HBD King kong : ’உருவகேலி பண்ணாங்க’ சோதனையை சாதனையாக மாற்றியவர் நடிகர் கிங்காங்!
90 காலகட்டத்தில் கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற பல காமெடி நடிகர்கள் நடித்த படங்களில் நடித்து அசத்திய காமெடி நடிகர் கிங்காங் சங்கர் பிறந்த நாள் இன்று.
நகைச்சுவை நடிகர் கிங் காங். இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உண்மையான பெயர் சங்கர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளி வந்து வெற்றி நடை போட்ட அதிசய பிறவி என்ற படத்தின் மூலம் தான் நடிகர் கிங் காங் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் கிங் காங் ஆடிய டான்ஸ் அவ்வளவு நகைச்சுவையாக இருக்கும்.
அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். இதுவரை இவர் ஐந்து மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
இவர் அதிகமாக காமெடி நடிகர் வடிவேலுடன் இணைந்து செய்யும் நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் 1990 கால கட்டங்களில் காமெடி நடிகர் கவுண்டமணி, செந்தில் போன்ற பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்து இருக்கிறார்.
அதோடு நடிகர் கிங் காங் அவர்களுக்கு 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வேலூரில் உள்ள ஒரு பல்கலை கழக கல்லுரில் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கி இருந்தார்கள்.இதனைத் தொடர்ந்து சினிமாவில் இவருடைய நடிப்புத் திறனுக்காக தேசிய விருது வழங்கி உள்ளார்கள்.
இவர் கலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. சமீபத்தில் விஜய் இப்படி ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கிங் காங் தனது மகனுடன் கலந்து விளையாடி இருந்தார்.
இவர் தனியார் ஊடகத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சினிமாவில் எப்படி நுழைந்தார் என்ன மாதியான உருவக்கேலிக்கு ஆளானார் என்பது குறித்து கூறியிப்பார். அதில், நான் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். நான் ஐந்தாம் வகுப்பு வரை தான் படித்து இருக்கிறேன். பள்ளி படிக்கும் போதே என்னுடைய உருவத்தையும், என்னுடைய கண்ணையும் ரொம்ப கிண்டல் பண்ணுவாங்க.
இதற்காக ரொம்ப வருத்தப்பட்டும் இருக்கிறேன். பிறகு தான் நான் எனக்குள்ளேயே தன்நம்பிக்கையை வளர்த்து கொண்டு என்னிடம் உள்ள குறைகளை மறைத்து விட்டு என்னிடம் இருக்கிற நிறையை வெளிப்படுத்த வேண்டும் என முடிவு செய்தேன்.
அப்போது தான் பக்கத்து ஊரில் எனக்கு தெரிந்தவர் நாடக கம்பெனி ஒன்று ஆரம்பித்து இருந்தார். அதில் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தேன். நான் என்னுடைய 13 வயதில் நாடகத்துறையில் சேர்ந்தேன். பல நாடகங்களில் என்னுடைய திறமையை பார்த்து பலர் பாராட்டி சினிமாவிற்குள் செல் என்று சொன்னார்கள். அதற்கு பிறகு தான் நான் சினிமாவில் நுழைந்தேன்.
அப்படி தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அதிசியபிறவி படத்தின் மூலம் தான் நான் மக்கள் மத்தியில் பிரபலமானேன். கலைப்புலி சேகர் அவர்கள் தான் என்னுடைய பெயரை கிங்காங் என்று வைத்தார். நீ பார்க்க சிருசுனாலும் உன்னுடைய நடிப்பு நீ இருக்கனும் என்று சொன்னார்”என தெரிவித்தார்.
தன் வாழ்க்கையில் முதலில் சோதனைக் காலமாக அமைந்தாலும் பின்னாளில் அதனை சாதனை காலமாக மாற்றிய நடிகர் கிங்காங் சங்கர் பிறந்த நாளான இன்று அவருக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்மாக வாழ்த்துக்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.