Tamil Movies: ரஜினியின் நடிப்பு திறமையை வெளிக்காட்டிய படம்!எம்ஜிஆர், சிவாஜி, விஜயகாந்த்..இன்றைய நாளில் வெளியான படங்கள்-check out the list of super hit movies released on this day sep 14 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Movies: ரஜினியின் நடிப்பு திறமையை வெளிக்காட்டிய படம்!எம்ஜிஆர், சிவாஜி, விஜயகாந்த்..இன்றைய நாளில் வெளியான படங்கள்

Tamil Movies: ரஜினியின் நடிப்பு திறமையை வெளிக்காட்டிய படம்!எம்ஜிஆர், சிவாஜி, விஜயகாந்த்..இன்றைய நாளில் வெளியான படங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 14, 2024 08:05 AM IST

Tamil Movies Released on Sep 14: ரஜினியின் நடிப்பு திறமையை வெளிக்காட்டிய படம், எம்ஜிஆர், சிவாஜி, விஜயகாந்த் ஆகியோருக்கு சூப்பர் ஹிட் கொடுத்த படம் என இன்றைய நாளில் வெளியான படங்கள் லிஸ்டை பார்க்கலாம்

Tamil Movies: ரஜினியின் நடிப்பு திறமையை வெளிக்காட்டிய படம்!எம்ஜிஆர், சிவாஜி, விஜயகாந்த்..இன்றைய நாளில் வெளியான படங்கள்
Tamil Movies: ரஜினியின் நடிப்பு திறமையை வெளிக்காட்டிய படம்!எம்ஜிஆர், சிவாஜி, விஜயகாந்த்..இன்றைய நாளில் வெளியான படங்கள்

1940களில் இருந்து தற்போது வரை இன்றைய நாளில் வெளியான சூப்பர் ஹிட் படங்கள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்

சர்வாதிகாரி

1951இல் எம்ஜிஆர், அஞ்சலி தேவி, எம்.என். நம்பியார் உள்பட பலர் நடித்து வெளியான படம் சர்வாதிகாரி. எம்ஜிஆரை முன்னணி ஹீரோவாக்கிய படங்களில் ஒன்றாக இது அமைந்திருந்துத. டி. ஆர். சுந்தரம் இந்த படத்தை இயக்கியிருந்தார்.

செந்தாமரை

1962இல் சிவாஜி கணேசன், பத்மினி நடிப்பில் வெளியான இந்த படத்தை பீம்சிங் இயக்கியிருப்பார். ரசிகர்களை கவர்ந்த குடும்ப திரைப்படமாக இருந்த இந்த படத்தின் ப்ரீண்ட் தொலைந்து விட்டது. தமிழில் காணாமல் போன சிறந்த படங்களில் ஒன்றாக செந்தாமரை படம் உள்ளது

ரத்த திலகம்

சிவாஜி கணேசன் - சாவித்ரி நடித்த இந்த படம் 1963இல் இந்தியா - சீனா போர்க்கள பின்னணியில் உருவான காதல் திரைப்படமாக அமைந்திருந்தது. தாதா மிராஸி இயக்கிய இந்த படம் வெற்றி பெறவில்லை என்றாலும், அந்த காலகட்டத்தில் போர்க்களத்தின் பின்னணியில் நிகழும் காதலை வைத்து வித்தியாசமான கதையமச்த்தில் உருவாகிய படமாக அமைந்திருந்தது

ஜக்கம்மா

வழக்கமான மசாலா கதையை கெளபாய் பாணியிலான வெஸ்ட்ர்ன் ஸ்டைலில் உருவாக்கி ரசிகர்களை புதுவிதமான அனுபவத்தை தந்த ஜெய்சங்கர், சாவித்ரி, உஷா நந்தினி நடித்த ஜக்கம்மா 1972இல் வெளியானது. இந்த படத்தை எம். கர்ணன் இயக்கியிருப்பார். முகம் சுளிக்கும் விதமாக கவர்ச்சியிலும் சற்று தூக்கலாவே காட்சிகளை அமைத்து சூடேற்றியிருப்பார்கள். சிறந்த டைம் பாஸ் கிளாசிக் படமாகவும், கெளபாய் கதைகளத்தில் உருவான படமாகவும் ஜக்கம்மா இருந்து வருகிறது.

ஆறிலிருந்து அறுபது வரை

படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப சிறு வயதில் இருந்து வாயதாகும் வரை தனது தம்பி, தங்கைக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்கும் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்து அவரது ஆஸ்தான இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் இயக்கியிருக்கும் இந்த படம் 1979இல் வெளியானது. ரஜினி சினிமா கேரியரில் மிகவும் முக்கியமான படமாகவும், அவரது நடிப்பை திறமையை ரசிகர்களுக்கு எடுத்த காட்டிய படமாகவும் இது அமைந்துள்ளது. ரஜினியின் மகா நடிப்பை காண இந்த படத்தை மிஸ் செய்யாமல் பார்க்கலாம்

இரு மேதைகள்

சிவாஜி கணேசன், பிரபு, சரிதா, ராதா, சில்க் ஸ்மிதா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1984இல் வெளியான காமெடி த்ரில்லர் படம் இரு மேதைகள். பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவினாலும், சிவாஜியின் நடிப்பு வெகுவாக பேசப்பட்ட படமாக இது அமைந்தது

தாவாணி கனவுகள்

பாக்யராஜ் இயக்கி நடித்த பேமிலி ட்ராமா படமான தாவாணி கனவுகள் 1984இல் வெளியானது. சிவாஜி கணேசன், ராதிகா, இளவரசி உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படம் பட்டிதொட்டியெங்கும் ரசிகர்களை கவர்ந்தபோதிலும் வசூலில் கோட்டை விட்டது.

இதய கோயில்

மணிரத்னம் இயக்கத்தில் மோகன், அம்பிகா, ராதா, கவுண்டமணி நடித்த ரொமாண்டிக் மசாலா படம் திரைப்படமான இதய கோயில் 1985இல் வெளியானது. இளையராஜா இசையில் படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

என்கிட்ட மோதாதே

விஜயகாந்த், குஷ்பூ, ஷேபனா நடித்து ஆர். சுந்தரராஜன் இயக்கத்தில் 1990இல் வெளியான ரெமான்டிக் ஆக்சன் படம் என்கிட்ட மோதாதே. விஜயகாந்த் ரசிகர்களை கவர்ந்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது.

பேரரசு

விஜயகாந்த், டேபினா போனர்ஜி, பிரகாஷ் ராஜ், ஆனந்த் ராஜ் உள்பட பலர் நடித்து 2006இல் வெளியான பேரரசு படத்தை உதயன் இயக்கியுள்ளார். விஜயகாந்த் இரட்டை வேடங்களில் நல்லவனாகவும், வில்லனாகவும் நடித்த இந்த படம் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

சுந்தர பாண்டியன்

சசிக்குமார், லட்சுமி மேனன், சூரி, விஜய்சேதுபதி உள்பட பலர் நடித்து காதல் காமெடி கலந்த படமாக உருவாகியிருக்கும் சுந்தர பாண்டியன் படம் 2012இல் வெளியானது. இந்த படத்தை எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கியுள்ளார். பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான இந்த படம் தெலுங்கு, கன்னடா ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

துப்பறிவாளன்

விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல், வினய் ராய் நடித்து மிஷ்கின் இயக்கத்தில் ஆக்சன் த்ரில்லர் பாணியில் உருவாகி 2017இல் வெளியான படம் துப்பறிவாளன். டெடக்டிவ் ஆக வரும் விஷால், கொலையை கண்டறியும் கதையம்சத்தில் விறுவிறுப்பான திரைக்கதையுடன் அமைந்திருக்கும் இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இதன் இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.