TOP TRENDING SANTHOSH NARAYANAN SONGS: ரீப்பிட் மோடில் வாழை, கல்கி..சந்தோஷ் நாராயணன் டாப் ட்ரெண்டிங் பாடல்கள் லிஸ்ட்-check out the top trending songs composed by santhosh narayanan - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top Trending Santhosh Narayanan Songs: ரீப்பிட் மோடில் வாழை, கல்கி..சந்தோஷ் நாராயணன் டாப் ட்ரெண்டிங் பாடல்கள் லிஸ்ட்

TOP TRENDING SANTHOSH NARAYANAN SONGS: ரீப்பிட் மோடில் வாழை, கல்கி..சந்தோஷ் நாராயணன் டாப் ட்ரெண்டிங் பாடல்கள் லிஸ்ட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 24, 2024 10:09 AM IST

Top Trending Santhosh Narayanan Songs: ரீப்பிட் மோடில் வாழை, கல்கி 2898 ஏடி ஆகிய பாடல்கள் ரசிகர்களால் கேட்கப்படுகின்றன. சந்தோஷ் நாராயணன் இசையில் டாப் ட்ரெண்டிங் லிஸ்டில் இருக்கும் பாடல்கள் இவை தான்

சந்தோஷ் நாரயணனின் டாப் ட்ரெண்டிங் பாடல்கள் லிஸ்ட்
சந்தோஷ் நாரயணனின் டாப் ட்ரெண்டிங் பாடல்கள் லிஸ்ட்

இந்த ஆண்டில் சந்தோஷ் நாரயணன் இசையமைப்பில் சைந்தவ், யாத்ர 2, அன்பேஷிப்பின் கண்டேதும், கல்கி 2898 ஏடி, அந்தகன், வாழை ஆகிய படங்கள் வரிசைகட்டி வந்துள்ளன. 2024இல் தமிழை காட்டிலும் பிற மொழிகளில் இவரது இசையமைப்பில் படங்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் சந்தோஷ் நாரயணன் இசையமைத்து டாப் ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்கள் எவை என்பதை பார்க்கலாம்

டா டக்காரா

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பியிருக்கும் கல்கி 2898ஏடி படத்தில் இடம்பிடித்திருக்கும் இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். சஞ்சித் ஹெக்டே, தீ, சந்தோஷ் நாராயணன் ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர். தெலுங்கு, தமிழ் என அனைத்து மொழிகளிலும் இந்த பாடல் ட்ரெண்டாகியுள்ளது

ஒத்த சட்டி சோரு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகிய பாராட்டுகளை பெற்று வரும் வாழை படத்தில் இடம்பிடித்திருக்கும் இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார். கபில் கபிலன், ஆதித்யா ரவீந்திரன் ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.

மைனரு வேட்டி கட்டி

நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியாகி ரசிகர்கள் வரவேற்பை பெற்ற படம் தசரா. இந்த படத்தில் இடம்பிடித்திருக்கும் இந்த பாடலும், கீர்த்தி சுரேஷ் நடனமும் தேசிய அளவில் ட்ரெண்டானது. முத்தமிழ் பாடல் வரிகளை எழுத அனிருத் ரவிச்சந்தர், தீ ஆகியோர் பாடியுள்ளனர்

தேன்கிழக்கு

மாரிசெல்வாஜின் வாழை படத்தில் இடம்பிடித்திருக்கும் மற்றொரு பாடலாக இது அமைந்துள்ளது. யுகபாரதி பாடல் வரிகள் எழுத தீ இந்த பாடலை பாடியுள்ளார். ரசிகர்களை மெய்மறக்க வைக்கும் மெலடி பாடலா தேன்கிழக்கு பாடல் உள்ளது

கல்கி தீம்

கல்கி 2898 ஏடி படத்தில் இடம்பிடித்திருக்கும் மற்றொரு பாடலாக தீம் ஆஃப் கல்கி உள்ளது. இதற்கு பாடல் வரிகளை விவேக் எழுத. ஆனந்து, கெளதம் பரத்வாஜ் மற்றும் கோரஸ் பாட மெய்சிலிர்க்க வைக்கும் விதமாக பாடல் அமைந்துள்ளது.

தி அந்தகன் ஆந்தம்

பிரஷாந்தின் கம்பேக் படமாக இருக்கும் அந்தகன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் இடம்பிடித்திருக்கும் தி அந்தகன் ஆந்தம் பாடல் உமா தேவி, ஏகாதசி ஆகியோர் எழுதியுள்ளனர். இசையமைப்பாளர் அனிருத், நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர். இந்த பாடலை தளபதி விஜய், பிரபுதேவை இணைந்து வெளியிட்டனர்.

ஒரு ஊர்ல ராஜா

வாழை படத்தில் இடம்பெற்றிருக்கும் இந்த பாடலை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாரயணன் இசையமைத்து பாடியுள்ளார்.

பைரவா ஆந்தம்

கல்கி 2898 ஏடி ஆல்பத்தில் ரசிகர்கள் கவர்ந்த மற்றொரு பாடலாக இருந்து வரும் பைரவா ஆந்தம் பாடலை விவேக, குமார் ஆகியோர் எழுதியுள்ளனர். சந்தோஷ் நாரயணன், தில்ஜித் தோசன்ஜ் ஆகியோர் பாடியுள்ளனர்

10000 பேக்ஸ்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ர படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இதில் இடம்பிடித்திருக்கும் 1000 பேக்ஸ் என்கிற இந்த மியூசில் விடியோவை ரோ எழுத, சந்தோஷ் நாரயணன் பாடியுள்ளார்

பூரனமே

தெலுங்கு சினிமாவான சைந்தவ் படத்தில் இந்த பாடல் இடம்பிடித்துள்ளது. இதில் தமிழ் வெர்ஷனுக்கு விவேக் பாடல்வரிகள் எழுத எஸ்.பி. சரண் பாடியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.