தமிழ் செய்திகள்  /  Entertainment  /  As Sivakarthikeyan Celebrates 11yearsofprinceskism Check 10 Lesser Known Facts About Him

Sivakarthikeyan:போலீஸ் ஆசை; ப்ளாக் பெல்ட்;ஏகன் டெலிட் சீன் இதுஎஸ்.கே ஃபேக்ட்ஸ்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 03, 2023 12:40 PM IST

சினிமாவில் 10 வருடங்களை நிறைவு செய்திருக்கும் சிவகார்த்திகேயன் பற்றிய 10 சுவாரசிய தகவல்களை இங்கு பார்க்கலாம்

சிவகார்த்திகேயன் பற்றிய 10 தகவல்கள்!
சிவகார்த்திகேயன் பற்றிய 10 தகவல்கள்!

ட்ரெண்டிங் செய்திகள்

அவரிடம் இருந்த தொடர் சீரான முயற்சியும், துல்லியமான திட்டமிடலும், தனக்கு எது வராது என்று தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல காய்களை நகர்த்தும் திறமையும் இன்று அவரை விஜய் அஜித்திற்கு அடுத்தப்படியான இடத்தில் வைத்திருக்கிறது. 

அவரது இந்தப்பயணத்தில் வெற்றியோடு சேர்த்து, விமர்சனங்களும், சர்ச்சைகளும் இருந்தன. அவரது இந்தப்பயணம் தற்போது 10 ஆண்டுகளை கடந்து தற்போது 11 பயணத்தில அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த நிலையில் அவரை பற்றிய 10 சுவாரசிய தகவல்களை இங்கு பார்க்கலாம்.

1.சிவகார்த்திகேயனின் தந்தை தாஸ் போலீஸ் அதிகாரி. அதனால் அதன் வழியில் சிவகார்த்திகேயனுக்கும் போலீஸ் அதிகாரி ஆக வேண்டும் என்பதே லட்சியமாக இருந்தது. ஆனால், அப்பா இறந்த பிறகு அவரது லட்சியம் மாறியது.

2. இன்று பிரபல இயக்குநராக இருக்கும் அட்லீ இயக்கிய குறும்படமான ‘முகப்புத்தகம்’, ‘ஐடிண்டி’, ‘குறள் 786 மற்றும் 360 டிகிரி’ உள்ளிட்ட குறும்படங்களில் சிவா நடித்துள்ளார்.

3. அஜித் நடித்த ‘ஏகன்’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் படத்தின் நீளம் கருதி, அவரது பகுதி கட் செய்யப்பட்டது.

4. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ‘மெரினா’ படத்தில் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன் அந்தப்படத்திற்கு வாங்கிய சம்பளம் வெறும் 10,000 மட்டுமே.. தற்போது அவரது சம்பளம் 25 கோடிக்கும் மேல் என சொல்லப்படுகிறது.

5.சிவகார்த்திகேயனை மூலை, முடுக்கெங்கும் கொண்டு சேர்ந்த திரைப்படம் இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அந்தப்படத்தின் தயாரிப்பாளார் மதன் இவருக்கு AUDI Q7  காரை பரிசாக வழங்கினார்.

6.சிவகார்த்திகேயன் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி அவரது மாமா மகள் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு மகளும், கடந்த 2021 ஆம் ஆண்டும் மகனும் பிறந்தனர். இதில் பெண் குழந்தைக்கு ஆராதனா என்றும் ஆண் குழந்தைக்கு குகன் தாஸ் என்றும் பெயர் வைக்கப்பட்டது. அப்பாவின் நினைவாக மகனுக்கு அந்தப்பெயரை வைத்தார் சிவகார்த்திகேயன். சிவாவும், அவரது மகள் ஆராதனாவும் ‘கனா’ படத்தில் இடம் பெற்ற ‘வாயாடி பெத்த புள்ள’ பாடலை இணைந்து பாடியது குறிப்பிடத்தக்கது.

7. சிவகார்த்திகேயன் மிகவும் எமோஷனலான மனிதர். அதற்கு சான்றுதான் ‘ரெமோ’ பட நிகழ்ச்சியில் அவர் அழுதது; அது பற்றி பேட்டி ஒன்றில் குறிப்பிட்ட அவர் தான் இப்போது முன்னர் போல் அழுவதில்லை, காரணம் அதையும் ட்ரோல் செய்கிறார்கள் என்றார்.

8. சிவகார்த்திகேயன் கராத்தேவில் ‘ப்ளாக் பெல்ட்’ பெற்றவர். அதனை நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தனது தந்தையிடம் இருந்தே  பெற்றுக்கொண்டார்.

9. தயாரிப்பாளராகவும் அறிமுகமான ‘கனா’ படத்தில் தன்னுடைய நீண்ட கால நண்பரான அருண்ராஜ் காமராஜை இயக்குநராக அறிமுகப்படுத்தினார்.

10. இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் நெல்சன் என்ற கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு காரணம், விஜய் டிவியில் தான் தொகுப்பாளராக இருந்த போது, அவருடைய பல ஷோக்களை இயக்குநர் நெல்சனே டைரக்ட் செய்திருக்கிறார். 

பின்னாளில் அவர் இயக்கி சிம்பு இயக்கத்தில் உருவாகி ட்ராப் செய்யப்பட்ட ‘வேட்டை மன்னன்’ படத்தில் துணை இயக்குநராகவும் சிவா பணியாற்றினார். அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாகவே அந்தப்படத்தில் இடம் பெற்ற கதாபாத்திரத்திற்கு நெல்சன் என்று பெயர் வைக்கப்பட்டது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்