தேம்பி தேம்பி அழுத ஜெஃப்ரி.. நக்கல் செய்து சிரித்த போட்டியாளர்கள்.. கட்டி அணைத்து சமாதானம் செய்த விஷால்!
மனம் வருந்திய ஜெஃப்ரி சிரிக்காதீர்கள் உங்களால் ஓட்டு போட முடிந்தால் போடுங்கள் உங்களிடம் வந்து எனக்கு ஓட்டு போடுங்கள் என நான் கேட்கவில்லை உங்களுக்கு விருப்பமா இருந்தா போடுங்க இப்படி சிரிக்காதீர்கள் என சொல்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் தற்போது பத்தாவது நாள் வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த பத்தாவது நாளில் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இந்தப் ப்ரோமோ ஜெஃப்ரி-யை மையமாகக் கொண்டு வெளியாகியிருக்கிறது. இதில் ஜெஃப்ரி என்னால் முடிந்தவரை என் டீமை விட்டுக் கொடுக்காமல் நான் என்னுடைய பங்கை சரியாக செய்தேன் என சொல்கிறார். பின்னர் சத்யா ஜெஃப்ரி என சொல்ல ஜாக்குலின், ஆனந்தி விஜே விஷால் இன்னும் சில சிரிக்கிறார்கள்.
மனம் வருந்திய ஜெஃப்ரி
இதனால் மனம் வருந்திய ஜெஃப்ரி சிரிக்காதீர்கள் உங்களால் ஓட்டு போட முடிந்தால் போடுங்கள் உங்களிடம் வந்து எனக்கு ஓட்டு போடுங்கள் என நான் கேட்கவில்லை உங்களுக்கு விருப்பமா இருந்தா போடுங்க இப்படி சிரிக்காதீர்கள் என சொல்கிறார்.
பிக் பாஸ் சொன்ன ஒரு கேள்விக்காக நான் இங்கு கட்டுப்பட்டு நிற்கிறேன் நீங்கள் ஓட்டு போட்டால் தான் நான் உள்ளே ஓட்டு போடவில்லை என்றால் நான் வெளியே அப்படி எல்லாம் இல்லை என குரல் தழுதழுக்க ஜெஃப்ரி கூறுகிறார்.