“போயிட்டு வா தங்கபுள்ள”.. 24 மணி நேர எலிமினேஷன்.. சேர்த்து குத்திய போட்டியாளர்கள்; - முதல் ஆளாக வெளியேறிய சாச்சனா
பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக மகாராஜா புகழ் சாச்சனா வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து சாச்சனா 24 மணி நேர எலிமினேஷன் விதிமுறையின் படி வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
பூதாகரமாக வெடித்த பிரச்சினை
ஆண்கள் Vs பெண்கள்தான் என்பதுதான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடிப்படை நாதம் என்பதை பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த உடனேயே நெற்றிப்பொட்டில் அடித்தவாறு சொல்லிவிட்டார். அதை வைத்தே ஆட்டத்தையும் ஆரம்பித்த அவர், வீட்டின் நடுவில் இருக்கும் கோட்டை சுட்டிக்காட்டி, வீடு இரண்டாக பிரிந்திருப்பதை போட்டியாளர்களை கவனிக்க வைத்தார்.
தொடர்ந்து, யாருக்கு எந்தப்பக்கம் வேண்டும் போட்டியாளர்களையே கலந்து யோசித்து முடிவெடுக்கச் சொல்ல, முட்டி மோதிய போட்டியாளர்கள் முடிவெடுக்க முடியாமல் தவித்தனர். கொஞ்சம் நேரம் பார்த்த பிக்பாஸ் என்ன எல்லாரும் வெளியே படுக்கிறீர்களா என்று பிக்பாஸ் நெருக்கடி கொடுக்க, இறங்கி வந்த ஆண்கள் அணி நாங்கள் அதிக வசதிகள் கொண்ட பகுதியை உங்களுக்காக விட்டுத்தருகிறோம்.
ஆனால் ஒரு கண்டிஷன். நாங்க சொல்ற ஒரு வாரத்துல ஆண்கள் யாரையும் நீங்க நாமினேட் பண்ணக்கூடாது என்று டீல் பேசினர். சொகுசுக்கு ஆடைப்பட்ட பெண்கள் ஓகே என்று கூறினர். ஆனால் ஜாக்குலினும், தர்ஷாவும் இதற்கு ஒத்துக்கொள்ள முடியாது என்று கூறினர். இந்த பிரச்சினை பூதாகரமாக வெடித்து கொண்டிருக்கும் நிலையில், 24 மணி எலிமினேஷன் விதிப்படி, சாச்சனா முதல் நபராக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமான மஹாராஜா பெரும் வெற்றி பெற்றது. நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான இந்தப் படம் அதிக பார்வையாளர்களைக் கடந்த படம் என அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், இந்தப் படம் பல விருது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பலதரப்படட் மக்களை ஈர்த்தது.. பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட தனது மகளுக்காக போராடும் தந்தையின் கதைதான் மஹாராஜா.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மஹாராஜாவாகவும், சச்சனா அவரது மகளாகவும் நடித்திருப்பார். சச்சனா, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணாகவும், அதிலிருந்து மீண்டு வந்து பேசும் காட்சிகளிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் இடம்பிடித்தார்.
குழந்தை நட்சத்திரம்
இந்நிலையில், சச்சனாவிற்கு மஹாராஜா தான் முதல் படம் என்றும், அவர் தன் முதல் படத்திலேயே அவரது திறமையை நிலைநாட்டிவிட்டார் எனவும் பலரும் கூறி வந்தனர். ஆனால், சச்சனா 6 மாத குழந்தையாக இருந்தோபோதே நடிக்க வந்துவிட்டாராம். இவர் தமிழ் மக்களால் அதிகம் விரும்பப்பட்ட சீரியலான மெட்டிஒலியில் தான் முதலில் நடித்துள்ளாராம். இந்த சீரியலில் நடிக்க வரும் போது அவருக்கு வயது 6 மாதம் தானாம்.
பின் குழந்தை நட்சத்திரமாகவே சில சீரியல்களில் நடித்து வந்தவர், கண்ணான கண்ணே சீரியலில் தான் அனைவருக்கும் பரிச்சையமாகி உள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் சச்சனா நடிக்கும் போது 9ம் வகுப்பு படித்து வந்தாராம். பின், செங்கலம் என பெயரிடப்பட்ட வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்திருக்கிறாராம்.
சினிமா எண்ட்ரி
ஆனால், இவர் சினிமாவில் முதல்முதலாக தோன்றியது நடிகர் கௌதம் கார்த்திக்கின் 1947 என்ற திரைப்படத்தில் தான். ஆனால், இந்தப்படம் அதிகம் மக்களிடம் ரீச் ஆகவில்லை. இதற்கு அடுத்ததாகத் தான் விஜய் சேதுபதியுடன் அவரது மகளாக மஹாராஜா படத்தில் சச்சனா நடித்தார். ஆனால், இதுதான் இவரது முதல் படம் என அனைவரும் நினைத்துள்ளனர்.
மறுத்த விஜய் சேதுபதி
இந்தப் படத்தின் ஆடிஷனில் சச்சனா கலந்து கொண்டபோது, விஜய் சேதுபதி, சச்சனாவை மறுத்துவிட்டாராம். பார்ப்பதற்கு ஸ்கூல் பிள்ளை மாதிரி இருக்கிறார் என விஜய் சேதுபதி கூறினாராம். ஆனால், படத்தின் இயக்குநரான நித்திலன் தான் சச்சனா இந்த கதாப்பாத்திரத்திற்கு சரியாக இருப்பார் எனக் கூறி விஜய் சேதுபதியை வற்புறுத்தினாராம். பின், படம் எடுத்துக் கொண்டிருக்கும் போது, இயக்குநர் நித்திலனிடம் சச்சனாவை தேர்வு செய்ததற்கு பாராட்டினாராம். ஏனெனில், சச்சனா அந்த அளவிற்கு நடித்திருந்தாராம்.
தேடிவந்த வாய்ப்பு
படம் நடிக்கும் போது கல்லூரி படித்து வந்த சச்சனா, தற்போது அடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தால், அதிலும் தனது பெயரை நீருபிக்க காத்திருக்கிறாராம். திமிரான, அடாவடியான், அப்பாவை அடக்கும் பெண்ணாக, பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்டு, அதிலிருந்து மீண்டு வரும் பெண்ணாக என சச்சனா தனது நடிப்பில் வெரைட்டியை காட்டி இருப்பார். இவர், சில நாட்களாக அதிக அளவில் சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து, பிக்பாஸ் சீசன் 8க்கு செல்ல இவருக்கு அழைப்பு விடப்பட்டது.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்