BiggBoss Azeem: ‘நான் அஜித் வெறியன்…’ அசீம் பேட்டியை வைரலாக்கும் ஆர்மி!
Azeem comments on actor Ajith: ‘அஜித் சாருக்கு ஒரு ரசிகர் வட்டாரம் இருக்கும்; நான் அந்த வட்டாரத்தில் இல்லை, அதுக்கும் மேலே தான் நான். அஜித் சார் மீது வெறியன் நான்,’ - அசீம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தொடக்கம் முதலே, ஒவ்வொரு வாரத்தையும் பரபரப்பாக்கிக் கொண்டிருப்பவர் அசீம். அதிரடி நடவடிக்கையால் விமர்சனங்களை தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கும் அசீம், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் சம்பாதித்திருக்கிறார்.
ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் இடம் பெறுவதும், பின்னர் காப்பாற்றப்படுவதும் அசீமிற்கு வாடிக்கையாகிவிட்டது. இதற்கிடையில் எப்போதுமே பிக்பாஸ் செல்லும் போட்டியாளர்களுக்கு ஆர்மி ஆரம்பித்தது வழக்கம்.
அந்த வகையில் அசீமிற்கும் ஒரு ஆர்மி இருக்கிறது. அவர்கள் சமீபத்தில் பகிர்ந்திருக்கும் விசயம் தான். அவருக்கு ஆதரவு திரட்ட மேற்கொண்டிருக்கும் பிரம்மாஸ்திரம் என்று தெரிகிறது.
அசீன் இதற்கு முன்பு ,சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். அப்போது, அவர் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியை தான் இப்போது, அவரது ஆர்மி ஷேர் செய்து கொண்டிருக்கிறது.
நடிகர் அஜித் பற்றி, அசீம் சொன்ன கருத்துகள் தான் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. அந்த வீடியோவை தான் அசீம் ஆர்மி தற்போது ஷேர் செய்து கொண்டிருக்கிறது. அப்படி என்ன பேசியிருந்தார் அசீம்? இதோ அவர் பேசிய பேச்சு:
‘‘பைக், கார் ரேஸர் ஆக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. காரணம் நான் அஜித் சாருடைய மிகப்பெரிய ரசிகன் நான். அஜித் சார் படித்த பள்ளியில் தான் நானும் படித்தேன். சின்ன வயதிலிருந்தே அஜித் சார் என்றால் எனக்கு ஒரே கிரேஸ்.
அஜித் சாருக்கு ஒரு ரசிகர் வட்டாரம் இருக்கும்; நான் அந்த வட்டாரத்தில் இல்லை, அதுக்கும் மேலே தான் நான். அஜித் சார் மீது வெறியன் நான். அஜித் சார் தான் எனக்கு உயிர் மாதிரி.
அவரால் நான் மிகவும் கவரப்பட்டேன். நிஜ வாழ்க்கையிலும் அவரை நான் பின்தொடர விரும்புகிறேன்,’’
என்று அந்த பேட்டியில் அசீம் கூறியிருந்தார். அதை இப்போது மீண்டும் ட்ரெண்ட் ஆக்கும் அஜித் ரசிகர்கள், ‘நீ எங்க ஆளுனா’ என்று அஜித் ரசிகர்கள் அசீமை கூறுவதைப் போல மீம் போட்டு வருகின்றனர்.
டாபிக்ஸ்