நான் இப்படித் தான் சாகணும்.. இதுதான் என் கடைசி ஆசை.. வைரலான சூப்பர் ஸ்டார் பேச்சு
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் தன் மரணம் எப்படி நிகழ வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படையாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சுவிட்சர்லாந்தில் நடந்த லொகார்னோ திரைப்பட விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இவர் இந்த விருதைப் பெரும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
பின் விருதைப் பெற்ற அவர், தன்னை விருதுக்கு தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது பேச்சைத் தொடங்கினார். இந்நிலையில், நடிகர் ஷாருக்கானிடம் நீங்கள் எப்போதும் நடித்துக் கொண்டே இருக்க விரும்புகிறீர்களா என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதுதான் என் கடைசி ஆசை
அதற்கு பதிலளித்த ஷாருக் கான், ஆம், நான் மரணிக்கும் நாள் வரை நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். எனக்கு யாராவது ஆக்ஷன் சொல்ல வேண்டும். அப்போது நான் இறப்பது போல் நடிகக் வேண்டும். ஆனால், ஆக்ஷன் சொன்னவர் கட் சொல்லும்போது நான் மீண்டும் எழுந்திருக்கக் கூடாது. நான் அப்படியே இறந்து போயிருக்க வேண்டும். இதுதான் எனது வாழ்நாள் கனவு எனக் கூறி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்.
நான் தீவிர நடிகன் அல்ல
நான் ஒற்றை உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் ஒன்றும் தீவிரமான நடிகர் கிடையாது. நான் நடிப்பது தொடர்பான சில அற்புதமான விஷயங்களை மக்களுக்கு தெரியப்படுத்தினேன், நான் என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களை நடிப்பின் மூலம் கொண்டாடி வருகிறேன். என்னைப் பொறுத்தவரை, மக்களை எந்த வகையிலும் என்னால் சந்தோஷமடையச் செய்ய முடியும். நான் எனது சந்தோஷத்தையும் பிறரிடம் பகிர்ந்து கொள்கிறேன். என்னால் முடிந்த வரை அன்பைக் கொடுக்கிறேன்.
கலையில் வித்யாசம் இல்லை
இங்கு கலை, ஓவியம், பாடல், இசை என மக்களை மகிழ்விக்கு் அனைத்துமே எனக்கு ஒன்றுதான். இந்த கலைகளுக்குள் எந்தவொரு வித்தியாசமும் நான் கண்டது இல்லை. உதாரணமாகச் சொன்னால், 2 நிமிடத்தில் உங்களை என்னால் மகிழ்விக்க முடிந்தால் அது அன்பு. அதுவே நான் ஒருவரை 50 வருடங்களாக தொடர்ந்து அன்பு செய்ய சந்தோஷப்படுத்த முடிந்தால் அது ஒரு பொழுதுபோக்கு. அவ்வளவு தான்.
மகிழ்ச்சியாக இருக்கிறேன்
என்னால் ஒரே விஷயத்தை வெவ்வேறு பெயர்களாலும் செயல்களாலும் பார்க்க முடிகிறது. இதில் பெறும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதில் நான் மிகவும் சந்தோஷமடைகிறேன். மக்களை ஒரே உணர்வுடன் மகிழ்ச்சி அடைய என்னால் முயன்றதை தற்போது வரை செய்கிறேன் எனப் பேசி அங்குள்ள அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளார்.
ஓய்வு அறிவிப்பு
முன்னதாக அபுதாபியில் நடந்த ஐஃபா விருது வழங்கும் நிகழ்ச்சியில், கரண் ஜோஹர், ஷாருக்கானிடம் நீங்கள் ஏன் சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவது குறித்த முடிவை எடுக்கவில்லை எனக் கிண்டலாகக் கேட்டார். அதற்கு பதிலளித்த ஷாருக் கான், நானும் தோனியும் வித்தியாசமான லெஜண்டுகள். நாங்கள் ஓய்வு முடிவை எடுத்த பிறகும் 10 ஐபிஎல் மேட்சுகள் விளையாடுவோம் என நச்சென்று பதிலளித்தார். இதைக் கேட்ட பலரும் ஷாருக்கானின் பதிலுக்கு விசிலடித்து உற்சாகமூட்டியது குறிப்பிடத் தக்கது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்