Cheran: சவ்வுகிழிய சவுண்ட் எழுப்பிய ஓட்டுநர்.. இறங்கி வந்தேன்னா மவனே.. நடுரோட்டில் சேரன் வாக்குவாதம்! -நடந்தது என்ன?
Cheran: காரை பின்னால் துரத்தி வந்த பேருந்து ஓட்டுநருடன் இயக்குநரும், நடிகருமான சேரன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார் - நடந்தது என்ன?

சவ்வுகிழிய ஹாரன் சத்தம் எழுப்பிய சேரன்
கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு தினமும் அதிக அளவில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் புறப்படும் இடைவெளியானது, மூன்று முதல் ஐந்து நிமிடங்களுக்குள் இருக்கிறது. இதனால் பயணிகளை முதலில் ஏற்றிக்கொள்ள, அந்த பேருந்துகள் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொண்டு அதிவேகமாக செல்வதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, இந்த தனியார் பேருந்துகள் அதிகளவு ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தி, மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயல்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர்
இந்த நிலையில், இன்றைய தினம் அந்த சாலையில் நடிகர் சேரன் காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காருக்கு பின்னால் வந்த தனியார் பேருந்து ஒன்று, தொடர்ந்து ஒலி எழுப்பி கொண்டே வந்திருக்கிறது. சேரன் கார் இடம் கொடுத்து ஒதுங்குவதற்கு இடம் இல்லாத நிலையிலும் கூட, அந்த பேருந்து ஓட்டுனர் தொடர்ந்து ஒலியை எழுப்பிக் கொண்டே வந்ததாக தெரிகிறது. இதையடுத்து கோபமான நடிகர் சேரன், நடுரோட்டில் வாகனத்தை நிறுத்திகாரிலிருந்து இறங்கி ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.