உலகின் மிக அழகான நடிகர்கள் பட்டியலில் பாலிவுட்டின் கிங் ஷாருக்கானுக்கு பத்தாவது இடம்.. முதல் இடம் யாருக்கு பாருங்க
ஷாருக்கான் திரையுலகில் தனது நடிப்பால் மட்டுமின்றி தனது அழகாலும் கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்துள்ளார். இவருக்கு பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

உலகின் மிக அழகான நடிகர்கள் குறித்து பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் தயாரித்த பட்டியல் சமீபத்தில் வெளிவந்துள்ளது. இதன்படி பாலிவுட்டின் கிங் ஷாருக்கான் பத்தாவது இடத்தில் உள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய நடிகராக அறியப்பட்டவர் ஷாருக். அந்த பட்டியலில் வேறு யார் இருக்கிறார்கள் என்று பார்ப்போம்?
மிக அழகான ஆண் நடிகர்
ஷாருக்கான் திரையுலகில் தனது நடிப்பால் மட்டுமின்றி தனது அழகாலும் கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்துள்ளார். இவருக்கு பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கடந்த வருடம் இவர் நடித்த இரண்டு படங்களும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்தன என்றால் அவர் மேல் ரசிகர்கள் மத்தியில் உள்ள கிரேஸை புரிந்து கொள்ளலாம்.
ஆனால் சமீபத்தில் உலகின் மிக அழகான நடிகர்கள் பட்டியலில் ஷாருக் இடம்பிடித்திருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜூலியன் டி சில்வா அறிவியல் ஆய்வு மூலம் மிகவும் அழகான நடிகர்களின் பட்டியலை உருவாக்கினார். இதில், ஷாருக்கான் 86.76 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாவது இடத்தில் உள்ளார்.