Paal Dappa: பால் டப்பாவைக் காணோம்.. கம்ப்ளையன்ட் செய்த டைரக்டர்.. இதெல்லாம் ரொம்ப தப்புங்க..-brother movie director rajesh compliant about lyricist paal dappa - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Paal Dappa: பால் டப்பாவைக் காணோம்.. கம்ப்ளையன்ட் செய்த டைரக்டர்.. இதெல்லாம் ரொம்ப தப்புங்க..

Paal Dappa: பால் டப்பாவைக் காணோம்.. கம்ப்ளையன்ட் செய்த டைரக்டர்.. இதெல்லாம் ரொம்ப தப்புங்க..

Malavica Natarajan HT Tamil
Sep 29, 2024 03:21 PM IST

Paal Dappa: படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்தால், என் பாட்டு தான் ரிலீஸாகி ஹிட் ஆகிடுச்சே நான் ஏன் வரணும் என, பாடலாசிரியர் பால் டப்பா கேட்பதாக இயக்குநர் ராஜேஷ் கூறியுள்ளார்.

Paal Dappa: பால் டப்பாவைக் காணோம்.. கம்ப்ளையன்ட் செய்த டைரக்டர்.. இதெல்லாம் ரொம்ப தப்புங்க..
Paal Dappa: பால் டப்பாவைக் காணோம்.. கம்ப்ளையன்ட் செய்த டைரக்டர்.. இதெல்லாம் ரொம்ப தப்புங்க..

மக்காமிஷி

இதற்கடுத்து அவர், ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் பிரதர் படத்திலும் ஒரு பாடலை எழுதியுள்ளார். மக்காமிஷி என்ற இந்தப் பாடலின் வரிகளும், நடனமும் பலரையும் கவர்ந்தது. வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டிருந்த இந்த பாடல் வெளியான நாள் முதல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.

இதற்கிடையில், காத்து மேல காத்தடிக்குது எனும் ஆல்பம் பாடலையும் அவர் வெளியிட்டார். இந்தப் பாடல், பெரியவர்கள் மட்டுமின்றி, சிறு சிறு குழந்தைகளையும் கவர்ந்தது. இந்தப் பாட்டில் வரும் வரி, குரல், இசை என அனைத்தும் புதிதாக இருந்ததால், குழந்தைகள் அதை எளிதில் புரிந்து கொண்டு மீண்டும் மீண்டும் பாடலை கேட்டு அந்தப் பாட்டை ஹிட்டாக்கினர்.

இயக்குநர் புகார்

இப்படி, ஆல்பம் மற்றும் திரைப்படப் பாடல்களில் கலக்கி வரும் பால் டப்பா குறித்து முக்கியமான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் பிரதர் பட இயக்குநர் ராஜேஷ். பிரதர் படத்தில் பால் டப்பா மக்காமிஷி எனும் பாடலை எழுதியுள்ளார். அந்தப் பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. அந்த சமயத்தில் தான் பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக நான் பால் டப்பாவை அழைத்தேன். 

ஆனால், அவர் வர மறுத்துவிட்டார். என்னுடைய பாடல் தான் ஏற்கனவே வெளியாகி ஹிட்டாகிவிட்டது. பின் நான் ஏன் இசை வெளியீட்டு விழாவிற்கு வரவேண்டும் எனக் கேட்கிறார். மற்ற பாடல்கள் தான் இன்னும் வெளியாகவில்லை. அவர்களை அழைத்து விழாவை நடத்துங்கள் எனவும் கூறியுள்ளார். மேலும், இது இசை வெளியீட்டு விழா. அதனால், ஹாரிஸ் ஜெயராஜ் சார் வருகிறாரா எனக் கேட்டு விட்டு தான் நிகழ்ச்சிக்கு வரவில்லை எனக் கூறிவிட்டார். 

பின், இங்கு பல பாடலாசிரியர்களும், சினிமாவிலுள்ள பெரும் புள்ளிகளும் வருவார்கள் வந்து அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று விட்டு பின் நிகழ்ச்சியிலிருந்து கிளம்பி விடு எனக் கூறினேன். அதற்கு பால் டப்பாவோ, அவர்களது நம்பர்களை அனுப்பி விடுங்கள். நான் மெசேஜ் செய்கிறேன் எனக் கூறிவிட்டார். பின் அவரை பலமுறை கஷ்டப்பட்டு அழைத்தேன். அதனால் தான் நிகழ்ச்சிக்கு வந்தார். 

அப்போது கூட போனில் பேசியவாறு, அனைவரிடமும் பேசி வாழ்த்து பெற்றுவிட்டு கிளம்பி விட்டார் என பிரதர் படத்தின் இயக்குநர் ராஜேஷ் பேசியுள்ளார்.

இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர் ஒருவர் இப்படி பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பிரதர் பின்னணி

பிரதர் படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், நட்டி, பூமிகா, சரண்யா, விடிவி கணேஷ், சீதா, ராவ் ரமேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.

குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள பிரதர் திரைப்படம் அக்காவுக்கும், தம்பிக்குமான அழகான கதையாக வந்துள்ளது. பூமிகா, ஜெயம்ரவிக்கு அக்காவாக நடித்துள்ளார் எனக் கூறினார்.

இந்தப் படத்தைப் பற்றி நடிகர் ஜெயம்ரவி பேசுகையில், இயக்குநரிடம் காமெடி படம் இல்லாமல் எனக்கு குடும்ப படமாக வேண்டும் எனக் கேட்டிருந்தேன், அப்போது தான் அவர் இந்தக் கதையை கூறினார். அவர் இதுவரை காமெடி படங்கள் எடுத்து வந்ததினால் அவர் படங்களில் எமோஷனல் விஷயங்களும் இருக்கும் என்பதை இந்தப் படம் மூலம் கூறியுள்ளார் என்றார்.

பிரதர் படத்தின் இயக்குநர் ராஜேஷ், இதற்கு முன், சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.