Aishwarya Rai: கண்ணால் பார்த்து கண்ஃபார்ம் செய்த ரசிகர்கள்... லிஸ்டில் இருந்து தப்பித்த பிரபல நடிகை-bollywood actress aishwarya rai confirms that there is no divorce - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Aishwarya Rai: கண்ணால் பார்த்து கண்ஃபார்ம் செய்த ரசிகர்கள்... லிஸ்டில் இருந்து தப்பித்த பிரபல நடிகை

Aishwarya Rai: கண்ணால் பார்த்து கண்ஃபார்ம் செய்த ரசிகர்கள்... லிஸ்டில் இருந்து தப்பித்த பிரபல நடிகை

Malavica Natarajan HT Tamil
Sep 25, 2024 03:08 PM IST

Aishwarya Rai: நடிகை ஐய்வர்யா ராய் தனது காதல் கணவர் அபிஷேக் பச்சனை பிரிய உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், தற்போது. அவை வெறும் வதந்திகள் தான் என்பதை உறுதி செய்துள்ளனர் ரசிகள்கள்.

Aishwarya Rai: கண்ணால் பார்த்து கண்ஃபார்ம் செய்த ரசிகர்கள்... லிஸ்டில் இருந்து தப்பித்த பிரபல நடிகை
Aishwarya Rai: கண்ணால் பார்த்து கண்ஃபார்ம் செய்த ரசிகர்கள்... லிஸ்டில் இருந்து தப்பித்த பிரபல நடிகை

திருமணம்- வதந்தி

இதைத் தொடர்ந்து, அவர் தமிழ் மொழியைக் காட்டிலும் இந்தியில் அதிக படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். அப்போது, ஹிந்தி சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனை காதவித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னும் திரைப்படங்களில் நடித்துவரும் ஐஸ்வர்யா ராய், இன்றளவும் தனக்கான மார்க்கெட்டை திரைத்துறையில் தக்க வைத்துள்ளார் என்பதே உண்மை.இவ்வளவு புகழ் இருந்தால் கூடவே, அவரை சுற்றும் வதந்திகளும் அதிகமாகத் தானே இருக்கும். அந்த வகையில், நடிகை ஐஸ்வர்யா ராயை சுற்று பல ஆண்டுகளாக வரும் வதந்தி தான் அவர் தனது காதல் கணவரை விவாகரத்து செய்யப் போகிறார் என்பது.

இதற்காக பல காரணங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அவரை தனது திருமண மோதிரத்தை அணியவில்லை, அவரது மாமியாரான ஜெயா பச்சன் ஐஸ்வர்யா ராயை அடக்கி வைத்துள்ளார் என ஏராளமானவற்றை கூறலாம். இப்போது, ரசிகர்களே அந்த முற்றுப் புள்ளிக்கு முடிவும் கட்டி உள்ளனர். எதற்காக இத்தனை வதந்திகள் பரவியது, இப்போது அது வதந்திதான் ஐஸ்வர்யா ராய் அவரது கணவரை பிரியவில்லை. அவர்கள் இருவருக்கும் எந்த சண்டையும் இல்லை என்பதை எப்படி கண்டுபிடித்தனர் என்பதை இந்த செய்தியில் காண்போம்.

காதல்- கல்யாணம்

பாலிவுட்டில் கலக்கி வந்த ஐஸ்வர்யா ராய் நடிகர் சல்மான் கானை காதலித்து வந்தார். ஆனால் இந்த காதல் முறிந்த நிலையில், அபிஷேக் பச்சனை காதலித்து வந்தார். பின் இரு வீட்டாரும் இவர்களது காதலுக்கு பச்சைக் கொடி காட்ட கடந்த 2007ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் இருவரும் இணைந்து குடும்ப உறவை நகர்த்திச் சென்று வருகின்றனர். ஆனால், சில மாதங்களாகவே, ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனும் தங்களது திருமண வாழ்க்கையிலிருந்து பிரிய உள்ளனர் என்ற தகவல் பரவி வந்த வண்ணமாகவே உள்ளது.

கடுப்பான அபிஷேக் பச்சன்

இதற்கிடையில், இந்த வதந்திகள் தொடர்பாக அபிஷேக் பச்சன் நேரடியாகவே கருத்து தெரிவித்துள்ளார். அதில், எனக்கும் ஐஸ்வர்யாவிற்கும் எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் குடும்ப வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டுள்ளது. பத்திரிகையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு தகுந்த மாதிரி கதை எழுதி வருகின்றனர் என காட்டமாக கூறியிருந்தார்.

ஐஸ்வர்யா ராயின் மோதிரம்

இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய் தனது திருமண மோதிரத்தை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது போடவில்லை. இதனால், ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சனுக்குள் நிச்சயம் ஏதோ பிரச்சனை உள்ளது என மீண்டும் பிரச்சனையை கிளப்ப ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், தனது மகளுடன் பாரிஸில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராய் தனது கையில் மீண்டும் திருமண மோதிரத்தை அணிந்துள்ளதால், அவர் அபிஷேக் பச்சனுடன் நல்ல உறவில் தான் இருக்கிறார். அவர்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் விவாகரத்தும் செய்யப்போவது இல்லை எனக்கூறி வதந்தியை பரப்பியவர்களே அதற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளனர்.

தற்போது சினிமா நட்சத்திரங்கள் பலரும் காதலித்து திருமணம் செய்துகொண்டு பின் விவாகரத்து செய்வதாக அறிவித்து வரும் நிலையில், ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் அந்த லிஸ்டில் இருந்து தப்பித்துள்ளதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

 

 

 

 

Whats_app_banner
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.