‘சீரியல்னு சொன்னது ஒரு குத்தமா?’ வம்சியை வம்பிழுக்கும் ப்ளூ சட்டை மாறன்!
Varisu Vs Blue Sattai Maran: ‘நாட்ல நீங்க மட்டும்தான் உழைக்கறீங்களா? மத்தவங்களுக்கு காசு சும்மா வருதா?’

பொங்கல் ரிலீஸாக ஜனவரி 11 ம் தேதி வெளியான விஜய் நடித்த வாரிசு திரைப்படம், பொங்கல் ரேஸில் நல்ல வசூல் செய்து வருகிறது. அஜித் நடித்த துணிவு படத்துடன் போட்டி போட்டு பொங்கல் கொண்டாட்டத்தை ரூசிகரமாக்கி வரும் வாரிசு படம், சில கலவை விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
குறிப்பாக, படத்தின் நீளம் கிட்டத்தட்ட 3 மணி நேரத்தை நெருங்குவது, படத்தின் பெரிய மைனஸ் ஆக கூறப்படுகிறது. அதே போல, படத்தின் கதை , கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்ட, பார்த்த கதை தான். என்றாலும், விஜய்க்காக அதில் நிறைய ஸ்பெஷல் திணிப்புகளும் இல்லாமல் இல்லை.
வாரிசு படத்திற்கு என்னதான் விமர்சனம் வந்தாலும் அதன் வசூல் இன்று வரை குறையவில்லை. குறிப்பாக, விமர்சகர்களின் கடுமையான தாக்குதலுக்குப் பிறகும், வாரிசு திரைப்படம் இந்த அளவிற்கு வசூலை கொட்டும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.