வைகுந்தத்தில் நாராயணர் - லட்சுமி விவாகம்.. தடுக்க முயற்சிக்கும் அசுரன் ஹயக்ரீவன்! லட்சுமி நாராயணா நமோ நமஹ இந்த வாரம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வைகுந்தத்தில் நாராயணர் - லட்சுமி விவாகம்.. தடுக்க முயற்சிக்கும் அசுரன் ஹயக்ரீவன்! லட்சுமி நாராயணா நமோ நமஹ இந்த வாரம்

வைகுந்தத்தில் நாராயணர் - லட்சுமி விவாகம்.. தடுக்க முயற்சிக்கும் அசுரன் ஹயக்ரீவன்! லட்சுமி நாராயணா நமோ நமஹ இந்த வாரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Dec 11, 2024 04:01 PM IST

வைகுந்தத்தில் நாராயணர் - லட்சுமி விவாகம் நடைபெற இருக்க, அதை தடுக்க முயற்சிக்கிறான் அசுரன் ஹயக்ரீவன். இதன் பின்னர் நடந்தது என்ன என்பதை காட்டும் விதமாக லட்சுமி நாராயணா நமோ நமஹ இந்த வார எபிசோட் காட்சிகள் இடம்பெறவுள்ளன.

வைகுந்தத்தில் நாராயணர் - லட்சுமி விவாகம்.. தடுக்க முயற்சிக்கும் அசுரன் ஹயக்ரீவன்! லட்சுமி நாராயணா நமோ நமஹ இந்த வாரம்  எபிசோட் அப்டேட்
வைகுந்தத்தில் நாராயணர் - லட்சுமி விவாகம்.. தடுக்க முயற்சிக்கும் அசுரன் ஹயக்ரீவன்! லட்சுமி நாராயணா நமோ நமஹ இந்த வாரம் எபிசோட் அப்டேட்

இதையடுத்து இந்த வாரத்துக்கான எபிசோட் அப்டேட்டை பார்க்கலாம். நாராயணருக்கும் லட்சுமிக்கும் வைகுந்தத்தில் விவாகம். இந்த விவாகத்தை தடுத்து அசுரன் ஹயக்ரீவன் லட்சுமியை அடைய முயற்சிக்கிறார். நாரயணருக்கும் லட்சுமிக்கும் விவாகம் நடந்ததா என்பது காண்பிக்கப்படவுள்ளது.

லட்சுமியை அடையை நினைக்கும் ஹயக்ரீவன்

சிவன் பிரம்மா மற்றும் தேவர்கள் முன்னிலையில் அசுரன் ஹயக்ரீவன் தன் அசுரப்படைகளோடு வந்து லட்சுமி தனக்குத்தான் வேண்டும். நான் தான் விவாகம் செய்வேன் என்று பேராட்டம் செய்கிறான். நாராதர் மூலம் சேதி அறிகிறார் நாராயணர். நேராக லட்சுமியுடன் சிவனிடம் வருகிறார். அசுரன் ஹயக்ரீவனுக்கு, நாராயணர் லட்சுமி ஆதியில் யார் என்று எடுத்துச் சொல்லி கர்மாவால் மட்டுமே லட்சுமியை அடைய முடியும் என்றும் புரிய வைக்கிறார். மேலும் தான் மட்டுமே லட்சுமியை அடைய தகுதியானவன் என்றும் கூறுகிறார். இருப்பினும் அசுரன் கேட்பதாக இல்லை.

ஹயக்ரீவன் சபதம்

லட்சுமியை கர்மாவால் அல்ல, சூழ்ச்சியாலும் சதியாலும் அடைந்தே தீருவேன் என்று சபதம் செய்கிறான். அப்போது லட்சுமி அசுரன் ஹயக்ரீவனை நோக்கி நாராயணரிடம் யுத்தம் செய்ய தயாராகுமாறு சொல்கிறார்.

ஒருகணம் சிவன் பிரம்மா நராயணர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அடுத்து நாராயணரை நோக்கிய லட்சுமி "சுதர்ஷனச்சக்கரத்தை வெளியே எடுங்கள்" என்கிறார். நாராயணரும் சுதர்ஷனச்சக்கரத்தை வரவழைக்கிறார். உடனே சிவன் யுத்தத்தில் ஜெயிக்கப் போகிறவர்களுக்கு மாலை தர தயாராகிறார்.

லட்சுமியை அடையும் போட்டியில் ஜெயிக்கப்போவது நாராயணரா இல்லை அசுரன் ஹயக்ரீவனா என்கிற பரபரப்பு தொற்றுகிறது. சுதர்ஷனச்சக்கரத்தை எதிர்த்து தன் வலிமையான ஆயுதங்கொண்டு ஹயக்ரீவன் யுத்தம் செய்கிறான். முடிவில் தோற்றுப் போய் சோர்ந்து விழுகிறான். பழிவாங்கும் எண்ணத்துடன் அங்கிருந்து அகன்று செல்கிறான். நாராயணர் லட்சுமிக்கு மாலை சூடி மகிழ்கிறார்.

வைகுந்தத்தில் லட்சுமி - நாராயணர் இடையே விவாகம்

லட்சுமிக்கும், நாராயணருக்கும் விவாகம் வைகுந்ததில் துவங்குகிறது. சிவன் பிரம்மா மற்றும் தேவர்கள் வந்தவண்ணம் இருக்கின்றனர். அதேவேளை தோல்வியுடன் சென்ற அசுரன் ஹயக்ரீவன் நாராயணரின் சுதர்ஷனச்சக்கரத்தை வெல்லும் ஆயுதத்தை கண்டடைய முனைகிறான். தன் சகோதர்களை பிணையக்கைதியாக வைத்து தன் தந்தை கஷ்யப்ப முனிவர் மூலமே யாகத்தில் நாராயணரின் சுதர்ஷனச்சக்கரத்தை அழிக்கும் புதிய சக்கரம் ஒன்றை தோற்றுவிக்கச் செய்கிறான்.

இன்னொருபக்கம் வைகுந்தத்தில் லட்சுமிக்கும் நாராயணருக்குமான விவாகம் சிவன் தலைமையில் விமர்சையாக மஞ்சளுடன் தொடங்குகிறது. எங்கும் மகிழ்ச்சி ஆரவாரம். மணமேடையில் நாராயணரும் லட்சுமியும் அமர்ந்திருக்கின்றனர். பிரம்மா மந்திரங்கள் ஓதத் தொடங்கிகிறார். அப்போது புதிய சக்கரத்துடன் அசுரன் வைகுந்ததின் வாசற்படிக்கு வருகிறான். வைகுந்தக் காப்பாளர்கள் ஜெய் மற்றும் விஜய் அசுரன் ஹயக்ரீவனை தடுக்கின்றனர். மேலும் "தூய எண்ணம் இருந்தால் மட்டுமே வைகுந்தத்தினுள் நுழைய முடியும் என்கின்றனர்.

அசுரன் தன் வலிமையான புதிய சக்கர ஆயுதத்தை கையில் எடுக்கிறான். வைகுந்ததுக்குள் நுழைய முயற்சி செய்கிறான். அசுரன் ஹயக்ரீவன் லட்சுமிக்கும் நாராயணருக்கும் நடக்கும் விவாகத்தை தடுத்து நிறுத்தினானா? லட்சுமிக்கும் நாராயணருக்கும் விவாகம் நடந்து முடிந்ததா? அடுத்து நடக்கப்போவது என்ன? இப்படி பல திருப்பங்களுடன் இந்த வார லட்சுமி நாராயணா நமோ நமஹ தொடர் விறுவிறுப்பாக செல்கிறது.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகும் லட்சுமி நாராயணா நமோ நமஹ தொடரை காணத் தவறாதீர்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.