நீங்க பண்றது கேவலமா இருக்கு.. குழாய் அடி சண்டை எதுக்கு? வந்த முதல் நாளே பெண்களை வறுத்தெடுத்த சாச்சனா?
Bigg Boss Tamil 8 : நேற்று வீட்டில் என்ட்ரி கொடுத்த சாச்சனா பெண்கள் அணியினரை அழைத்து அட்வைஸ் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் சாச்சனா ஒரு வீட்டில் 10 பெண்கள் சேர்ந்தால் அங்கு குழாய் அடி சண்டை தான் போடுவார்கள் என்பார்கள். அதை ஏன் இந்த வீட்டில் நீங்கள் செய்கிறீர்கள்.
விஜய் டிவியின் பிரதான நிகழ்ச்சியான பிக்பாஸ் 8 நான்கு தினங்களுக்கு முன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த முறை “ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” என நடிகர் விஜய் சேதுபதி தொகுத்த வழங்குகிறார். சில தினங்களுக்கு முன் இந்த சீசன் கோலாகலமாக தொடங்கியது. இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் 24 மணி நேரத்தில் சாச்சனா முதல் போட்டியாளராக எலிமினேட் செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று சாச்சனா பிக்பாஸ் வீட்டிற்குள் என்டரி கொடுத்தார். நேற்று வீட்டில் என்ட்ரி கொடுத்த சாச்சனா பெண்கள் அணியினரை அழைத்து அட்வைஸ் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் சாச்சனா ஒரு வீட்டில் 10 பெண்கள் சேர்ந்தால் அங்கு குழாய் அடி சண்டை தான் போடுவார்கள் என்பார்கள். அதை ஏன் இந்த வீட்டில் நீங்கள் செய்கிறீர்கள். உங்களுக்குள் பிரச்சனை என்ன இருந்தாலும் அதை இந்த ரூமில் முடித்துக் கொள்ளுங்கள் எதற்கு ஆண்கள் அணியில் இருந்து ஒருவர் வந்து அட்வைஸ் செய்யும் அளவிற்கு வைத்துக் கொள்கிறீர்கள்.
இது பார்க்க கேவலமா இருக்கு
ஜாக்குலின் அக்கா நீங்கள் ஏன் ஜெஃப்ரி வந்து அட்வைஸ் பண்ணும் அளவிற்கு அழுகிறீர்கள். வெளியில் பெண்களிடையே ஒற்றுமை இல்லை என்பது பச்சையாக தெரிகிறது. இது பார்க்க கேவலமா இருக்கு. ஏன் ஒரு போட்டியோ டாஸ்கோ வந்தால் தகுதியான ஆள் யார் என்று யோசிக்காமல் நான் போகிறேன் நீ போகிறேன் என சண்டை போடுகிறீர்கள். அந்த டாஸ்க்கோ போட்டிக்கோ யார் தகுதியானவர்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ அவர்களை அனுப்புங்கள். அதை விட்டுவிட்டு சண்டை போடுவது வீண்.
பெண்கள் ஒன்று சேர்ந்தால் சண்டைதான் நடக்கும்
உங்கள் தனித்துவமான விளையாட்டை காட்ட நீங்கள் விளையாடுவது சரி ஆனால் ஏன் உங்களுக்குள் ஒற்றுமை இல்லை. தயவுசெய்து எந்த பிரச்சனை இருந்தாலும் இந்த ரூம்குள்ளே முடித்துக் கொள்ளுங்கள். லிவிங் ஏரியாவிற்கு சென்று அழுவாதீர்கள். வெளியே என்ன தெரியுமா பேசுகிறார்கள் ஆண்கள் அவர்களிடம் ஒற்றுமை இருக்கிறது. பெண்கள் அணியில் ஒற்றுமை இல்லை என பேசுகிறார்கள். எனவே அந்த நிலையை நாம் மாற்ற வேண்டும். பெண்கள் ஒன்று சேர்ந்தால் எதையும் செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்ட வேண்டும். பெண்கள் ஒன்று சேர்ந்தால் சண்டைதான் நடக்கும் என்ற பழமொழியை நாம் மாற்றுவோம்.
முத்துக்குமரனை முழுமையாக நம்ப வேண்டாம்
அதேபோல முத்துக்குமரன் அவர்களுக்காகவும் கேம் விளையாட வில்லை, நமக்காகவும் கேம் விளையாட வில்லை அவர் அவருடைய கேமை தான் விளையாண்டார். ஆனால் அவர் அங்கிருந்து வரும்போது அவர்களுக்காக விளையாட தான் வந்தார். ஆனால் அவர் அதை செய்யவில்லை. அவர் அவருக்கான கேமை மட்டுமே விளையாடி இருக்கிறரார். அவரை நம்பி நாம் போட்டிகளில் பங்கேற்க விடலாம். ஆனால் முழுமையாக நம்ப வேண்டாம். அதேபோல இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது அதை நான் தனித்தனியாக உங்களிடம் வந்து சொல்கிறேன் என சாச்சனா கூறினார்.
டாபிக்ஸ்