Vinayagar OTT Movies: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்..பிரபல ஓடிடி தளங்களில் உள்ள விநாயகர் வாழ்க்கை கதை படங்கள் லிஸ்ட்-check out the list of vinayagar movies on your favorite ott - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vinayagar Ott Movies: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்..பிரபல ஓடிடி தளங்களில் உள்ள விநாயகர் வாழ்க்கை கதை படங்கள் லிஸ்ட்

Vinayagar OTT Movies: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்..பிரபல ஓடிடி தளங்களில் உள்ள விநாயகர் வாழ்க்கை கதை படங்கள் லிஸ்ட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 07, 2024 09:15 AM IST

Vinayagar Movies in OTT: விநாயகர் சதுர்த்தி நாளான இன்று உங்கள் பிரபல ஓடிடி தளங்களில் ஸ்டிரீமிங் ஆகும் விநாயகர் வாழ்க்கை கதையை கூறும் படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம். பெரிய ஸ்டார்கள் படங்கள் இல்லை என்றாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் ரசிக்கூடிய பக்தி படங்களாக இவை உள்ளன.

Vinayagar OTT Movies: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்..பிரபல ஓடிடி தளங்களில் உள்ள விநாயகர் வாழ்க்கை கதை படங்கள் லிஸ்ட்
Vinayagar OTT Movies: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்..பிரபல ஓடிடி தளங்களில் உள்ள விநாயகர் வாழ்க்கை கதை படங்கள் லிஸ்ட்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரபல ஓடிடி தளங்களில் பார்த்து ரசிக்ககூடிய விநாயகர் தொடர்பான படங்கள், வெப்சீரிஸ் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்.

காம் காம் கணேஷா

கடந்த மே மாதம் தெலுங்கில் வெளியான படம் காம் காம் கணேஷா. ஆனந்த் தேவரகொண்டா, வெண்ணிலா கிஷோர் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படம் விநாயகர் சதுர்த்தி நாளில் நிகழும் திருட்டு சம்பவத்தை பின்னணியாக கொண்ட க்ரைம் திரில்லர் படமாக இது அமைந்துள்ளது. படத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் முக்கிய பகுதியாக இடம்பிடித்துள்ளது.

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஆங்கில சப்டைட்டிலுடன் இந்த படம் உள்ளது.

பால் கணேஷ்

பங்கஜ் சர்மா இயக்கிய, பால் கணேஷ் விநாயகப் பெருமானின் குழந்தைப் பருவத்தை அடிப்படையாகக் கொண்ட அனிமேஷன் புராணத் திரைப்படமாகும்.

குபேரின் விருந்தில் அவரது பேராசை முதல் எண்ணற்ற குறும்புத்தனமான சாகசங்கள் வரை அவர் தனது தோழனான மூஷாக், சுட்டியுடன் தொடங்குகிறார். இந்தத் திரைப்படம் விநாயகரினஅ குழந்தைப் பருவத்திலிருந்தே சில வேடிக்கையான நிகழ்வுகளை தொகுத்து, உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளை கவரும் விதமாக அமைந்திருக்கும்.

விநாயக சவித்தி

கடந்த 1957 ஆம் ஆண்டு வெளிவந்த படமான விநாயக சவித்தி என்டிஆர், பாலகிருஷ்ணா மற்றும் ஜமுனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முத்ராலா ராகவாச்சாரியார் இயக்கியுள்ளார். இந்த படத்தின் தமிழ் டப்பிங்கும் விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் 1959இல் வெளியானது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை அடிப்படையாக கொண்ட கதையில் உருவாகியிருக்கும் இந்த படம் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் உள்ளது.

வெற்றி விநாயகர்

விநாயகர் வாழ்க்கை, அவரது திருவிளையாடல்களை அடிப்படையாக கொண்டு வெற்றி விநாயகர் என்ற பெயரில் வெப் சீரிஸ் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் இடம்பிடித்துள்ளது. தமிழ் தவிர இதர மொழிகளிலும் ஸ்டிரீம் ஆகும் இந்த தொடர் பல்வேறு எபிசோடுகளை கொண்டதாக உள்ளது. வெற்றி விநாயகர் சீசன் 1 முழுவதையும் ஜியோ சினிமாவில் பார்த்து ரசிக்கலாம்

தமிழில் நேரடியாக விநாயகர் வழக்கையை அடிப்படையாக வைத்து 1996இல் வெளியான வெற்றி விநாயகர் என்ற திரைப்படம் யூடியூப் மற்றும் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் உள்ளது.

கே. ஷங்கர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கே.ஆர். விஜயா, மாஸ்டர் ஸ்ரீதர், டெல்லி கணேஷ், ஸ்ரீவித்யா, ராதாரவி, நிழல்கள் ரவி என பல நட்சத்திரங்கள் நடித்திருப்பார்கள்.

பிள்ளையார்

வி.டி. அரசு இயக்கத்தில் அருண் குமார், ராதா, ஒய்.ஜி. மகேந்திரன், மேஜர் சுந்தரராஜன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் பிள்ளையார். விநாயக பெருமானின் பல்வேறு கதைகளையும், அதன் மூலம் மக்களும் அவர் புகட்டிய பாடங்களையும், விநாயகரின் அற்புதங்களையும் விவரிக்கும் விதமாக இந்த படத்தின் கதை உள்ளது. இந்த படத்தின் யூடியூப் லிங்க் இதோ

யானை முகத்தான்

ரெஜிஷ் மிதிலா இயக்கத்தில் யோகி பாபு, ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படம் விநாயகர் பக்தரை பின்னணியாக கொண்ட கதையமசத்தில் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.