Paal Dappa:சில் ப்ரோ.. டேக் இட் ஈஸி..இது மிஸ் அண்டர்ஸ்டேன்டு தான்.. பால் டப்பாவிடம் மன்னிப்பு கேட்ட டைரக்டர்
Paal Dappa:பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்த போது பாடலாசிரியர் பால் டப்பா வரவில்லை. அதற்கான காரணம் குறித்து பின்னால் தான் தெரிந்து கொண்டேன். அவரை கௌரவப்படுத்த எண்ணினே தவிற அவரை குறைத்து மதிப்பிடவில்லை என பிரதர் படத்தின் இயக்குநர் ராஜேஷ் கூறியுள்ளார்.

தமிழில் ராப் பாடல்கள் பாடி தனக்கான அடையாளத்தை அமைத்துக் கொண்டவர் பால் டப்பா என்ற அனீஷ். இவருக்கு, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் துருவ நட்சத்திரம் படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் சினிமாவில் பாடலாசிரியராக என்ட்ரி கொடுத்தார் பால் டப்பா. அதே சமயம் துருவ நட்சத்திரம் படத்தில், அவர் எழுதிய மை நேம் இஸ் ஜான் என்ற பாடல் அவருக்கென தனி ரசிகர்களையும் கொடுத்தது.
மக்காமிஷி
இதற்கடுத்து அவர், ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் பிரதர் படத்திலும் ஒரு பாடலை எழுதியுள்ளார். மக்காமிஷி என்ற இந்தப் பாடலின் வரிகளும், நடனமும் பலரையும் கவர்ந்தது. வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டிருந்த இந்த பாடல் வெளியான நாள் முதல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.
இதற்கிடையில், காத்து மேல காத்தடிக்குது எனும் ஆல்பம் பாடலையும் அவர் வெளியிட்டார். இந்தப் பாடல், பெரியவர்கள் மட்டுமின்றி, சிறு சிறு குழந்தைகளையும் கவர்ந்தது. இந்தப் பாட்டில் வரும் வரி, குரல், இசை என அனைத்தும் புதிதாக இருந்ததால், குழந்தைகள் அதை எளிதில் புரிந்து கொண்டு மீண்டும் மீண்டும் பாடலை கேட்டு அந்தப் பாட்டை ஹிட்டாக்கினர்.