“கானா என்னோட அடையாளம்.. அம்மாவுக்காகத்தான் பிக்பாஸ்.. காமெடி சும்மா சரவெடியா வெடிக்கும்” - யார் இந்த ‘டிங்கு’ ஜெஃப்ரி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  “கானா என்னோட அடையாளம்.. அம்மாவுக்காகத்தான் பிக்பாஸ்.. காமெடி சும்மா சரவெடியா வெடிக்கும்” - யார் இந்த ‘டிங்கு’ ஜெஃப்ரி

“கானா என்னோட அடையாளம்.. அம்மாவுக்காகத்தான் பிக்பாஸ்.. காமெடி சும்மா சரவெடியா வெடிக்கும்” - யார் இந்த ‘டிங்கு’ ஜெஃப்ரி

Kalyani Pandiyan S HT Tamil
Oct 06, 2024 09:35 PM IST

பிக்பாஸ் வீட்டிற்கு நுழைந்திருக்கும் கானா சிங்கர் ஜெஃப்ரி யார்.. அவரது பின்புலம் என்ன உள்ளிட்ட விபரங்களை பார்க்கலாம்.

“கானா என்னோட அடையாளம்.. அம்மாவுக்காகத்தான் பிக்பாஸ்.. காமெடி சும்மா சரவெடியா வெடிக்கும்” - யார் இந்த  ‘டிங்கு’ ஜெஃப்ரி
“கானா என்னோட அடையாளம்.. அம்மாவுக்காகத்தான் பிக்பாஸ்.. காமெடி சும்மா சரவெடியா வெடிக்கும்” - யார் இந்த ‘டிங்கு’ ஜெஃப்ரி

பிக்பாஸ் 8

பிக் பாஸ் 8 ஆவது சீசன் தொடங்க போகிறது என சொன்னதில் இருந்து மக்கள் எப்போது தொடங்கும் என்று பார்க்க ஆவலாக இருக்கிறார்கள். முந்தைய சீசன்களைப் போல் இல்லாமல், பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், கானா சிங்கர் ஜெஃப்ரி போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார்.

யார் இந்த ஜெஃப்ரி

பெயர் ஜெஃப்ரி என்றாலும், இவரை பெரும்பான்மையானோருக்கு டிங்கு என்றுதான் பரிட்சயம். சிறுவயதிலேயே பாட்டு பாடுவதில் ஆர்வம் கொண்ட இவர், லாஜிஸ்டிக்ஸில் வேலை பார்த்திருக்கிறார். அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த போதே, கானா பாடல்களை பாடி வந்தவர், பின்னர் அதன் மீது ஆர்வம் அதிகமாக, அதையே தொழிலாக மாற்றிக்கொண்டார்.

 

அவர் பேசும் போது, “தற்போது முழுமூச்சாக கானாவை தனது கனவாக எடுத்து தொழில்முறையாக மாற்றி இருக்கிறேன். இசைக்காக நான் யாரிடமும் பிரத்யேக வகுப்புக்கு செல்ல வில்லை. யாரும் எனக்கு சொல்லியும் தரவில்லை.

ஏன் உள்ளே வந்தேன்

முதற்கட்டமாக மெலடி பாடல்களை பாடிதான் எனது இசை பயணத்தை தொடங்கினேன். எனக்கு சொல்லிக் கொடுத்தது எல்லாமே என்னுடைய அம்மாதான் தான். என்னுடைய பாடலில் திருத்தங்கள் செய்வதும் அவர்தான். நன்றாக பாடினால் பாராட்டுவார். சிறுது நாட்கள் பாடல்கள் பாடுவதை நிறுத்தி விட்டு, லாஜிஸ்டிக்கில் வேலை பார்த்தேன்.

கானா சிங்கர் ஜெஃப்ரி
கானா சிங்கர் ஜெஃப்ரி

அவ்வப்போது கிடைக்கக்கூடிய நேரத்தில், சின்ன சின்னதாக நண்பர்களோடு சேர்ந்து கானா பாடல்களை பாடினேன். ஒரு கட்டத்தில் அதில் எனக்கு அதிகப்படியாக ஆர்வம் வந்துவிட்டது. தற்போது முழுமையாகவே கானா தொழிலாக மாற்றிவிட்டேன்.” என்றார்.

மேலும் பேசிய அவர், “எல்லோருக்கும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு ஒவ்வொரு காரணம் இருக்கிறது. எனக்கும் ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவென்றால், என்னுடைய வீட்டின் வறுமை நிலைமை மாற வேண்டும். என்னுடைய அக்காவுக்கு திருமணம் ஆகி சென்று விட்டார்.

இப்போது நானும், அம்மாவும்தான். நான்தான் அவரை பார்த்துக் கொள்ள வேண்டும். என்னை சுற்றி யாரும் சோகமாக இருப்பது எனக்கு பிடிக்காது அதனால் முடிந்த அளவு காமெடிகளை அடுக்கி நான் மற்றவர்களை சிரிக்க வைப்பேன்.” என்றார்.

பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவை இன்ஸ்பிரேஷனாக கொண்ட ஜெஃப்ரி, கால்பந்து விளையாடுவதிலும் வல்லவர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.