TAMIL MOVIES ON THIS DAY: ரசிகர்கள் மனம் கவர்ந்த காதல் தேசம், தேசிங்கு ராஜா..ஆகஸ்ட் 23இல் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்-check out the list of tamil movies released on this day aug 23 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Movies On This Day: ரசிகர்கள் மனம் கவர்ந்த காதல் தேசம், தேசிங்கு ராஜா..ஆகஸ்ட் 23இல் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்

TAMIL MOVIES ON THIS DAY: ரசிகர்கள் மனம் கவர்ந்த காதல் தேசம், தேசிங்கு ராஜா..ஆகஸ்ட் 23இல் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 23, 2024 06:42 AM IST

Tamil Movies on this day Aug 23: பெரிய ஸ்டார், வெள்ளிவிழா படங்கள் எதுவும் ஆகஸ்ட் 23ஆம் தேதியில் வெளியாகவில்லை என்றாலும் ரசிகர்கள் மனம் கவர்ந்ததுடன், ஹிட்டாகி வசூலை குவித்த படங்களான காதல் தேசம், தேசிங்கு ராஜா போன்ற சில படங்கள் இந்த தேதியில் வெளியாகி இருக்கின்றன.

Tamil Movies on this day: ரசிகர்கள் மனம் கவர்ந்த காதல் தேசம், தேசிங்கு ராஜா..ஆகஸ்ட் 23இல் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்
Tamil Movies on this day: ரசிகர்கள் மனம் கவர்ந்த காதல் தேசம், தேசிங்கு ராஜா..ஆகஸ்ட் 23இல் வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்

சகட யோகம்

கொத்தமங்கலம் சீனு, வி.என். ஜானகி, டி.ஆர். ராமச்சந்திரன், டி.எஸ். துரைராஜ் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க சகடயோகம் திரைப்படம் 1946இல் வெளியானது. இந்தியாவின் சுதந்திரத்துக்கு முன்னர் வெளியான இந்த படத்துக்கு ப. நீலகண்டன் திரைக்கதை, வசனம் எழுத, ஆர். பத்மநாபன் இயக்கியிருந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்திருந்தது. சகடயோகம் படம் வெளியாகி இன்றுடன் 78 ஆண்டுகள் ஆகிறது

குங்குமச்சிமிழ்

மோகன், இளவரசி, ரேவதி, சந்திரசேகர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க ஆர். சுந்தரராஜன் இயக்கத்தில் 1985ஆம் ஆண்டு வெளியான படம் குங்குமச்சிமிழ்.

காதல் கலந்த பேமிலி ட்ராமா பாணியில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இளையராஜா இசையில் நிலவு தூங்கும் நேரம், கூட்ஸ் வண்டியிலே போன்ற பாடல்கள் சிறந்த மெலடிகளாக இன்று வரையிலும் ஒலிக்கிறது. இந்த படம் வெளியாகி இன்றுடன் 39 ஆண்டுகள் ஆகிறது

காதல் தேசம்

நட்பு, காதலை மையப்படுத்தி தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் திரைப்படமாக காதல் தேசம் 1996இல் வெளியானது. கதிர் இயக்கிய இந்த படம், ஒரு பெண்ணை இரண்டு நண்பர்கள் காதலிப்பதும் அதனால் அவர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகள் பற்றி பேசிய படமாக இருந்தது.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஸ்ரீவித்யா, வடிவேலு, சின்னி ஜெயந்த் போன்ற பலரும் நடித்திருப்பார்கள். வாலி பாடல் வரிகளில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்டாகின. முஸ்தபா முஸ்தபா பாடல் இளைஞர்களின் தேசிய கீதமாகவே மாறியது.

அதேபோல் எனை காணவில்லை நேற்றோடு, ஓ வெண்ணிலா, தென்றலே பாடல்கள் அற்புதமான மெலடிகளாக இருந்து வருகின்றன. கல்லூரி வாழ்க்கை, நட்பு, காதல் என கொண்டாட்டமான படமாக ரசிகர்களை ரசிக்க வைத்து ஹிட்டான காதல் தேசம் படம் வெளியாகி இன்றுடன் 28 ஆண்டுகள் ஆகிறது

இவன்

ஆர். பார்த்திபன் இயக்கி நடித்து அரசியல் த்ரில்லர் படமாக 2002இல் வெளியான இவன் ரசிகர்களை கவர்ந்ததுடன், சராசரி ஹிட்டானது. படத்தில் செளந்தர்யா, மீனா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருப்பார்கள்.

ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, கிட்டி, தேவன், பெப்சி விஜயன், தலைவாசல் விஜய்,, மகாநதி சங்கர், பாலாசிங் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். இந்த படத்துக்காக நடிகை மீனாவுக்கு சிறந்த நடிகை தேசிய விருது கிடைத்தது. இளையராஜா இசையில் படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டாகின.

அப்படி பாக்கறதுனா வேணா என்ற பாடல் ரிப்பீட் மோடில் எஃப்எம்களில் ஒலித்தன. அரசியல் கலந்த பொழுதுபோக்கு படமாக இருந்த இவன் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகள் ஆகிறது.

தேசிங்கு ராஜா

விமல் - பிந்து மாதவி இணைந்து நடிக்க எழில் இயக்கத்தில் 2013இல் வெளியான படம் தேசிங்கு ராஜா. காதல் கலந்த காமெடி படமான இதில் சூரியின் காமெடி வெகுவாக பேசப்பட்டது.

சிங்கம்புலி, ரவி மரியா, ஆடுகளம் நரேன், சாம்பய், வினு சக்கரவர்த்தி உள்பட பலரும் நடித்திருப்பார்கள். டி. இமான் இசையமைப்பில் பாடல்கள் ஹிட்டாகின.

அம்மாடி அம்மாடி, நிலாவட்டம் நெத்தியலே, போம் போம் போன்ற பாடல் ரசிகர்களை கவர்ந்தன. சிறு பட்ஜெட்டில் உருவாகி நல்ல லாபத்தை பெற்று தந்த படமாக இருக்கும் தேசிங்கு ராஜா வெளியாகி இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.