Kushboo: ‘16 வயசுல படுக்கைக்கு கூப்பிட்டான்.. செருப்பு சைஸ் 41 -ன்னு.. வீட்ல உலை கொதிக்க’ - குஷ்பு ஓப்பன் டாக்!-kushboo latest interview about malayalam sexual assault hema committee report and her first adjustment enquiry - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kushboo: ‘16 வயசுல படுக்கைக்கு கூப்பிட்டான்.. செருப்பு சைஸ் 41 -ன்னு.. வீட்ல உலை கொதிக்க’ - குஷ்பு ஓப்பன் டாக்!

Kushboo: ‘16 வயசுல படுக்கைக்கு கூப்பிட்டான்.. செருப்பு சைஸ் 41 -ன்னு.. வீட்ல உலை கொதிக்க’ - குஷ்பு ஓப்பன் டாக்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 03, 2024 06:19 AM IST

Kushboo: சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வரும் பெண்களிடம் இருக்கும் வேட்கையை, இங்கு இருக்கக்கூடிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் தங்களுக்கு சாதகமாக, தங்களது பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்ள பயன்படுத்திக் கொள்கிறார்கள். - குஷ்பு ஓப்பன் டாக்!

Kushboo: ‘16 வயசுல படுக்கைக்கு கூப்பிட்டான்.. செருப்பு சைஸ் 41 -ன்னு.. வீட்ல உலை கொதிக்க’ - குஷ்பு ஓப்பன் டாக்!
Kushboo: ‘16 வயசுல படுக்கைக்கு கூப்பிட்டான்.. செருப்பு சைஸ் 41 -ன்னு.. வீட்ல உலை கொதிக்க’ - குஷ்பு ஓப்பன் டாக்!

வேட்கையை தவறாக பயன்படுத்துகிறார்கள்

இது குறித்து தந்தி யூடியூப் சேனலுக்கு அண்மையில் அவர் அளித்த பேட்டியில், “சினிமாவிற்கு வரும் பெண்களை படுக்கைக்கு அழைப்பது என்பது நான்கு சுவருக்குள் நடக்கிறது.அனைவரும் கூடி இருக்கும் சபையில் அது போன்ற நிகழ்வுகள் நடப்பதில்லை. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று வரும் பெண்களிடம் இருக்கும் வேட்கையை, இங்கு இருக்கக்கூடிய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் தங்களுக்கு சாதகமாக, தங்களது பாலியல் இச்சையை தீர்த்துக்கொள்ள பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

 

குஷ்பு (கோப்பு புகைப்படம்)
குஷ்பு (கோப்பு புகைப்படம்)

வீட்டில் உலை கொதிக்கும்

இப்போது சினிமாவிற்கு வரும் பெண்கள் நன்கு படித்து, பட்டம் பெற்று, தெளிவான அறிவுடன் வருகிறார்கள். அப்படித்திரைத்துறைக்குள் நுழையும் பெண்கள், இது போன்ற பிரச்சினைகளை லாவகமாக கையாண்டு விடுகிறார்கள். ஆனால் முன்பு அப்படி இல்லை. சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் தான் வீட்டில் உலை கொதிக்கும், தம்பி தங்கைகளை படிக்க வைக்க முடியும், இல்லையென்றால் எனக்கு சினிமா தான் வேண்டும் என்று சொல்லி, வீட்டில் சண்டைபோட்டுவிட்டு வரும் பெண்களை இங்கிருப்பவர்கள் தங்களது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி இருக்கலாம்.

 

 

குஷ்பு (கோப்பு புகைப்படம்)
குஷ்பு (கோப்பு புகைப்படம்)

நானும் அப்படிப்பட்ட ஒரு கட்டாய சூழ்நிலையில் தான் சினிமாவிற்கு வந்தேன். வீட்டில் அம்மா இருக்கிறார். மூன்று அண்ணன்கள் இருக்கிறார்கள். வீட்டிற்கு வாடகை கொடுக்க வேண்டும். அப்பா குடும்பத்தை கைவிட்டு விட்டார். கையில் பெரிதாக படங்கள் இல்ல. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான் ஒரு தயாரிப்பாளர் என்னை மறைமுகமாக படுக்கைக்கு அழைத்தார்.

அப்போது நான் அவரிடம் அதற்கு உடன்பட மறுத்து, என்னுடைய செருப்பு சைஸ் 41 நீங்கள் இங்கே அடி வாங்கிக் கொள்கிறீர்களா?.. இல்லை யூனிட் முன்னே அடி வாங்குகிறீர்களா என்று கேட்டேன். அப்போது எனக்கு 16 வயது. அப்போது கன்னடம், தமிழில் கூட நான் படங்கள் நடிக்கவில்லை தெலுங்கில் மட்டும் தான் நான் நடித்துக் கொண்டிருந்தேன். என்னை படுக்கைக்கு அழைத்தது ஒரு தெலுங்கு தயாரிப்பாளர் தான். ஆகையால் வாய்ப்பிற்காக எந்த இடத்திலும் நான் என்னை தரம் தாழ்த்தியது கிடையாது” என்று பேசினார்

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.