Top Swarnalatha Songs: போறாளே பொன்னுத்தாயி.. உளுந்து விதைக்கையிலே.. என்னுள்ளே என்னுள்ளே.. ஸ்வர்ணலதா பாடிய ஹிட் பாடல்கள்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top Swarnalatha Songs: போறாளே பொன்னுத்தாயி.. உளுந்து விதைக்கையிலே.. என்னுள்ளே என்னுள்ளே.. ஸ்வர்ணலதா பாடிய ஹிட் பாடல்கள்!

Top Swarnalatha Songs: போறாளே பொன்னுத்தாயி.. உளுந்து விதைக்கையிலே.. என்னுள்ளே என்னுள்ளே.. ஸ்வர்ணலதா பாடிய ஹிட் பாடல்கள்!

Divya Sekar HT Tamil
Sep 15, 2024 10:37 AM IST

Top Trending Swarnalatha Songs : ஸ்வர்ணலதாவின் குரல் அவர் கானா பாடல்கள் பாடினால் நம்மை குத்தாட்டம் போட வைக்கும். சோகப்பாடல்கள் பாடல்கள் நமது கண்களில் கண்ணீர் வர வைத்து விடும். அப்படி ஸ்வர்ணலதா பாடிய ஹிட் பாடல்கள் எவை என்பதை பார்க்கலாம்.

Top Swarnalatha Songs : போறாளே பொன்னுத்தாயி.. உளுந்து விதைக்கையிலே.. என்னுள்ளே என்னுள்ளே.. ஸ்வர்ணலதா பாடிய ஹிட் பாடல்கள்!
Top Swarnalatha Songs : போறாளே பொன்னுத்தாயி.. உளுந்து விதைக்கையிலே.. என்னுள்ளே என்னுள்ளே.. ஸ்வர்ணலதா பாடிய ஹிட் பாடல்கள்!

ஸ்வர்ணலதாவின் குரல் அவர் கானா பாடல்கள் பாடினால் நம்மை குத்தாட்டம் போட வைக்கும். சோகப்பாடல்கள் பாடல்கள் நமது கண்களில் கண்ணீர் வர வைத்து விடும். எவனோ ஒருவன் வாசிக்கிறான், போறாளே பொன்னுத் தாயி போன்ற பாடல்கள் பெரும்பாலும் கேட்பவர்களின் கண்களில் நீர் வர வைத்து விடும். ஆச மஞ்சா வாங்கி வந்த மல்லிகப்பூ போன்ற காதல் பாடல்கள் பெரும்பாலும் ரசிகர்களை தங்கள் காதல் உலகத்திற்கு அழைத்து சென்றது. அதுதான் ஸ்வர்ண லதாவின் வெற்றிக் முக்கிய காரணம் எனலாம். எம்.எஸ்.விஸ்வநாதன். இளையராஜா. ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய மூவரின் இசையிலும் பாடும் வாய்ப்பைப் பெற்ற மிகச் சிலரில் ஸ்வர்ணலதாவும் ஒருவர். இவரின் டாப் 10 ஹிட் பாடல்களை பார்க்கலாம்.

போறாளே பொன்னுத்தாயி (கருத்தம்மா)

ஸ்வர்ணலதாவுக்கு தேசிய திரைப்பட விருதைப் பெற்றுத்தந்த பாடல், கருத்தம்மாவின் இந்த போறாளே பொன்னுத்தாயி பாடல். அவரது சிறந்த பாடல் இது. மனதை ஈர்க்கும் நிறைந்த ஸ்வர்ணலதா குரல் மற்றும் வைரமுத்துவின் உள்ளத்தைத் தூண்டும் வார்த்தைகள் என இப்பாடல் அமைந்திருக்கும். இப்படத்தின் ஆன்மாவாக இப்பாடல் இருக்கும். இப்பாடலில் ஸ்வர்ணலதாவின ஹம்மிங்கை ஒருங்கிணைக்கும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் வழி மேலும் தலைசிறந்தது.

மாலையில் யாரோ மனதோடு பேச (சத்ரியன்)

இப்பாடலை ஐயா வாலி எழுதியிருப்பார். வரிகளில் ஒவ்வொன்றும் முத்துக்களாய் இருக்கும். பாடலின் தொடக்க இசை வரும் 25 விநாடிகள் கீபோர்ட், கிடார் மற்றும் வயலின்களைக் கொண்டு வரும் இசை நம் மனங்களை கட்டிபோடும். பின்வரும் புல்லாங்குழல் இசையால் ஆழ்கடல் வரை சுண்டியிழுத்துச் செல்கிறார் இசைஞானி. ஸ்வர்ணலதா குரலில் இப்பாடல் நன்மை கட்டிபோடும்.

என்னுள்ளே என்னுள்ளே (வள்ளி)

1993 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பிரியா ராமன், வடிவேலு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வள்ளி. இத்திரைப்படத்தை கே.நட்ராஜ் இயக்கியிருந்தார். வள்ளி திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள், பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. குறிப்பாக இத்திரைப்படத்தில் இடம்பெற்ற என்னுள்ளே என்னுள்ளே பாடல் காலம் தாண்டியும் ரசிக்கப்படும் பாடலாக அமைந்தது. இப்போதும் கூட அப்பாடல் தமிழ் ரசிகர்கள் அதிகம் கேட்கக்கூடிய டாப் பாடல்களில் ஒன்றாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ஸ்வர்ணலதாவின் மாயா குரல் என்றே சொல்லலாம்.

உளுந்து விதைக்கையிலே (முதல்வன்)

முதல்வன் படத்தில் இடம்பெற்ற இந்த மெல்லிசை ஒரு தனித்துவமான உணர்வை தரும். ஷங்கர் இயக்கத்தில் 1999இல் பாக்ஸ் ஆபீஸ் பெற்ற திரைப்படம் முதல்வன். இத்திரைப்படத்தில் அர்ஜுன், மனிஷா கொய்ராலா, மணிவண்ணன், விஜயகுமார், ரகுவரன் எனப் பலரும் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் உளுந்து விதைக்கையிலே பாடலுக்காக சினிமா எக்ஸ்பிரஸ் விருதை சிறந்த பின்னணி பாடகி ஸ்வர்ணலதா பெற்றார்.

அகடானு நாங்கா (இந்தியன்)

1996இல் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சுகன்யா, மனிஷா கொய்ராலா என பலரும் நடித்து வெளியான திரைப்படம் இந்தியன். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். இப்படத்தில் ஸ்வர்ணலதா பாடிய அக்கடான்னு நாங்க பாடல் செம ஹிட். இப்பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகிக்காக சினிமா எக்ஸ்பிரஸ் விருது மற்றும் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றார் ஸ்வர்ணலதா.

குயில் பாட்டு (என் ரசவின் மனசிலே)

இளையராஜாவின் மற்றொரு மெல்லிசை, 'குயில் பாட்டு' ஸ்வர்ணலதாவின் வெற்றி பாடல்களில் இதுவும் ஒன்றாகும். காதல் மற்றும் ஏக்கத்தைப் பற்றி பேசும் ஒரு பாடல், இளையராஜாவின் இசையில் இப்பாடல் ஒரு பொக்கிஷம் என்றே சொல்லலாம்.

எவனோ ஒருவன் (அலைபாயுதே)

மணிரத்னம் இயக்கத்தில் காதல் திரைப்படமாக 2002 இல் வெளிவந்தது அலைபாயுதே. இப்படத்தில் மாதவன், ஷாலினி, சொர்ணமால்யா என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். ஏஆர் ரகுமான் இசையில் ஸ்வர்ணலதா பாடிய எவனோ ஒருவன் வாசிக்கிறான் என்ற பாடல் ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றது. வைரமுத்துவின் வலிமிகுந்த வரிகளுக்கு ஸ்வர்ணலதாவின் குரல் உயிர் கொடுத்து இருக்கும் என்றே சொல்லலாம்.

போவோம்மா ஊர்கோலம் (சின்ன தம்பி)

பிரபு, குஷ்பு, கவுண்டமணி என பலரும் நடித்து வெளியான திரைப்படம் சின்னத்தம்பி. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும் என்ற பாடலை ஸ்வர்ணலதா பாடியிருந்தார். 1991 இல் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தமிழக அரசு விருது, ஃபிலிம்ஃபேர் விருதுகளை இப்பாடலுக்காக வாங்கியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.