தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Yogi Babu: Actor Yogi Babu Who Had Darshan Of Ponmalai Velayudaswamy

Yogi Babu: பிரசித்தி பெற்ற பொன்மலை வேலாயுதசாமியை தரிசனம் செய்த நடிகர் யோகி பாபு

Mar 26, 2024 04:19 PM IST Pandeeswari Gurusamy
Mar 26, 2024 04:19 PM IST
  • பொள்ளாச்சி பகுதியில் நடிகர் யோகி பாபு நடித்து வரும் புதிய சினிமா படபிடிப்பு நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நடிகர் யோகி பாபு கிணத்துக்கடவில் உள்ள பிரசித்தி பெற்ற பொன்மலை வேலாயுத சாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அவருக்கு கோவில் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடிகர் யோகி பாபு பொன்மலை வேலாயுதசாமியை தரிசனம் செய்தார். பின்னர் கோவில் பகுதியில் உள்ள காசி விசுவநாதர் , விநாயகர் உள்ளிட்ட சாமிகளையும் வணங்கினார். பின்னர் பொன்மலை வேலாயுதசாமி கோவிலில் பின்பகுதியில் வேலாயுதசாமி கால் பாதம் அமைந்துள்ள பகுதியை சுற்றி வந்து தரிசனம் செய்தார் .நடிகர் யோகி பாபு சாமி தரிசனம் செய்ய வேலாயுதசாமி கோயிலுக்கு வந்ததை அறிந்த பக்தர்கள் யோகி பாபு உடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதன் பின்னர் அவர் கிணத்துக்கடவு அருகே உள்ள கோடங்கிபாளையத்தில் நடைபெற்று வரும் சினிமா படப்பிடிப்பில் கலந்துகொள்ள கிளம்பினார்.
More