ரத்னாவிடம் அவமானப்பட்ட வெங்கடேஷ்.. பரணியிடம் சரண்டர் ஆன ஷண்முகம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!
ரத்னாவிடம் அவமானப்பட்ட வெங்கடேஷ். பரணியிடம் சரண்டர் ஆன ஷண்முகம். அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி நகையை சௌந்தரபாண்டியிடம் கொடுத்து விட்டு எனக்கு சண்முகம் தான் முக்கியம் என்று சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ஷண்முகம், பரணி பிரிந்துடுவாங்க
அதாவது, சௌந்தரபாண்டி என்ன அக்கா இவங்களுக்கு பிரச்சனை வரும்னு சொன்ன.. ஆனால் இப்போ இப்படி சொல்லிட்டு போறா என்று கேட்க பாண்டியம்மா கண்டிப்பா இவர்களுக்கு இடையே பிரச்சனை வரும். ஷண்முகம், பரணி பிரிந்துடுவாங்க, எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு என்று சொல்கிறாள்.
நீ ஸ்கூலுக்கு வர வேண்டாம்
அதை தொடர்ந்து வெங்கடேஷ் ஸ்கூலுக்கு கிளம்ப ரத்னா அவனுடன் வருவதாக சொல்ல வெங்கடேஷ் கல்யாணத்துக்கு முன்னாடி தான் குடும்ப கஷ்டத்துக்காக வேலைக்கு போன, இப்போ எதுக்கு போகணும் என்று சொல்கிறான்.
