நோ மிங்கிள்.. இப்போ நான் ஒன்லி சிங்கிள் தான்.. 50 வயது நடிகை பிரேக்கப் செய்த நடிகர்!
பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் தான் இப்போது யாருடனும் ரிலேஷன்ஷிப்பில் இல்லை. சிங்கிளாகத் தான் உள்ளேன் எனக் கூறியுள்ளார்.

தயாரிப்பாளரும் நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர். பாலிவுட்டில் பெயர் சொல்லும் நடிகர்களில் ஒருவராக உள்ள இவர் 50 வயதைக் கடந்த நடிகை மலைக்கா அரோராவுடன் 6 வருடமாக ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் கசிந்த நிலையில், அதுகுறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் அர்ஜுன் கபூர்.
மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் ராஜ் தாக்கரேவின் தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், அர்ஜுன் கபூர், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் பேசிய அர்ஜுன் கபூர், "அபி சிங்கிள் ஹூன் மெயின், ரிலாக்ஸ்" எனக் கூறியுள்ளார், அதாவது அவர் இப்போது சிங்கிளாகத் தான் உள்ளார். யாருடனும் ரிலேஷன்ஷிப்பில் இல்லை. எனவே, கொஞ்சம் பொறுமையாக இருங்கள் எனக் கூறியுள்ளார்.
மலைக்கா அரோரா
பாலிவுட்டில் பேர் சொல்லும் அளவிற்கு பல படங்களில் நடித்திருந்தாலும், மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் தைய தையா பாடலுக்கு நடனமாடி இந்த அளவில் பிரபலமானவர் தான் மலைக்கா அரோரா. தற்போது 50 வயதைக் கடந்த அவர், நடிகர் அர்ஜுன் கபூருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதற்காக பல எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தார்.