Top Directors OTT Movies: தலைமை செயலகம், ஜர்னி, யோகி பாபு நடித்த சட்னி சாம்பார்..டாப் இயக்குநர்கள் இயக்கிய ஓடிடி படங்கள்-check out the list of ott movies directed by top tamil directors - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top Directors Ott Movies: தலைமை செயலகம், ஜர்னி, யோகி பாபு நடித்த சட்னி சாம்பார்..டாப் இயக்குநர்கள் இயக்கிய ஓடிடி படங்கள்

Top Directors OTT Movies: தலைமை செயலகம், ஜர்னி, யோகி பாபு நடித்த சட்னி சாம்பார்..டாப் இயக்குநர்கள் இயக்கிய ஓடிடி படங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 04, 2024 12:12 AM IST

Top Directors OTT Movies: தலைமை செயலகம், ஜர்னி, யோகி பாபு நடித்த சட்னி சாம்பார் என தமிழ் சினிமாவின் டாப் இயக்குநர்கள் இயக்கிய ஓடிடி படங்கள் எவை என்பதை பார்க்கலாம்

Top Directors OTT Movies: தலைமை செயலகம், ஜர்னி, யோகி பாபு நடித்த சட்னி சாம்பார்..டாப் இயக்குநர்கள் இயக்கிய ஓடிடி படங்கள்
Top Directors OTT Movies: தலைமை செயலகம், ஜர்னி, யோகி பாபு நடித்த சட்னி சாம்பார்..டாப் இயக்குநர்கள் இயக்கிய ஓடிடி படங்கள்

தலைமை செயலகம்

வெயில், அங்காடி தெரு என சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த வசந்தபாலன் இயக்கியிருக்கும் முதல் வெப்சீரிஸ் தலைமை செயலகம். அரசியல் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த சீரிஸில் கிஷேர், ஸ்ரேயா ரெட்டி, கனி குஷ்ருதி, பரத், ரம்யா நம்பீசன், ஒய்.ஜி. மகேந்திரன், தர்ஷா குப்தா உள்பட பலரும் நடித்துள்ளார்கள்.

சமகால அரசியல் நிகழ்வுகளை வைத்து உருவாகியிருக்கும் இந்த வெப்சீர்ஸ் கடந்த மே மாதம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி பாராட்டுகளை பெற்றது. மொத்தம் 8 எபிசோடுகளை கொண்ட தொடராக இது அமைந்துள்ளது.

ஜர்னி

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான சேரன் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார். நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத்துடன் வலம் வரும் இயக்குநர் சேரன் இயக்கியிருக்கும் முதல் வெப் சீரிஸ் ஆக சேரனின் ஜர்னி கடந்த ஜனவரி மாதம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த வெப் தொடரில் சரத்குமார், பிரசன்னா, ஆரி அர்ஜுனன், கலையரசன், திவ்யா பாரதி, ஜெயப்பிரகாஷ், இளவரசு, ஆடுகளம் நரேன், அஞ்சு குரியன், வேலராமமூர்த்தி, பரணி உள்பட பலரும் நடித்துள்ளார்கள். மொத்த 9 எபிசோடுகளை கொண்டிருக்கும் இந்த வெப் சீரிஸுக்கு சி. சத்யா இசையமைத்துள்ளார்.

சட்னி சாம்பார்

அழகிய தீயே, மொழி, பயணம், அபியும் நானும் போன்ற ஹிட் படங்களை கொடுத்த ராதா மோகன் இயக்கியிருக்கும் சட்னி சாம்பார் என்கிற இந்த வெப்சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கடந்த ஜூன் மாதம் வெளியாகியுள்ளது.

காமெடி கலந்த குடும்ப டிராமா பாணியில் உருவாகியிருக்கும் இந்த வெப்சீரிஸில் யோகி பாபு, வாணி போஜன், கயல் சந்திரன், சம்யுக்தா விஸ்வநாதன், நிதின் சத்யா, சார்லி உள்பட பலரும் நடித்துள்ளார்கள். குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வெப்சீரிஸாக இது அமைந்துள்ளது.

இயக்குநர் ராதா மோகன் ஏற்கனவே 2021இல் வைபவ், வாணி போஜன் நடிப்பில் மலேசியா டூ அம்னீஷியா என்ற படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட்டுள்ளார்.

குயின்

வெப்சீரிஸ் பிரபலமாகி வந்த ஆரம்ப காலகட்டத்தில் வெளிவந்த இந்த தொடரை கெளதம் மேனன், பிரசாத் முருகேசன் ஆகியோர் இயக்கியிருந்தனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த இந்த தொடரில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடித்திருந்தார். அனிகா சுரேந்திரன், சோனியா அகர்வால், இந்திரஜித் சுகுமாரன், வம்சி கிருஷ்ணன் உள்பட பலரும் நடித்திருந்த இந்த வெப்சீரிஸ் எம்எக்ஸ் பிளேயர் ஓடிடியில் வெளியானது. மொத்தம் 11 எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநராக இருந்து வரும் விக்னேஷ் சிவன், மணிரத்னம் தயாரிப்பில் உருவான அந்தாலஜி படமாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான பாவ கதைகள் படத்தில் இடம்பிடித்திருக்கும் லவ் பண்ணா விட்ரணும் என்ற படத்தை இயக்கியிருந்தார். அஞ்சலி, கல்கி கோச்சலின், கே. மணிகண்டன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தில் பாவ கதைகள் சீரிஸில் அதிகம் பேரால் ரசிக்கப்பட்ட படமாக உள்ளது.

கார்த்திக் சுப்பராஜ்

நெட்பிளிக்ஸ் ஒரிஜினல் சீரிஸ் ஆக ஒன்பது கதைகளுடன் நவரசா என்ற பெயரில் நெட்பிளிக்ஸில் வெளியான படத்தில் இடம்பிடித்திருக்கும் பீஸ் என்ற படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். நவரசங்களை மையப்படுத்தி இருக்கும் ஒன்பது கதைகளில் சாந்தம் (அமைதி) என்கிற உணர்வை மையப்படுத்தி கார்த்திக் சுப்பராஜ் படம் அமைந்திருக்கும்.

தமிழ் ஈழ போர்களத்தை மையப்படுத்தியிருக்கும் இந்த கதையில் பாபி சிம்ஹா பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதற்கு முன்னர் அமேசான் ப்ரைமில் 2020இல் வெளியான புத்தம் புது காலை என்ற அந்தாலஜி படத்தில் மிராக்கிள் என்ற படத்தை இயக்கியிருந்தார். இதிலும் பாபி சிம்ஹா தான் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்

வசந்த்

நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான நவரசா படத்தில் இடம்பிடித்த பாயசம் என்ற படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வசந்த் இயக்கியிருந்தார். எழுத்தாளர் தி. ஜானகிராமன் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கும் இந்த படத்தில் டெல்லி கணேஷ், ரோஹிணி, அதீதி பாலன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். நவரசங்களின் ஒன்றான அருவருப்பு என்கிற உணர்ச்சியை மையப்படுத்தி இந்த படத்தின் கதை அமைந்திருக்கும்.

பிரியதர்ஷன்

மலையாள சினிமாவின் மூத்த இயக்குநரான பிரியதர்ஷன் தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான நவரசா படத்தில், நகைச்சுவை என்ற உணர்வை மையப்படுத்தி வெளியான படம் சம்மர் ஆஃப் 92. யோகி பாபு, நெடுமுடி வேணு, ரம்யா நம்பீசன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.