நடந்த சம்பவம் - சிசிடிவி காட்சிகளுடன் சேரன் மீது புகார்

Complaint Against Director Cheran: நடவடிக்கை தேவை! நடுரோட்டில் நடந்த சம்பவம் - சிசிடிவி காட்சிகளுடன் சேரன் மீது புகார்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 16, 2024 12:55 AM IST

கடலூரில் பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதம் செய்த விவகாரத்தில் சிசிடிவி காட்சிகளுடன் சேரன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Complaint Against Director Cheran: நடுரோட்டில் நடந்த சம்பவம் - சிசிடிவி காட்சிகளுடன் சேரன் மீது புகார்
Complaint Against Director Cheran: நடுரோட்டில் நடந்த சம்பவம் - சிசிடிவி காட்சிகளுடன் சேரன் மீது புகார்

இந்த விவகாரத்தில் இயக்குநர் சேரன் மீது நடவடிக்கை தேவை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சிகளுடன் சேரன் மீது புகார்

கடலூரில் தனியார் பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இயக்குநர் சேரன் மீது போலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவான சிசிடிவி காட்சிகளை அளித்து, இயக்குநர் சேரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட இந்த புகாரில் இயக்குநர் சேரன் நடுவழியில் தகராறு செய்தது தவறு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவ்வுகிழிய ஹாரன் காரணமாக சத்தம் எழுப்பிய சேரன்

கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு தினமும் அதிக அளவில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் புறப்படும் இடைவெளியானது, மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்குள் இருக்கிறது. இதனால் பயணிகளை முதலில் ஏற்றிக்கொள்ள, அந்த பேருந்துகள் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொண்டு அதிவேகமாக செல்வதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, இந்த தனியார் பேருந்துகள் அதிகளவு ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தி, மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த சாலையில் நடிகர் சேரன் காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காருக்கு பின்னால் வந்த தனியார் பேருந்து ஒன்று, தொடர்ந்து ஒலி எழுப்பி கொண்டே வந்திருக்கிறது. சேரன் கார் இடம் கொடுத்து ஒதுங்குவதற்கு இடம் இல்லாத நிலையிலும் கூட, அந்த பேருந்து ஓட்டுனர் தொடர்ந்து ஒலியை எழுப்பிக் கொண்டே வந்ததாக தெரிகிறது. இதையடுத்து கோபமான நடிகர் சேரன், நடுரோட்டில் வாகனத்தை நிறுத்திகாரிலிருந்து இறங்கி ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சேரன் வாக்குவாதம்

ஒதுங்குவதற்கு இடமில்லாத போது எப்படி ஒதுங்கி இடம் கொடுக்க முடியும் என்று அந்த ஓட்டுநரை அவர் சாடினார். இதையடுத்து அந்த பேருந்தின் நடத்துநர், அங்கிருந்த மக்கள் என அனைவரும் சேர்ந்து சேரணையும், ஓட்டுனரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இறுதியாக பேசிய சேரன் நானும் அடிக்கடி இந்த சாலையில் பயணிக்கிறேன். ஒவ்வொரு முறையும் இதுபோன்ற தனியார் பேருந்துகள் அதிக அளவு ஒலிஎழுப்பில் வேகமாக சென்று மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. இதற்கு போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சேரனின் ஜர்னி

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளராக இருந்து வரும் சேரன் கடைசியாக 2019இல் வெளியான திருமணம் என்ற படத்தை இயக்கினார். அதேபோல் இவர் கடைசியாக நடித்த படமாக தமிழ் குடிமகன் கடந்த ஆண்டில் வெளியானது.

இதைத்தொடர்ந்து சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியான ஜர்னி என்ற சீரிஸை இயக்கியிருந்தார். மொத்தம் 9 எபிசோடுகள் கொண்ட இந்த சீரிஸ் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. சரத்குமார், பிரசன்னா, ஆரி அர்ஜுனன், கலையரசன், திவ்யா பாரதி பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த தொடர் நல்ல வரவேற்பும் பெற்றது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.